Articles Posted by the Author:

 • வன்மம்

  வன்மம்

  ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’-அவ்வையார் ‘ஒரே வர்ணம்தான் அதுக்குன்னு நாம உட்டுட முடியாது’ மருமங்குடி கிராமத்து அண்ணனும் தம்பியும் பேசிக்கொண்டார்கள். பழைய அம்பாசிடர் காரின் டிக்கியில் தம்பியின் பெண். அவள் வெட்டுக்கொட்டகைக்குஏற்றப்படும் பன்றிக்குட்டியாய்கட்டிக்கிடக்கிறாள்.தம்பிபெற்ற ஒரே மகள். காவிரிக்கரை மீதுள்ள பெருநகரத் தனியார்க்கல்லூரியில் படித்துவந்தவள்.தம்பியின் எதிர்வீட்டுப்பையன் அவனும் அதே கல்லூரியில் படித்துவந்தான். இருவருக்கும் இடையே காதல், அந்தத் தீயை யார் மூட்டிவிட்டது.எதற்காக அதனைவளர்த்துவிட்டிருக்கிறார்கள்.அக்காதல் பயணம் நஞ்செனத் தொடர்ந்தது. ‘வாயில துணி வச்சி அடச்சி அவ […]


 • பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

  பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்

  எஸ் எல் பைரப்பா கன்னடத்தில்’பருவம்’ என்கிற நாவலைப்படைத்திருக்கிறார்.அதனைத்தமிழாக்கியிருக்கிறார் எழுத்தாளர் மொழிபெய்ர்ப்பாளர் பாவண்ணன்.போற்றுதலுக்குரிய ஒரு கனமானபடைப்பை மிகச்சிரத்தையோடு பாவண்ணன் தமிழுக்குக்கொண்டு வந்திருக்கிறார். படைப்பாளியைவிட கடினமாக உழைப்பவன் மொழிபெயர்ப்பாளன் .மிக்க கவனமும் ஆழ்ந்த பண்பாட்டு ஞானமும் பாவண்ணனின் இயல்பாய் அமைந்த குணங்கள்.எத்தனையோ அரிய இலக்கியங்களை அவர் கன்னடத்திலிருந்து தமிழுக்குக்கொண்டு தந்தவர். ஊரும் சேரியும்,கவர்மென்ட் பிராம்ணன்,பலிபீடம்,நாகமண்டலம், பசித்தவர்கள்,அக்னியும் மழையும்,ஓம்நமோ,பருவம் இன்னும் இப்படி எத்தனையோ. பைரப்பாவின் ‘பருவம்’ பாவண்ணனின் மொழிபெயர்ப்பில் சிலிர்த்துக்கொண்டு வெளிப்பட்டு வாசகனை ச்சிந்தனைச்சாகரத்தில் அமிழ்த்திப்பார்க்கிறது.அறிவினை விரிவு செய்,அகண்டமாக்கு,விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை, […]


 • அய்யிரூட்டம்மா

  அய்யிரூட்டம்மா

  ‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து மறையும் நேரம் என்றால் பெண்கள் ஓரிருவர், ஓரிருவர் அதற்காக என வந்து விட்டுப்போவார்கள். அன்று காலை […]


 • காய்த்த மரம்

  காய்த்த மரம்

  -எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர் விபாச. அவரது கட்டுரை நூலுக்கு விருது என்று அரசு அறிவிப்பு வந்திருக்கிறது. விபாச என் சஹிருதயர். அப்படித்தான் அவர் என்னை அழைப்பது வழக்கம். தனது இலக்கியப்படைப்புக்களை ஓய்வென்பது கொஞ்சமும்இல்லாமல் தொடர்ந்து வழங்கிக்கொண்டே இருந்தார். பெரும்பாலும் சிற்றிதழ்களில்தான் அவை கம்பீரமாக உலா வந்தன. . தஞ்சாவூரில் இருந்து வெளிவரும் இலக்கியச் […]


 • திவசம் எனும் தீர்வு

  திவசம் எனும் தீர்வு

  எஸ்ஸார்சி அம்மா தெவெசத்துக்கு நான் தானமா குடுத்தேன். அந்த ஒன்பது அஞ்சி வேட்டிய இடுப்புல சுத்திண்டு இதோ என் முன்னாடி அந்த பிராம்ணன் நிக்கறான். அவனோடவே நான் இந்த க்ஷணம் ஓடிப் போயிடறேன்னா என்னப்பா கூத்து இது? அவள் பதில் எதுவும் பேசவில்லை.அண்ணனும் அண்ணியும் திகைத்துப்போய் நின்றார்கள்.அவளை அந்த அண்ணன் ஈரோட்டுக்குப் பக்கத்தில் வரன் பார்த்து ,முறைப்படி நன்றாகதான் திருமணம் செய்து கொடுத்தான்.மாப்பிள்ளையும் ஒரு ஆடிட்டர்.அது இருக்கட்டும். ‘ தெவசம் நடத்திவைக்க வந்த அந்த புரோகிதர் போயாச்சா?’ […]


 • சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி

  சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி

  -எஸ்ஸார்சி சுனில் கில்நானி ஆங்கிலத்தில்l எழுதியது ‘The idea of India’ என்னும் அற்புதமான நூல். இதனை ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்கிற ஆகப்பொருத்தமான தலைப்போடு அழகு தமிழில் தந்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் அக்களூர் இரவி. பெருமைக்குரிய சென்னை சந்தியா பதிப்பகம் இதனை கொண்டு வந்திருக்கிறது. இப்படி அரிய நூல்களைஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டு செல்லும் மொழிபெயர்ப்பாளர்களின் அணிவரிசையில் அக்களூர் இரவி குறிப்பிடப்படவேண்டியவர்.மூல மொழியிலுள்ள நூலின் விஷயங்களை மிகக்கவனமாக உள்வாங்குதல், அதனைத் தெளிவுற மொழி பெயர்க்கப்பட வேண்டிய புதிய தளத்திற்குக் […]


 • கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்

  கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்

  -எஸ்ஸார்சி கவியரசர் கண்ணதாசனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட கலியுகன் கோபியின் கவிதை நூல் ‘மனச்சிற்பி’. இங்கே எளிமை,தெளிவு,செறிவு இவைகளின் எழுத்து வெளிப்பாடாக மலர்ந்துள்ளன கவிமலர்கள்.கவிஞருக்கு வாழ்த்து சொல்லும் கலை மாமணி சுரேந்திரன் கவிஞரின் பொதுவுடைமை எண்ணங்களை அழகாகவே சுட்டியுள்ளார். ‘குடிசைக்குள் கஞ்சி கொதிக்க வேண்டும் குழந்தைகள் பசியாறக் குடிக்க வேண்டும்’ இப்படி கவிதை சொல்லும் கலியுகன் நம் நெஞ்சைத்தொட்டுவிடுகிறார். பேராசிரியர் ஹரணி யின் அணிந்துரை எழுத்துத்தளத்தில் கவிஞரின் நம்பிக்கையை பறைசாற்றுகிறது. எளிமையே கவிதையின் மேன்மை என்பதை அற்புதமாகக்குறிப்பிடும் ஹரணி ஓர் […]


 • பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

  பாவண்ணனின் கவிதைகளில் ஒரு பயணம்.

  -எஸ்ஸார்சி பாவண்ணன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.அவைகளை ஒரு தொகுப்பாய் வாசிக்க அவரின் படைப்பு மனம் பற்றியஒரு புரிதல் கூடுதலாய்ச் சித்திக்கும்.ஆக அவரின் கவிதைகள் வேண்டும்.எத்தனை புத்தகக்காட்சிகள் தேடினாலும் பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு கிடைக்கவில்லை.ஒன்று கிடைத்தது ‘பச்சைக்கிளியே பறந்துவா’ அது அவர் சிறுவர்கட்கு எழுதிய கவிதைகள். என்னுடைய தேடுதல் நிறைவடையவில்லை அவரிடமே தொலைபேசியில் விசாரித்தேன்.’எனக்குத்தங்களின் கவிதைத்தொகுப்பு வேண்டும்’ என்றேன். ‘நகலெடுத்து அனுப்பட்டுமா’ என்றார்.நான் நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன் அவருக்குப் பதில் சொன்னேன்.2017 ஜூன் முதல் வாரம். பெங்களூரு மாநகரின் […]


 • வே.சபாநாயகம் என்னும் தமிழ் விருட்சம்

  ( மூத்த தமிழ் எழுத்தாளரும், தீபம் இலக்கிய குடும்பத்தைச் சார்ந்தவரும் குறு நாவல் பரிசுகளை கணையாழியில் மூன்றுமுறை தொடர்ந்து வென்றவரும், ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது -என்னும் புதினம் வழி இலக்கிய அரங்கில் தடம் பதித்தவரும்,ஞானரதத்தில் ஜெயகாந்தன், கணையாழி படைப்புக்களில் பல தொகுப்புக்கள் வெளியிட்டவரும்,திண்ணையில் தொடர்ந்து பல கதைகளை கட்டுரைகளை க்கொடுத்து நிறைவு செய்தவரும், அவர் வாழ்ந்த பகுதியில் எழுதத்தொடங்கிய எழுத்தாளர்களின் உறுதுணையும்,கவி பழமலயின் ஆசிரியரும், ஜெயகாந்தனின் இனிய நண்பரும் என் சகிருதயருமான வே.சபாநாயகம் 04.07.2016 அன்று விருத்தாசலம் […]


 • ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை

  ரகுவீரரின் ‘ஒரு கல் சிலையாகிறது’ ஒரு பார்வை

  ரகுவீரர் எழுதிய ‘ஒரு கல் சிலையாகிறது’ கட்டுரை நூல் படித்து முடித்தேன். ஆன்மீக இதழில் தொடராக வந்த 110 கட்டுரைகள் நூலாக மலர்ந்து தெய்வீக மணம் வீசுகிறது.ஆன்மீகப்புரட்சியாளர் ராமானுஜரை நினைவு க்கு கொண்டுவரும் ஒரு சமயப்பணியை ரகுவீர் நிகழ்த்திவருவது தெரிய வருகிற்து.அவரின் அயரா வைணவ உழைப்பு போற்றுதலுக்குரியது கூடவே தமிழ் மொழி மீது அவர் கொண்ட காதல் வாசகனை நெகிழ வைக்கிறது. அட்டைப்பட ஓவியம் அஜந்தா குகை அழகு ராமர் சிலை. நூலுக்கு வலு சேர்க்கிறது. நாராயணியமும் […]