This entry is part 9 of 17 in the series 5 ஜூன் 2022
எழுத்தாளர்களுக்கு விருதளித்து கெளரவிப்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் விளக்கு அமைப்புக்கும் இந்த மதுரை மாநகரத்துக்கும் விசித்திரமானதொரு உறவு உண்டு. அந்த உறவுக்கான விதை இருபத்தேழு இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது. இதே மதுரையில்தான் காமராசர் பல்கலைக்கழகமும் தமிழ்ச்சிறுபத்திரிகைகளும் இணைந்து ‘எண்பதுகளில் கலை இலக்கியம்’ என்னும் தலைப்பில் மூன்றுநாள் கருத்தரங்கமொன்றை நடத்தினார்கள். இதற்குப் பின்னணியாக பெங்களூர் நண்பர்கள் வட்டம் இருந்தது. தமிழவன், காவ்யா சண்முகசுந்தரம், ஜி.கே.ராமசாமி, ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன், மகாலிங்கம், முகம்மது அலி, நஞ்சுண்டன், கிருஷ்ணசாமி, கோ.ராஜாராம் ஆகியோரைக் […]
பெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற நாடகம் நிறைவடைய நீண்ட நேரமாகிவிட்டது. அதற்குப் பிறகு உண்டு, உரையாடிவிட்டு படுக்கைக்குச் செல்ல நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. […]
எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது சிறுகதைத்தொகுதி. இதையடுத்து நாபிக்கமலம் என்னும் தலைப்பில் ஒரு தொகுதியும் வந்துள்ளது. கலைக்கமுடியாத ஒப்பனைகள் தொடங்கி நாபிக்கமலம் வரைக்கும் அனைத்துத் தொகுதிகளுமே தமிழுக்குப் பெருமை சேர்ப்பவை. சங்க காலத்தில் குறிஞ்சித்திணையைப் பாடிய கபிலரைப்போல, பாலைத்திணையைப் […]
பாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக கவனத்தைப் பெற்ற கமலாதாஸ் தன் நாற்பதுகளையொட்டிய வயதில் தன்னுடைய தன்வரலாற்றை ஒரு தொடராக எழுதினார். அந்தத் தொடர் மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுபதுகளில் வெளிவந்து அவருடைய புகழ்வெளிச்சத்தை […]
1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த தொழிற்சங்க நண்பர்கள் எனக்காகவே புத்தகங்களை வாங்கிக் கொடுத்தார்கள். தம் வீட்டில் இருக்கும் புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்தார்கள். அவர்கள் நம்பிய கொள்கைகளுக்கு வெளியே உள்ள விஷயங்களிலும் நான் […]
சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் […]
எழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன். எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம் இருந்தது. நேரம் கிட்டும் போதெல்லாம் அந்த நூலகத்துக்குச் சென்றுவிடுவேன். அந்த நூலகருடன் எனக்கு நல்ல தொடர்பிருந்தது. அவருக்குத் தேவையான சின்னச்சின்ன வேலைகளைச் செய்து […]
சிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை மிக அபூர்வமாகவே காணமுடிகிறது. ஏராளமான அறிவுரைகளைச் சொல்வதற்கும் நீதி நெறிமுறைகளை எடுத்துச் சொல்வதற்கும் சிறுவர் பாடல்களை ஒரு வழிமுறையாக வகுத்துக்கொள்வது, சிறுவர் பாடல்களைத் தொடர்ந்து எழுதும் பல கவிஞர்களிடையே ஒரு பொதுப்போக்காக இருக்கிறது. காந்தி, நேரு, நேதாஜி போன்ற […]