புரட்சி

புரட்சி

முகுந்தன் பெங்களூரிலுள்ள அந்தக் கல்லூரியில், அந்தப் பிரிவில் சேர்ந்ததற்குக் காரணம் இருந்தது. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றால் நியூயார்க்கில் வேலை செய்யலாம். அந்தச் சுதந்திரச் சிலையைப் பார்த்தபடி ஒவ்வொரு பொழுதும் விடியலாம். அந்தக் கல்லூரியில் படித்த பலர் அங்கு வேலை செய்கிறார்கள்.…
சுகமான வலிகள்

சுகமான வலிகள்

76வது பிறந்தநாள் சிட்னியில் விடியும் என்று மனோ எதிர்பார்க்கவில்லை. வழக்கம்போல் தேக்கா வசிப்போர்சங்கக் கூட்டம் முடிந்ததும் சத்யா சொன்னார். ‘பயணச்சீட்டுக்கான காசு தந்தால் போதும். 10 நாட்கள் சிட்னி சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யமுடியும் என்று என் மகன் சொல்கிறார். என் மகன்…
விழிகளிலே வெள்ளோட்டம்

விழிகளிலே வெள்ளோட்டம்

17 ஆண்டுகால வகுப்பறை வாழ்க்கையின் கடைசி நாள். 30 ஏப்ரல்,1971.  முதுகலை. மாநிலக் கல்லூரி. சென்னை. பொறுப்பாசிரியர், ஜேபிஎஸ் என்கிற ஜே. பாலசுப்ரமணியம். அவர் சொன்னார் ‘நாளை முதல் விடுமுறை. ஆனாலும் மே 15வரை செய்முறை தேர்வுக்கு நீங்கள் தயாராக, சோதனைக்கூடம்…
<strong>ஜானி</strong>

ஜானி

‘மாப்பிள்ளைக்கு அமெரிக்காவில் வேலையாம். திருமணத்துக்குப்பின் மீராவும் அமெரிக்கா போய்விடுவாளாம்.’ என்று மற்றவர்கள் பேசும்போதும் சரி, தன் நெருங்கிய தோழிகள் ‘நீ கொடுத்துவச்சவடீ’ என்று சொல்லும்போதும் சரி, முன்னைவிட, தன் முகம் மிக அழகாக இருப்பதுபோல் உணர்ந்தாள் மீரா. ‘முகம் மட்டுமா இனி…
பயணமா? பாடமா?

பயணமா? பாடமா?

நாளை பாலி பயணத்திற்கு கயல்விழி  தயாராகிக் கொண்டிருக்கிறார். மகள் கலையரசி வெற்றிகரமாக உயர்நிலை   3ஐத் தொடர விருக்கிறார்.  மகன் காவியன் இரண்டு மாதங்களில்   தேசிய   சேவையில் சேரவேண்டும். விடுமுறை மாதம். டிசம்பர். இரண்டு மாதமாகவே கலை ‘பாலி,…
ஊருக்குப் போகவேண்டும்

ஊருக்குப் போகவேண்டும்

பிடுங்கி நடப்பட்ட செடி, நட்ட இடத்திலேயே பூத்து, காய்த்து, கனிந்து வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது. ஒரு மரத்தில் பிறந்து, சிறகு முளைத்த குருவி, எங்கெங்கோ பறந்து திரிந்தாலும், ‘இந்த  மரத்தில்தான் நான் சிறகுகள் பெற்றேன்’ என்று தேடி வருவதில்லை. ஆனால்  …
சன்மானம்

சன்மானம்

அது ஒரு மழை  மாதம்.  பல இடங்களில் வெள்ளமென்று 96.8 அறிவித்தது. அடுத்தநாள் செய்தித்தாளில் முதல் பக்கச் செய்தி ‘சாலையைக் கடக்கையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில்  முதியவர் மரணம்’. அரசு சும்மா  இருக்குமா? சுற்றுச்சூழல் ஆணையத்தை முடுக்கிவிட்டது. தளதளவென்று கிளைகளைப் பரப்பி …

முகவரி

30 ஆண்டுகளுக்கு முன் நான் சிங்கப்பூர் புறப்பட்டபோது அத்தா சொன்னார். ‘நல்லபடியாகப் போய்வா. அங்கே நிரந்தரமாகக்கூட இருக்கும்படி  ஆகலாம். ஆனால் இந்த மண்ணில் உனக்கென்று முகவரி எப்போதும் இருக்க வேண்டும்.’ செடி வைக்க குழி பறித்தபோது, புதையல் கிடைத்ததுபோல், சிங்கப்பூரில் இருக்கும்…

ஊரும் உறவும்

  தமிழ்வாணன் சிங்கப்பூர் வந்தபிறகுதான் அவனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அருண் என்று பெயர் வைத்தான். ஓராண்டாகிவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு கடைக்கோடிக் கிராமம் அவனின் சொந்த ஊர். ஒவ்வொரு ஞாயிறு காலையும் அம்மா செல்லத்தாயுடன் முகம்காட்டிப் பேசுவான். அருண் மடியில் இருப்பான்.…

வீடு

    ஒரு வேலைத்திறன் பயிற்சி வகுப்பில்தான் அலியைச் சந்தித்தேன். முழங்கால் வரையிலான ஜிப்பா தொளதொள கால்சட்டை அணிந்திருந்தார். பாகிஸ்தானியாக இருக்கலாம். எனக்குப் பக்கத்தில்தான் அமர்ந்தார். ‘நல்லாயிருக்கீங்களாண்ணே’ என்றபோது நெஞ்சில் ‘பசக்’ கென்று அப்பிக்கொண்டார். தமிழர்தான். வகுப்பு முழுக்க மென்மையாகப் பேசிக்கொண்டோம்.…