Articles Posted by the Author:

 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  விரிவு   நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க அந்தரத்தில் அலைகிறது காற்றாடி செங்குத்தாய்க் கீழிறங்குகிறது; சர்ரென்று மேலெழும்புகிறது வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது தென்றலின் வேகம் அதிகரிக்க தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம் அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில் சிக்கிக்கொண்டுவிடுகிறது. எத்தனை கவனமாக எடுத்தும் காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது. ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் தொடரும் காற்றாடியின் பெருமுயற்சி கையின் களைப்பை விரட்டியடிக்கிறது. காற்றாடிக்காக வானம் மேலே […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

      யார் நீ? ஓர் அதி அழகிய பசும் இலை அதைப் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே வதங்கிச் சுருங்கி நிறம் மங்கி இறந்துவிழுவதைப் போல் _ அத்தனை இனிமையான பாடல் அதைக் கேட்டு மனம் நெக்குருகிக்கொண்டிருக்கை யிலேயே அபஸ்வரமாக ஒலிக்கத் தொடங்குவதைப் போல் _ பட்டுப்போன்ற குட்டிப்பாப்பா மளமளவென்று வளர்ந்து பொறுக்கியாகி அலையத் தொடங்குவதுபோல் _ கட்டித் தொடுத்த மல்லிகைகள் கணத்தில் கொட்டும் தேள்கொடுக்குகளெனக் கூர்த்துக் கருத்துவிடு வதைப்பொல் _ சாலையோர நிழலின் கீழ் பாதுகாப்பாய் நடந்துகொண்டிருக்கும்போதே நேர்மேலே […]


 • என் அடையாள அட்டைகளைக் காணவில்லை

          ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)   இரண்டு மூன்று வீடுகள் இரண்டு மூன்று அலுவலகங்கள் இரண்டு மூன்று ஆட்டோக்கள் இரண்டு கிலோமீட்டர் பொடிநடை இரண்டு மூன்று கடைகள் இரண்டு மூன்று தெருத்திருப்பங்கள் இரண்டு மூன்று மணிநேரங்கள் இவற்றிலெங்கோ எதிலோ என் அடையாள அட்டைகள் பறிபோயிருந்தன. நான் இப்போது நானே நானா யாரோ தானா…. விடுதலையுணர்வும் ஏதிலி உணர்வும் பாதிப்பாதியாய்….. இன்னும் சில நாட்கள் அலையவேண்டும் இன்னும் சில வரிசைகளில் நகர வேண்டும் இன்னும் […]


 • உறக்கம் துரத்தும் கவிதை

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)     விழுங்கக் காத்திருக்கும் கடலாய் நெருங்கிக்கொண்டிருக்கிறது உறக்கம். யாரேனும் துரத்தினால் ஓடுவதுதானே இயல்பு _ அது மரத்தைச் சுற்றியோடிப்பாடிக்கொண்டே காதலியைத் துரத்தும் சினிமாக் காதலனாக இருந்தாலும்கூட… ஓடும் வேகத்தில் கால்தடுக்கி விழுந்துவிடலாகாது. உறக்கத்தில் மரத்துப்போய்விடும் சிறகுகளைக்கொண்டு எப்படிப் பறப்பது..? உறங்கும்போதெல்லாம் சொப்பனம் வரும் என்று உறுதியாகச் சொல்லமுடியாது…. எப்பொழுதும் வராது பீதிக்கனவு என்றும். தனக்குள்ளேயே என்னை வைத்திருக்கும் தூக்கத்திலிருந்து வெளியேறும் வழியறியா ஏக்கம் தாக்கித்தாக்கிச் சிதைவுறும் மனம் தன்னைக் கவ்வப் […]


 • கண்காட்சிப்புத்தகங்கள்

  கண்காட்சிப்புத்தகங்கள்

    ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)       புத்தகங்களை வாங்குகிறவர்கள் எல்லோருமே படிக்கிறார்களா…. முதலிலிருந்து கடைசிவரை படிப்பார்களா…….   முதல் இடை கடைப் பக்கங்களில் அங்குமிங்குமாய் சில பக்கங்கள் படிப்பவர்கள் _ மூடிய புத்தகம் மூடியேயிருக்கும்படி அலமாரியில் பத்திரப்படுத்திவிடுபவர்கள் _ எல்லோரும் வாசகர்கள் தானே என்றெண்ணி அமைதிகொள்ளுமோ புத்தகங்கள்….   சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் தேரனைய காரில் சாய்ந்து தன்னை கோடீஸ்வரனாகக் காண்போர், காண்பிப்போர் எங்கும் உண்டுதானே? இருள்நிழல் படர்ந்த ஒதுக்குப்புறத்திற்காகவே கோயிலுக்குச் செல்லும் காதலர்களைப்போல எந்தக் […]


 • அடியாழம்

  ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)   உண்மை சுடும் என்றார்கள்உண்மை மட்டுமா என்று உள் கேட்டதுஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா என்றார்கள்எதற்கு ஆக வேண்டும் என்று உள் கேட்டது.ஊரோடு ஒத்துவாழ் என்றார்கள்யாரோடுமா – அது எப்படி என்று உள் கேட்டது.காரும் தேரும் வேறு வேறு என்றார்கள்நான் சொன்னேனா ஒன்றேயென்றுஎன்று உள் கேட்டது.மௌனம் சம்மதம் என்றார்கள்உனக்கா எனக்கா என்று உள் கேட்டது.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றார்கள்.முற்பகல் செய்தா பிற்பகல் விளைகிறது என்று உள் கேட்டது.தர்க்கம் குதர்க்கம் என சொற்கள் […]


 • ’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  1.குடிபெயர்தல் வீடு ஆகுபெயரெனில் யாருக்கு?எனக்கா உனக்கா அவருக்கா இவருக்கா …கற்களாலானவை வீடுகள் என்றே கணக்கில் கொண்டால்உயிரற்றவைகளிடம் அன்புவைக்கும் அவஸ்தை மிச்சம்உயிரின் உயிர் எங்கு நிலைகொண்டிருக்கிறதுமனதிலா?ஒரு வீட்டிலும் என் மனதை விட்டுவைத்து வந்ததில்லை.என் வீடு நான் தான்என்றால் நானும் தானும் ஒன்றேயா ஒன்று போலா வெவ்வேறாபாராளப்பிறந்தவர்க்கெல்லாம் இருப்பதுஒரேயொரு பார் தானாஇன்றெனக்குக் கேட்பதுநேற்றுவரை இல்லாத இருமலாஇருந்தும் எனக்குக் கேட்காததா?வரளும் நெஞ்சங்களெல்லாம் இருமிக்கொண்டிருக்கின்றனவா?சரியாகியிருக்கும் சிலசவப்பெட்டிகளுக்குள்ளும்எரிந்த சாம்பலிலும்திருவாயற்றமொழியாகியிருக்கும் சில…எல்லோருக்கும் சமயங்களில் நன்றி சொல்லத் தோன்றுவது போலவேஇந்த வீட்டுக்கும் சொல்லத் தோன்றுகிறதுகண்ணீரேதும் திரளாதபோதும்.கொரோனா காலகட்டத்தை […]


 • ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  நல்ல கெட்டவரும் கெட்ட நல்லவரும் நாமும் இருமலையுச்சிகளில் இரும்புக்கம்பங்கள் ஆழ ஊன்றி இடைப்பிளவில் இன்னொருவனுடைய அன்புக்குரியவளின் நீண்டடர்ந்த கூந்தலிழைகளை இரண்டாகப் பிடித்திழுத்து கழுத்து முறியுமோ என்ற கவலையின்றி கட்டித்தொங்கவிட்டிருந்தவன் திரும்பத்திரும்ப அந்தப் பெண்ணிடம் தன்னைக் காதலிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்ததைக் காரணம் காட்டி அவனை கயவனிலிருந்து அற்புதக்காதலனாக்கிவிட்டபின் கைக்குக் கிடைத்த அவள் காதலனை நல்லவன் என்றே சொல்லிக்கொண்டிருந்தால் பின் வில்லனுக்கு எங்கே போவது? தோற்றதாலேயே ஒருவனைத் தூயவனாக்கித் தோள்மீது தூக்கிக்கொண்டாடுபவர்களுக்கு வெற்றியாளன் எப்போதுமே வெட்கங்கெட்டவன்; அக்கிரமக்காரன்; அராஜகவாதி. பாதிப்பாதியாய் இருந்தாலும் […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

  இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள் கொரோனா காலம் என்றில்லை எப்பொழுதுமே நல்லதல்ல கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம். விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும் உறுதுயரையும். பழகத்தான் வேண்டும். பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள் காலெட்டிப்போட்டு நம்மைப் பின் தொடராதிருக்க வழியதுவொன்றேயெனக் குழம்பித் தெளியும் கவி யழும் கண்ணீர்த்துளிகள் வழிந்து வழிந்து தம்மை வடிவமைத்துக் கொள்கின்றன இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகளாய். அந்தரத்தில் ஒவ்வொரு படியாய் தட்டுத்தடுமாறித் தடுக்கி விழுந்து தரையில் உள்ளங்கையழுந்தி நிமிர்ந்து எழுந்து போகும் கவி தன் வரிகளில் உறுதியான […]


 • ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

  குகைமனம் கதவுள்ள குகையெதுவும் கிடையாதென்றே நினைக்கிறேன். சில குகைகளுக்கு வாயில்போல் திறப்பு இருக்கும் உள்ளே சற்றே அகன்றிருக்கும் சில குகைகள் மலைகளில் சில கடலாழங்களில் சுற்றிலும் சூழ்ந்திருந்த நீர் உள்ளே வரா நதியடி பாறைப்பிளவுக் குகையொன்றில் பதுங்கியிருந்த சேங்கள்ளனை உடலெல்லாம் எண்ணெய் தடவி அவன் கையிலகப் படாமல் சிறைப்பிடித்த தன் பாட்டனாரின் பெருமையை இன்னும் அவ்வப்போது என் தாய் சொல்லக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சில குகைகளுக்குள் சூரியக்கதிர்கள் உள்நுழையும் சிலவற்றில் அனுமதி மறுக்கப்படும். உள் அப்பிய இருட்டில் அடுத்த […]