Articles Posted by the Author:

 • வெற்றுக் காகிதம் !

  வெற்றுக் காகிதம் !

      ஸ்ரீரங்கம் சௌரிராஜன்    வெற்றுக் காகிதம் மௌனமாக  இருப்பதாகவே தோன்றும்    ஆனால் அது மனிதனை எழுத்து வடிவத்தில் மகிழ்விக்கவோ துன்பம் தரவோ காத்திருக்கிறது    ஒரு வெற்றுக் காகிதம் வேலைக்கான உத்தரவாக மாறி ஓர் இளைஞனைத் துள்ளித் குதிக்க வைக்கும்   ஒன்று ஒருவனைச்  சிறையில் தள்ளும்   மற்றொன்று   ஓர் ஏழை நோயாளியைப் பதற வைக்கும்   நேற்று படித்த நல்ல கவிதை ஒன்றைத் தாங்கி இருந்ததும் வெற்றுக் காகிதமாக இருந்ததுதானே […]


 •  ஒரு கவிதை எழுத வேண்டும் !

   ஒரு கவிதை எழுத வேண்டும் !

      மனம்  சொல் முளைக்காத  பாழ்நிலமாய் என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறது   எங்கே என் சொற்கள்  என்ற கேள்வி பதில் கிடைக்காமல் தவிக்கிறது   ஒரு கவிதை எழுத வேண்டும் யோசித்துப் பார்க்கிறேன் என்னுள் சொற்கள் கூடுவதும் கலைவதுமாய்க் கணங்கள் நழுவுகின்றன   மனம் பழைய பக்கங்களைப் புரட்டுகையில்  எல்லாம் மங்கி மறைகின்றன   அறுவடைக்குப் பின்னான வயல் ஒன்று முட்கள் முளைத்த முகமென என் மனத்தை ஆக்ரமிக்கிறது   ஒரு நீண்ட […]


 • நிரம்பி வழிகிறது !

  நிரம்பி வழிகிறது !

  அவன் மனம் முழுவதும்  பணத்தாட்கள்  முளைத்துக் கிடக்கின்றன தன்னை  ஒரு கஜானாவாக எண்ணியெண்ணி அவன் மகிழ்கிறான் பணத்தேடலில் அவன் கோரமுகம் பரிதாபமாய்ச் சிரிக்கிறது தலை சீவி முயலும் போது கொம்புகள் தடுக்கின்றன கற்ற கல்வியோ அவனிடமிருந்து விலகியே நிற்கிறது  பிறர் உழைப்பின் பயன் அவனும் நிரம்பி வழிகிறது …


 • பக்கத்து வீட்டுப் பூனை !

  பக்கத்து வீட்டுப் பூனை !

        பக்கத்து வீட்டு வெள்ளை நிறக் கொழு கொழு பூனை நேற்று இரவில்கூட குழந்தைக் குரலில் ” ஆவு … ஆவு … “என அழுத்து அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் சொல்ல அம்மா விரல்கள் இல்லை அழுகையின் பின்னணியில் பசியா ? வருத்தமா ? தன் துணையை அழைக்கும் உத்தியா ? மர்மத்தில் மயங்கி நிற்கிறது உண்மை அழுகையில் முட்களின் வருடல்கள் தொடர்கின்றன அந்த ஒற்றைக் குரல் அடிக்கடி மௌனம் கிழிக்கிறது ! […]


 • காலம் மகிழ்கிறது !

  காலம் மகிழ்கிறது !

                              அந்த இடைவெளியின் இக்கரையிலும் அக்கரையிலும் ஆசைகள் குவியல் குவியலாய் … அந்த ஆசைகளின் சஞ்சாரம் மனவெளியில்  நிரந்தரமாகக் கால்பாவ இயலாமல் துவண்டு விழுகிறது ஆயிரமாயிரம் மனமாளிகைகள் கட்டப்படும் போதே இடிந்து விழுகின்றன ஒவ்வொரு மலரிலும் அவள் முகத்தைப் பொருத்திப் பார்த்து புளகாங்கிதம் அடைகிறான் அவன்  எல்லா பாடல்களிலும் சோகராகம் இழைவதைக் கேட்கிறாள் அவள்  —- அவர்கள் பாதையில் […]


 • திருநீலகண்டர்

  திருநீலகண்டர்

  அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது  துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட  விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.


 • ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

  ‘ கடைசிப் பறவையும் கடைசி இலையும் ‘ தொகுப்பை முன்வைத்து — சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள்

      சிறீ.நான்.மணிகண்டன் கவிதைகள் பெரும்பாலும் எளியவை. வாசிப்பு அனுபவத்தை மிகவும் ரசிக்கலாம். சிறப்பான சொல்லாட்சிக்குச் சொந்தக்காரர். இவர் கவிதை இயல்புகளில் முன் நிற்பது அழகான கட்டமைப்பாகும். இதற்கு புதிய சிந்தனைகள் துணைபுரிகின்றன. இந்த நூலில் 36 கவிதைகளும் 3 உரைநடைப் பகுதிகளும் உள்ளன.    ‘ வண்ணத்துப் பூச்சியின் பயணம் ‘ — ஒரு வண்ணத்துப் பூச்சி பறக்கிறது. அது முடிவில் சிலந்தி வலைக்குள் விழுந்துவிடுமோ என்று ஒரு சந்தேகம். இதுதான் கவிதைக்கரு. இந்த சாதாரண இயற்கைக் காட்சியை […]


 • ராசி. அழகப்பன் கவிதைகள் – ‘ கும்மிருட்டு ‘ தொகுப்பை முன் வைத்து …

              ராசி. அழகப்பன் திரைத்துறையில் இயக்குனர், பாடலாசிரியர், இலக்கியத்தில் கதை , கவிதை , கட்டுரைகள் எழுதுபவர். இத்தொகுப்பு இவரிடைய ஏழாவது கவிதைத்தொகுப்பு. ஒருவர் இருட்டை நேசிக்கிறார் என்றால் அவர் மனம் சற்று வித்தியாசமானதுதான். இதுவே கவிமனம் எனலாம். செல்லும் வழி இருட்டு செல்லும் மனம் இருட்டு சிந்தை அறிவிலும் தனி இருட்டு    — என்ற புதுமைப்பித்தன் வரிகளும் ராசி.அழகப்பனுக்குத் தூண்டுகோலாக இருக்கலாம். இத்தொகுப்பில் இருட்டு பற்றிய பல புதிய அழகான கருத்துக்கள் […]


 • தேடல் !

  தேடல் !

  கவிதை       என் தேடல் இப்போதும் தொடர்கிறது என்முன் நிற்கிறதா என்னைச் சூழ்ந்திருக்கிறதா அல்லது என்னுள் இருக்கிறதா என் மொழி தேடல் பயனென்று கனிகளெனப் பறித்து வந்தேன் சில கவிதைகளை … அவற்றுள் ஆழ்ந்த இனிப்பெனத் தங்கியது கொஞ்சம் தமிழ் இன்னும் தேடத் தேடப் பொத்திப் பொத்தி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் வைரங்களென புதுமையும் நயங்களும் படையெடுக்கும் மொழியின் இறுகிய மௌனம் மெல்ல மெல்ல உடைய கவிதை புன்னகை வழியத் தலை காட்டும் …


 • நிரந்தரமாக …

  நிரந்தரமாக …

         கொஞ்ச நேரம் நடந்த பிறகு தெரிந்தது அந்த வெளி அது யாருமற்ற சுடுமணல் பிரதேசம் தனிமையின் ஏராளமான கரங்கள் என்னைத் தழுவி மகிழ்ந்தன அங்கு பசுமைக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டிருந்தது எப்போதாவது காற்று வரும் நான் முற்றாக உறிஞ்சப்பட்டு வீசி எறியப்பட்டேன் காலம் என்னைக் கரைத்து முடித்தது இப்போது என் சுவடென மணல்பரப்பில் பாதாச்சுவடுகள் மட்டுமே அந்த வெட்டவெளி மட்டும் அப்படியே நிரந்தரமாக …        *****