நாகரத்தினம் கிருஷ்ணா படைப்புகள்
மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’
நாகரத்தினம் கிருஷ்ணா நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும் இரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. [Read More]
மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
நாகரத்தினம் கிருஷ்ணா அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது. தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது சிறுமியைப் பாலியல் [Read More]
இரணகளம் நாவலிலிருந்து….
நாகரத்தினம் கிருஷ்ணா (விரைவில் சந்தியா பதிப்பகம் வெளியிடவுள்ள எனது நாவலிலிருந்து…) மறுநாள் காலை, அறைக்கதவு இடிப்பதுபோல தட்டப்பட, விழித்துக்கொண்டேன். விடுதிப் பையனாக இருக்குமோ ? காலையில் என்ன செய்தியோட வந்திருக்கிறான் ! என்று அச்சத்துடன் எழுந்தேன். அறைக்கு வெளியே குழல்விளக்கின் வெளிச்சம், இருந்தும், நன்றாக விடிந்திருப்பதின் அடையாளமாக மூடியிருந்தச் [Read More]
மொழிவது சுகம் 25 நவம்பர் 2017 : அ. பொறுமைக் கல் -அதிக் ரஹ்மி ஆ. என் கடன் உயிரை வதைப்பதே !
அ. பொறுமைக் கல் –அதிக் ரஹ்மி ஆப்கானிய நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பிரெஞ்சுக் குடியுரிமைப்பெற்ற எழுத்தாளர் அதிக் ரஹ்மி (Atiq Rahimi ) என்பவரின் நாவல் Syngué Sabour. இப்பெயர் அரபுப் பெயராக இருக்கலாம். பிரெஞ்சு மொழியில் Pierre de Patience என்று நாவலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. எளிமையான கதை அல்லது உண்மை. பொய்களை உரைப்பது கடினமான வேலை. பிறரைக் கவர்ருவதற்கென நகாசு வேலைகள் வேண்டும். [Read More]
மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு
(France – Culture என்ற பிரெஞ்சு வானொலி நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நான் கு நாட்கள் ஒரு நாளைக்கு 50 நிமிடம் என்ற கணக்கில் ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டினை முன்னிட்டு சிறப்பு ஒலிபரப்பை ஏற்பாடு செய்திருந்த து, அதைக் கேட்டதின் எதிரொலி) ரஷ்யப்புரட்சிக்கு வயது நூறு ஆண்டுகள். புரட்சி என்ற சொல்லுக்கும் தள்ளாடும் வயது. இன்றைக்கு 1917ஆம் ஆண்டு புரட்சியையும், அதனை முன்னின்று [Read More]
மொழிவது சுகம் 23 ஜூலை 2017
அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும் எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர் அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது. « நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது » « தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று [Read More]
கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]
காலச்சுவடு வெளியீட்டில், தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி. மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய [Read More]
மொழிவது சுகம் 8ஜூலை 2017
அ. « Tout ce que j’ai le droit de faire est-il juste ? » உரிமையின் பேரால் செய்வதனைத்துமே நியாயமா ? அல்லது சரியா ?. இக்கேள்வி அண்மையில் பள்ளி இறுதி வகுப்பு பொது த் தேர்வு மாணவர்களில் இலக்கியத்தைச் சிறப்புப் பாடமாக தேர்வு செய்திருந்தவர்களுக்கு தத்துவப் பாடத்தில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளில் இரண்டாவது. இக்கேள்வி சட்டம் நமக்கு அனுமதிக்கிற உரிமைகள் பற்றி பேசுகிறது. அனுமதிக்காத [Read More]
பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 4 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி) – கவிதை, ,ஓவியம் உரைநடை
– நாகரத்தினம் கிருஷ்ணா சென்ற கட்டுரையில் பதினேழாம் நூற்றாண்டு கலை இலக்கியத்தின் தொடர்பாக நாடகத்துறையையும், நாடகவியலாளர்களையும் பார்த்தோம். இம் முறை எஞ்சியுள்ள பிறதுறைகளைக் காணலாம். பொதுவாக ஒரு நாட்டின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம், அரசியல், சமூக அமைப்பு இவை அனைத்தையும் முழுமையாக விளங்கிக்கொள்ள அக்காலகட்டத்தின் கலை இலக்கியச் சான்றுகளைக் காட்டிலும் வேறு [Read More]
மொழிவது சுகம் ஜூன் 24 2017
அ. அறிவுடையார் ஆவதறிவார் அறிதலுக்கு அவதானிப்பு மட்டுமே போதுமா ? Pour connaître, suffit-il de bien observer ? பிரான்சு நாட்டில் பள்ளி இறுதிவகுப்பு மாணவர்களுக்கு விருப்ப ப் பாடம் எதுவென்றாலும் தத்துவம் கட்டாயப் பாடம். இவ்வருடம் இலக்கியத்தை முதன்மைப்பாடமாக எடுத்திருந்த மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் சில தினங்களுக்கு முன்பு கேட்டிருந்த இரண்டுகேள்விகளில் ஒன்றையே மேலே [Read More]