ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -2 காட்சி 2 பாகம் -1 [ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்] தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++ நாடக உறுப்பினர் : [பெயர்கள் மாற்றப் பட்டுள்ளன] ஒத்தல்லோ : வெனிஸ் சாம்ராஜிய ராணுவ ஜெனரல் [கருந்தளபதி] [45 வயது] மோனிகா : செனட்டர் சிசாரோவின் மகள். ஒத்தல்லோவின் மனைவி [25 வயது] புருனோ : ஒத்தல்லோவின் இராணுவச் சேவகன் [30 வயது] காஸ்ஸியோ : ஒத்தல்லோவின் புதிய லெஃப்டினென்ட். [30 வயது] ஷைலக் : செல்வந்தச் சீமான் மகன் [வயது 25] சிசாரோ : மோனிகாவின் தந்தை. வெனிஸ் செனட்டர் [60 வயது] எமிலியோ : புருனோவின் மனைவி. மாண்டேனோ : சைப்பிரஸ் தீவின் கவர்னர். பயாங்கா : காஸ்ஸியோவின் கள்ளக் காதலி. மற்றும் டியூக் ஆஃப் வெனிஸ், சாம்ராஜ்ய படைவீரர், இத்தாலியப் பொதுமக்கள். நிகழ்ச்சிகள் நடப்பது இத்தாலிய வெனிஸ் நகரம், மத்தியதரைக் கடல் & சைப்பிரஸ் தீவு இடம் : சைப்பிரஸ் தீவில் ஒரு துறைமுகக் கரை ஓரம் ஒரு தெரு நேரம் : பகல் வேளை பங்கெடுப்போர் : சைப்பிரஸ் கவர்னர், மாண்டேனோ, மற்றும் இரண்டு படைவீர்கள்,காஸ்ஸியோ, மோனிகா, தோழியர், எமிலியோ, புருனோ, ஷைலக். [தளபதி ஒத்தல்லோ காவல் படை சூழ தூரத்தில் வருகிறான்.] [கூட வந்த அறிவிப்பாளன் பியூகிள் ஊதிக் கூறுகிறான்] அறிவிப்பாளி; சைப்பிரஸ்…