அதிசயங்கள்

1950 களில் பிறந்தவர்க்கெல்லாம் தெரியும். அது இந்தியாவில் காலணா அரையணா இருந்த காலம்.  காலணாவில் ‘பொத்தக்காசு காலணா’ என்று ஒன்று உண்டு. அறந்தாங்கி குட்டக்குளம் கரையில் இருக்கும் பெண்கள் துவக்கப் பள்ளியில்தான் நான் பத்தில் ஒருவனாகப் படித்தேன். அத்தா தினமும் காலணா…

அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும்…
ஊர் மாப்பிள்ளை

ஊர் மாப்பிள்ளை

தான் வேலை செய்யும் சமூக நல நிறுவனத்தில் பதவி உயர்வு கிடைத்தபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டுமாம். அதுவும் ஆலமரம்போல் விரிந்து பரந்த ஓர் ஊர்க் குடும்பத்தின் விழுதாகத்தான் இருக்க வேண்டுமாம். உறுதியாக இருந்தார் சாந்தினி. அவர் நினைத்தபடியே பதவி உயர்வு…

வயதாகிவிட்டது

கூடை முள்ளங்கியை முதுகில் ஏற்றிவந்து கடைக்குள் இறக்குவார் லோகதீபன் என்கிற தீபன். ‘ட்ராலி’ அவருக்குத் தேவையில்லாத ஒன்று.  கடைக்குள் ஒரு தனி அறையை அவரே உருவாக்கியிருக்கிறார். வெட்டுக்கத்தியால் கூடையைத் திறந்து, சரக்கைக் கொட்டிக் கவிழ்ப்பார். அழுகலோ, வெம்பலோ, வாடியதோ இருந்தால் உடன்…
ஓவியன்

ஓவியன்

         தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு சிலேட்டுக் குச்சியால் எம்ஜியார், சிவாஜி, தாமரைப்பூ, சூரியகாந்தி, யானை என்று வரைந்துகொண்டே இருப்பேன். என் சட்டைப் பையில் எப்போதும் சிலேட்டுக் குச்சிகள் இருக்கும். பள்ளிக்கூடத்தில் திருடிய சில சாக்பீஸ் துண்டுகளும் இருக்கும். ஒரு நாள்…

சாது மிரண்டால்

பாவாடை சட்டை அணிந்த சிறுமிகள் நடுவே அழகான பூக்கள் சிரிக்கும்  ‘கவுன்’ அணிந்திருப்பார் சாவித்திரி. நீண்ட முடியுடன் இருக்கும் சிறுமிகள் நடுவே ‘க்ராப்’  வெட்டியிருப்பார் . கோதுமை மாலை, மாங்காய் தோடு என்று பளிச்சென்று இருப்பார், சாவித்திரி என்ற அந்த 10…

ஊஞ்சல்

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ புதுக்கோட்டையில் தெற்கு 3ம் புதுக்குளமும் சந்திக்கும் இடத்தில் ஒரு பூங்கா இருந்தது. நான் சொல்வது 1960 களில். அங்கு 10 அடி நீள இரும்புச்சங்கிலியில் தொங்கும் தொட்டிப்பலகை பிரசித்தம். அதில் ஒருவர்தான் உட்கார்ந்துகொண்டோ நின்றுகொண்டோ ஆட…

முதியோர் இல்லம்

கதீஜா ஒரு வித்தியாசமான பெண். தொடக்கப்பள்ளி 6லேயே முதியவர்களை சொந்தங்களை விட நெருக்கமாய் நேசிக்கிறார். அவருடைய தமிழாசிரியர் எப்போதோ சொன்னார். ‘முதியவர்களை நேசியுங்கள். நீங்கள் முதியவர்களாகும்போது உலகமே உங்களை நேசிக்கும்.’  என்று. உடம்பு முழுவதும் பச்சைக் குத்திக் கொண்டதுபோல் அந்த வாசகம்…

முடிச்சுகள்

தாலிக்கு ஏன் மூன்று முடிச்சாம்? தத்துவார்த்த ரீதியாக எவ்வளவோ சொல்லப்பட்டாலும் அந்தப் பெரியவர் சொன்னதைக் கேட்டு சிரித்துக் கொண்டேன். ‘மூணு முடுச்சு போடலேனா அறுத்துக்கிட்டு ஓடீருவாங்கெ ஓடீருவாளுக தம்பி’. அருண் பவானி திருமணம் நடந்தபோது அது உண்மை என்றுதான் தோன்றியது. அந்த…

நியாயங்கள்

கல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு சிங்கப்பூர் செல்ல என் சிறகுகளைத் தயார்ப் படுத்திக் கொண்டிருந்தேன். கோலாலம்பூரிலிருந்து தாவூத் அழைத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அவனோடு தொடர்பில்லை. அறந்தாங்கியில் எட்டு ஆண்டுகள் ஒன்றாகப் படித்தோம். பிறகு நான் கல்லூரியில் என் படிப்பைத் தொடர்ந்தேன்.…