ஈழநாடு என்றதோர் ஆலமரம்: ஒரு வரலாற்றுப் பதிவுக்கான அழைப்பு

This entry is part 1 of 24 in the series 8 செப்டம்பர் 2013

  என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்) கே.சி.தங்கராஜா, கே.சி.சண்முகரத்தினம் ஆகிய இரு சகோதரர்களின் உள்ளத்தில் முகிழ்த்த பிராந்தியப் பத்திரிகை ஒன்றின் உருவாக்கத்துக்கான சிந்தனை 1958இல் யாழ்ப்பாணத்தில், கலாநிலையம் என்ற பதிப்பகமாக வித்தூன்றப்பட்டு, 1959 பெப்ரவரியில் முளைவிட்டு வாரம் இருமுறையாக “ஈழநாடு” என்ற பெயரில் வெளிவரத் தொடங்கி, நாளும் பொழுதும் உரம்பெற்று வளர்ந்து, ஈற்றில் 1961இல் முதலாவது பிராந்தியத் தமிழ்த் தினசரியாக சிலிர்த்து நிமிர்ந்தது. அன்று தொட்டு இறுதியில் யாழ் மண்ணில் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளும் வரை அதன் இயங்கலுக்கான […]

7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில்

This entry is part 1 of 15 in the series 1 செப்டம்பர் 2013

காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் செப்டம்பர் மாதக் கூட்டம் வரும் சனிக்கிழமை அதாவது 7.9.2013 அன்று மாலை காரைக்குடி கம்பன் கலையரங்கில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் எல்லையொன்றின்மை எனும் பொருள் – என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து கலந்துரையாடல் நிழகஉள்ளது. அனைவரும் வருக.  

பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…

This entry is part 29 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் – உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி. சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக் கொள்ளாத நண்பர்களும் இந்த ஒலிப்பதிவை கேட்கலாம். அடுத்த முறை வருவதற்கு முயற்சி செய்யுங்கள். http://koodu.thamizhstudio.com/pecharavam_1.php குறிப்பு: முதல் நிகழ்ச்சி என்பதால், அத்தனை துல்லியமான ஒலிப்பதிவு அல்ல இது. எனவே கொஞ்சம் மெனக்கெட்டுதான் கேட்க வேண்டும். […]

அறிவுத்தேடல் நூல் அறிமுக மின்னஞ்சல் இதழ் 14

This entry is part 10 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

  ”திராவிடம் பெரியாரியம் இன்றும் தேவையே”(பெரியாரிய எதிர்ப்பாளர்களுகு பதிலடி தரும் நூல்) தொகுப்பாசிரியர்: தமிழேந்தி பெரியார் முவைத்த திராவிடர் கோட்பாட்டுக்குத் தவறான , வரலாற்று உண்மைகளுக்கு மாறான திரிபுகளும் திருத்தல்களும் சில முகாம்களில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பொய்மைகள் ஒவ்வொன்றாக அம்பலப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் ”திராவிடம் , பெரியாரியம் இன்றும் தேவையே” எனும் தலைப்பில் பாவலர் தமிழேந்தியைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மிகச்சிறந்த கருத்தாக வெளிவந்துள்ளது. பெரியார் தமிழுக்கு எதிரி; திராவிடர் […]

தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருதையொட்டி ஏழு நாள் தொடர் திரையிடல்

This entry is part 6 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

 (குட்டி திருவிழா) 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருது பெறுபவர்: லீனா மணிமேகலை. நண்பர்கள் தமிழ் ஸ்டுடியோவின் 2013 ஆம் ஆண்டுக்கான லெனின் விருதையொட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம், 5 (05-08-2013, திங்கள்) ஆம் தேதியிலிருந்து 11 (11-08-2013, ஞாயிறு) ஆம் தேதி வரை தொடர்ந்து ஏழு நாட்கள் வெவ்வேறு ஆவணப்படங்கள், குறும்படங்கள் திரையிடல் நடைபெறவிருக்கிறது.  05-08-2013, திங்கள் – “பீ” ஆவணப்படம் – R.P. அமுதன் (இதனுடன் ஒரு குறும்படம்) 06-08-2013, செவ்வாய் – ஒருத்தி […]

லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை

This entry is part 1 of 30 in the series 11 ஆகஸ்ட் 2013

லெனின் விருது – 2013 – அழைப்பிதழ்… நாள்: 15-08-2013, வியாழக்கிழமை.இடம்: தி புக் பைன்ட், ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணா சாலை (தினமலர் அலுவலகம் அருகில்) நேரம்: மிக சரியாக மாலை 5 மணிக்கு. (5 PM Sharply)நண்பர்களே எதிர்வரும் வியாழக்கிழமை (சுதந்திர தினத்தன்று) சென்னையில் லெனின் விருது வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. உங்கள் அனைவரையும் தமிழ் ஸ்டுடியோ சார்பில் அன்போடு அழைக்கிறேன். அவசியம் வாருங்கள்.  ————————————————————— தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது – 2013 […]

உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு

This entry is part 23 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

  உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு ஆக்ஸ்ட் 3ஆம் நாள் சீனாவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெற்றது. தமிழ்ப் பிரிவின் மூத்தவர்கள், பெய்ஜிங்கிலுள்ள தமிழ் மொழி ஆய்வாளர்கள், இந்தியச் செய்தி ஊடகங்களின் செய்தியாளர்கள், சீனாவுக்கான இந்தியா மற்றும் சிங்கப்பூர் தூதரகங்களின் அலுவலர்கள், நேயர் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 60 பேர் அதில் கலந்து கொண்டனர். நேயர்களின் ஈடுபாடு, பல்வேறு சர்வதேசச் செய்தி ஊடகங்களில் தமிழ் ஒலிபரப்பு வளர்ச்சி, சீன வானொலி தமிழ்ச் சேவையின் […]

குமரி எஸ். நீலகண்டனின் ஆக்ஸ்ட் 15 நாவலுக்கு கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை விருது

This entry is part 19 of 27 in the series 4 ஆகஸ்ட் 2013

நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை சார்பில் வழங்கப்படும் இந்த ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது குமரி எஸ். நீலகண்டன் எழுதிய ஆகஸ்ட் 15 என்ற நாவலுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்று நூலுக்கான டி.வி.ராமசுப்பையர் இலக்கிய விருது முன்னாள் துணைவேந்தர் முனைவர் க.பா. அறவாணனுக்கும் சிறந்த கவிதை நூலுக்கான முரசொலிமாறன் இலக்கிய விருது ந.கருணாநிதிக்கும் வழங்கப்படுகிறது என்று கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவையின் மேலாண் இயக்குநர் கவிஞர் தியாகி தெ.வெ.பகவதிப் பெருமாள் தெரிவித்துள்ளார்.