வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36

This entry is part 1 of 29 in the series 18 நவம்பர் 2012

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றம் தரூஉம் பகை மனிதனின் பயணம் இருட்டறையில் நுழைந்து ,கருவாய் வளர்ந்து , வெளிச்சத்திற்கு வந்து, உலக வாழ்க்கையில் பல பருவங்களைக் கடந்து இறுதியில் மீண்டும் மண்ணுக்குள் இருட்டறையில் புகவும் பயணம் முடிகின்றது. குழந்தைப் பருவம் தாயின் அரவணைப்பிலும் மற்ற பெரியோர்களின் அன்பிலும் பாதுகாப்பாக வளர்கின்றது.. இறகு முளைக்கவும் பறந்து செல்லும் பறவையைப் போல் கற்ற பின் உழைக்கத் தொடங்கி தனக்கென்று ஒரு குடும்ப வளையத்தில் புகுந்து கொள்கின்றான். அன்பு வட்டமாயினும் […]

மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்

This entry is part 25 of 29 in the series 18 நவம்பர் 2012

   நட்பு காலத்திற்கேற்ப, வயதொத்து, தேடலுக்கொப்ப, எடுக்கும் நிலைப்பாடு சார்ந்து தோன்றுகிறது மறைகிறது. கோப்பெஞ்சோழன் பிசிராந்தையார், அவ்வை அதியமான் போன்ற நட்புகள் இன்றிருக்க வாய்ப்பில்லை, அப்படியே இருந்ததென்றாலும் அரிதாகவே இருக்கக்கூடும். இளமை காலத்தில் நட்புக்குள்ள வீரியம், வயது கூடுகிறபோது நமத்துப்போகிறது. இளமைக்கு முன்னால் மேடுபள்ளங்கள் இருப்பதில்லை. கல்வியில், பொருளாதாரத்தில்  சமுதாயத்தில் தங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யவும் நட்பிற்கு கெதிரான குறுங்கற்களை, சிடுக்குகளை வெகு எளிதாகக் களையவும் துடிப்பான இளம் வயது உதவுகிறது. ஆனால் வயது அதிகரிக்கிறபோது […]

ஆப்கானிஸ்தான் இந்துக்களும் சீக்கியர்களும் தங்களது கிராமத்தை மீட்டெடுக்க விரும்புகின்றனர்

This entry is part 1 of 33 in the series 11 நவம்பர் 2012

அபூபக்கர் சித்திக்கி ஷங்கர்லால் அவர்களுக்கு வயது 63 ஆகிறது. இவர் இந்தியாவில் அகதியாக கடந்த இருபது வருடங்களாக வாழ்ந்து வருகிறார். இவரது பூர்வீகமாக “அன்பு நகரத்தை” மீண்டும் அடைய விரும்புகிறார். தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் பிரேம் நகர் என்ற ஊரைச் சார்ந்தவர் இவர். இந்த ஊர் இப்போது அருகாமையில் உள்ள கோஸ்த் என்னும் நகரோடு இணைக்கப்பட்டுவிட்டது. 1990இல் நடந்த ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரின்போது இவர்கள் இந்த ஊரை விட்டு ஓடிவந்தார்கள். கோஸ்த் நகரத்தில் ஒருகாலத்தில் வளமையாக இருந்த இந்து […]

சவுதி அரேபியாவின் அடக்குமுறையினால், ஷியா புரட்சி உருவாகிறது.

This entry is part 14 of 33 in the series 11 நவம்பர் 2012

கிரிஸ் ஸாம்பெலிஸ் அரபு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் புரட்சிகளின் பின்னணியில், சவுதி அரேபியாவில் வளரும் கலவரங்கள் பார்க்கப்படாமலேயே போய்விட்டன. அரசியல் பகிரங்கமாக்கப்பட்டுகொண்டிருக்கும் சுழ்நிலையில், வெகுகாலமாக இருந்துவரும் சர்வாதிகார ஆட்சிகளின் முன்னால் அரபு மக்கள் தங்களது அபிலாஷைகளை வெளிப்படுத்துவது அதிகரித்துகொண்டிருக்கிறது. இந்த பின்னணியில், இதுவரை சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு, குறிவைத்து தாக்கப்பட்டுகொண்டிருந்த இன, மத சிறுபான்மையினர் தங்களது குரல்களையும் வெளிப்படுத்த இறங்கியுள்ளனர். 2011இலிருந்து சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் (அல் மிண்டாக் அல் ஷார்கியா) ஷியா சிறுபான்மையினர் ஒருங்கிணைந்து போராட்டம் […]

இது தான் காலேஜா – நிஜங்கள்

This entry is part 19 of 33 in the series 11 நவம்பர் 2012

  சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் அடிக்கடி பிரச்சனை வருவதுண்டு… வெளித் தோற்றத்தில் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் இந்தப் பல்கலைக் கழகத்தில் நடக்கும் ஊழலும்..அராஜகமும்…வேறு எந்த பல்கலைக் கழகத்திலும் நடக்காது. இந்தக் காலேஜில் மருத்துவராக வெளி நாட்டிலிருந்தும்  மாணவர்கள் சேர்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். அதிலும் குறிப்பாக…இந்தோனேஷியா, உக்ரைன், உகாண்டா,மத்தியப்  பிரதேசம் , உத்திரப் பிரதேசம்  ,ஆந்திரா…கேரளா, என்று பல இடங்களிலிருந்தும் பல மொழிகள் பேசும் மாணவர்களைக் காணலாம்.இது வரவேற்கப் படவேண்டிய விஷயம் தான். இங்கு வருகைப் பதிவிலிருந்து அனைத்துக்கும் விலை […]

க.நா.சு.வும் நானும்

This entry is part 11 of 33 in the series 11 நவம்பர் 2012

நான் க.நா.சுப்ரமண்யம் என்ற பெயரையே முதன் முதலில் அறிந்தது தமிழ் நாட்டில் அல்ல. ஒரிஸ்ஸாவில். ஹிராகுட் அணைக்கட்டில் வேலைக்குச் சேர்ந்த ஒரு சில மாதங்களி.ல். 1950-ன் ஆரம்ப மாதங்களிலோ அல்லது சற்றுப் பின்னோ. அப்போது எனக்கு வயது 17. எனக்கு ஆறு அல்லது ஏழு வயது மூத்தவரும், எனக்கு அந்த புதிய மண்ணில் புதிய வாழ்க்கையின் ஆரம்பத்தில் வழிகாட்டியாக இருந்த செல்லஸ்வாமி என்பவரின் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருக்கு அடுத்த வீட்டில் இருந்த ஜனார்தனம் என்பவர் […]

குன்றக்குடியில் கார்த்திகை முதல். சோம வாரம் ஆண்டிக்கு வடித்தல்

This entry is part 24 of 33 in the series 11 நவம்பர் 2012

  இந்தத் திருத்தலத்தில் இன்னொரு பெருமையும் உண்டு. எல்லா வைபவ விஷேஷங்களும் போக கார்த்திகை மாத முதல் சோமவாரம்தான் அது. அதை கொண்டாட நகரத்தார் பெருமக்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடிவிடுவார்கள்.   சைவ நெறிச் செல்வர்களான அவர்கள் அந்தக் காலத்தில் ”ஆண்டிக்கு வடித்தல் ” என கார்த்திகை முதல் சோம வாரத்தில் வண்டி கட்டிக் கொண்டு இங்கே  சமையல் பொருட்களை எடுத்து வந்து  ஆள் வைத்து சமைத்து  7 கறி, கெட்டிக் குழம்பு, சாம்பார், ரசம், […]

நூறு மசலாவும் நூறாயிரம் வாசல்களும்

This entry is part 16 of 33 in the series 11 நவம்பர் 2012

  சிடிக்கள் டிவீடிக்கள் உருவாகாத காலமது. எழுபதுகளில் எல்லாம் தமிழகத்தில் வாழ்ந்த சிங்கப்பூர் சபுறாளிகள் சொந்த மண்ணுக்கு வரும்போது அள்ளிக் கொண்டுவரும் சாதனங்களின் ஒன்று கேசட்டுகள். தகவல் அறிவுப்பரிமாற்றத்திற்கு புரதான காலங்களில் எழுத்தாணிகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள்,மரப்பட்டை,தோல்களில் எழுதுதல் என்பதான வடிவங்கள் பயன்பட்டன. நவீன தொழில்நுட்பம் உருவாகிய போது அச்சு ஊடகம் முதன்மை பெற்றது. ஓலைச்சுவடி கருவூலங்கள் அச்சுவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதன்பின்னர் உருவான எலக்ட்ரானிக் மீடியாகாலத்தில் இந்த கேசட்டுகள் எனும் ஒலிநாடாக்கள் உருவாகின. தற்போது ஒலியும் ஒளியும் கலந்த […]

பழமொழிகளில் ‘காடு’

This entry is part 7 of 33 in the series 11 நவம்பர் 2012

 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com      ஆதி மனிதன் காடுகளில் அலைந்து திரிந்தான். நாகரிகமற்ற சூழலில் விலங்களைப் போன்று வாழ்ந்தான். சிறிது சிறிதாக நாகரிகமடைந்த பின்னர் தனக்கேற்றவாறு வசிப்பிடங்களை அமைத்துக் கொண்டான். மலைக்குகைகள், மரப்பொந்துகள், மரத்தடிகள் என்று வாழ்ந்தவன் பின்னர் காடுகளை அழித்துத் தனக்கேற்ற வசிப்பிடங்களையும், விவசாயம் செய்வதற்குரிய நிலங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்தான். அன்று முதல் இன்று வரை மனிதனின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் காடுகள் பின்னணியாக உள்ளன. காடு மனித […]

தடங்கலுக்கு வருந்துகிறோம்

This entry is part 31 of 31 in the series 4 நவம்பர் 2012

திண்ணை ஆசிரியர் குழு அன்புள்ள திண்ணை வாசகர்களுக்கு கடந்த வாரம் திண்ணை பதிவு ஓரிரு நாட்கள் வாசகர்கள் படிக்க இயலாமல் இருந்தது. நியூ யார்க் பகுதியில் ஏற்பட மின்வெட்டும், வலைப்பதிவுகளை சீர்குலைக்கும் சிலரின் செயலும் இந்த தடங்கலுக்குக் காரணம். வாசகர்களுக்கு ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்.   வாசகர்களின் தொடர்ந்த ஆதரவிற்கும், படைப்பாளிகளின் பங்கேற்புக்கும் எங்களின் நன்றி. திண்ணை ஆசிரியர் குழு