இருக்கும்வரை காற்று கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் ஏ.எம். தாஜ் அவர்கள் இலங்கை வானொலியின் பிரபல அறிவிப்பாளராவார். இவர் ஒரு பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளனாக, ஒரு பாடகனாக, ஒலி ஒளி அறிவிப்பாளனாக, ஒரு சட்டத்தரணியாக பல துறைகளிலும் கால் பதித்திருக்கிறார். இவரது கன்னிக் கவிதை நூலே ஷஇருக்கும் வரை காற்று| ஆகும். அழகிய அட்டைப்படத்துடனும், அழகிய வடிவமைப்புடனும் மிகவும் கச்சிதமாய் சிறியதும் பெரியதுமான 43 கவிதைகளை உள்ளடக்கியதாக 80 பக்கங்களில் கவிஞர் மு.மேத்தாவின் வாழ்த்துரையுடன் வெளிவந்து இருக்கிறது இவரது […]

நாத்திகர்களும் இஸ்லாமும்.

This entry is part 39 of 42 in the series 25 நவம்பர் 2012

கடவுள் இல்லை. அல்லாஹ்வும் இல்லை. முன்னாள் முஸ்லீம்களான நாத்திகர்கள் வெளிப்படையாக பேசத்துவங்கியிருக்கிறார்கள். இருப்பினும், சகிப்புத்தன்மை இன்னும் அரிதாகவே இருக்கிறது. இந்தோனேஷிய நீதிமன்றம் அலெக்ஸாந்தர் ஆன் Alexander Aan) அவர்களுக்கு “மத வெறுப்பை தூண்டியதற்காக” இரண்டரை ஆண்டு சிறைத்தண்டனையை கொடுக்கும் முன்னரே, ஒரு கும்பல் அவரை தாக்கி விட்டது. உலகத்தின் மிகப்பெரிய முஸ்லீம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் உள்ள மினாங் பிரதேசத்தில் உள்ள நாத்திகர்களுக்காக அவர் ஆரம்பித்த முகநூல் குழுமத்தில் (Facebook group) கடவுள் இல்லை என்று எழுதியதுதான் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -37

This entry is part 33 of 42 in the series 25 நவம்பர் 2012

சீதாலட்சுமி இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்   QUEST PROGRAMME பன்னாட்டு அரிமா சங்கம் தோற்றுவித்த ஓர் திட்டம் 65 நாடுகளில் 31 மொழிகளில் இத்திட்டம் செயல்படுத்த பயிற்சித் திட்டமும் வரையப்பட்டது. சிறுவர்கள், இளம் காளைகள் திறனை வளர்க்கவும் தவறான பாதைகளில் திரும்பி விடாமல் தடுக்கவும் தோன்றிய திட்டம். 1 தன் பொறுப்பை உணர்ந்து அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்தல் 2 சொல்ல நினைப்பதைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொள்ளல் 3 […]

வாழ்க்கைச் சுவடுகள்

This entry is part 32 of 42 in the series 25 நவம்பர் 2012

 தேமொழி நம் பாரதத்தில் பிறந்தவர்களின் வரலாற்றுக் குறிப்புகளின் நிலை மிகவும் வருந்தத் தக்கது. பொதுவாக ஒருவர் காலம் பல கடந்தும், அதாவது பற்பல நூற்றாண்டுகளுக்குப் பின்னும் நினைவுகூரப்பட வேண்டும் என்றால் அவர்கள் பொதுவாக சில பண்புகளைக் கொண்டிருப்பார்கள். – அவர்கள் கலையிலோ, இலக்கியத்திலோ (ஆன்மீகம், அரசியல், அறிவியியல் துறைகள் உள்ளடக்கிய படைப்புகள் உட்பட)  தங்கள் பங்கினை அளித்திருப்பார்கள் – அதிகாரம் மிக்க அரச குடும்பத்தினராக இருந்திருப்பார்கள் – செல்வந்தராக இருந்து ஈகைகள் பல புரிந்த புரவலர்களாக இருந்திருப்பார்கள், […]

வைரமுத்துவின் எமிலி: ஏன் இந்த முரண்பாடு?

This entry is part 28 of 42 in the series 25 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் “மூன்றாம் உலகப் போர்” நாவலில் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்யவரும் எமிலி என்னும் அமெரிக்க மாணவி (நியூ சயண்டிஸ்ட் புகழ்) அமெரிக்காவுக்குத் திரும்பு முன் சின்னப்பாண்டியென்னும் நமது கதாநாயகனுடன் பேசுகிறாள். அந்த உரையாடல் கொஞ்சம் காதல் போல் தொனிக்கிறது. ஆனால் காதல் இல்லை.   எமிலி: “இந்தச் சந்தர்ப்பத்தில் என்னை நம்புகிறீர்களா?”   சி.பா.: “இப்போது என் வாழ்வின் நம்பிக்கையே நீதான் எமிலி”   “நம்பிக்கையின் குரலுக்குச் செவிசாய்ப்பீர்களா?”   “நிச்சயமாக” […]

(3) – க. நா.சு. வும் நானும்

This entry is part 25 of 42 in the series 25 நவம்பர் 2012

1956 – தான் அவரது விமர்சனப் பயணத் தொடக்கமாக எனக்குத் தெரிய வந்த வருஷம். அதிலிருந்து அவர் கடைசி மூச்சு பிரியும் வரை அவர் விமர்சகராகவே  முத்திரை குத்தப் பட்டு ஒதுக்கப் பட்டு விட்டார்.  நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு என எல்லா வடிவங்களிலும் அவர் தொடர்ந்து எழுதி வந்தார். பெரிய மனிதன், ஆட்கொல்லி, ஏழு பேர், அசுர கணம், நளினி, மயன் கவிதைகள், சமூக சித்திரம், அவரவர் பாடு மாதவி,  வள்ளுவரும் தாமஸ் வந்தார்,, அவதூதர்,. […]

பாமாவின் ‘கருக்கு” – தலித் பெண்ணியப் பார்வை

This entry is part 12 of 42 in the series 25 நவம்பர் 2012

திருமதி.லெ.ஆனந்தவள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர், கணேசர் செந்தமிழ் கல்லூரி, பொன்னமராவதி. முன்னுரை: இன்றைய படைப்புலகில் பல பெண் எழுத்தாளர்கள் தோன்றி படைப்புகளில் வெளிப்படுத்துகின்றனர். நாவல், சிறுகதை, கவிதை எனப் பல வடிவங்களில் இப்பணியினைச் செய்கின்றனர். அவ்வகையில் தலித் இலக்கியப் படைப்பாளியான பாமா ‘கருக்கு” நாவலில் தம் வாழ்வையும் தலித் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளையும் எழுத்தாக்கியுள்ளார். குடும்பத்திலும், சமுதாயத்திலும் ஆணோடு சமத்துவம் இன்றி வாழும் தலித் பெண்கள் குறித்து பாமா கூறும் கருத்துக்களை ஆய்வதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது. தலித் […]

வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்

This entry is part 27 of 29 in the series 18 நவம்பர் 2012

(ஓர் அறிவியல் மாணவன்)   வைரமுத்துவின் அண்மைய பெஸ்ட் செல்லரான “மூன்றாம் உலகப் போர்” நாவலில் எமிலி டேவிட் என்னும் அழகான அமெரிக்கப் பெண் வருகிறாள். அவள் நியூ சயண்டிஸ்ட் இதழில் எழுதிய ஒரு கட்டுரை இந்த நாவலின் கருவாக அமைந்துள்ளது. புவி வெப்பமடைதலினால் ஏற்படும் வேளாண்மையின் வீழ்ச்சி பற்றி அது பேசுகிறது. கட்டுரையின் தலைப்பு தமிழ் மொழி பெயர்ப்பில் “போருக்கு எதிரான உலகப் போர்” என்று இருக்கிறது. ஆங்கிலத்தில் என்னவாக இருந்திருக்கலாம் என யூகமாக மொழிபெயர்த்தால் […]

க. நா. சுவும் நானும்(2)

This entry is part 2 of 29 in the series 18 நவம்பர் 2012

ஆனால் அந்த நாட்கள் எனக்கு மிகுந்த உற்சாகம் நிறைந்த நாட்கள். க.நா.சுவின் எழுத்துக்களை தமிழ் பத்திரிகைகளிலோ ஆங்கிலப் பத்திரிகைகளிலோ பார்க்கும் போது நான் அடைந்த உற்சாகம் சொல்லித்தீராது. அவர் எழுத்து மாத்திரம் அல்ல. தில்லியில் எனக்குப் பார்க்கக் கிடைத்து வந்த நாடகம், சினிமா, நாட்டிய நிகழ்ச்சிகள். மற்ற மொழிக்காரர்கள் பங்கு கொள்ளும் கருத்தரங்குகள் எல்லாம் தமிழை ஆக்கிரமித்திருந்த வெகுஜன கலாச்சாரத்தை நிராகரிப்பதாகவும், இதற்கு எதிரான க.நா.சு. வின் எழுத்தையும் குரலையுமே எதிரொலிப்பதாகவும் இருந்தது. அதை நான் ஒவ்வொரு […]

குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்

This entry is part 16 of 29 in the series 18 நவம்பர் 2012

குன்றக்குடியில் கி பி எட்டாம் நூற்றாண்டில் முதலாம் பாண்டியன் அமைத்த  ஒரு குடைவரைக்  கோயில் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு.   அதன் பக்கவாட்டு மலைப்பகுதிக்குச் சென்றால் அங்கே சமணர்கள் அமைத்த படுகைகள் இருக்கின்றன.. அவற்றைப் பார்த்திருக்கின்றீர்களா. அடுத்தமுறை சென்றால் இவை இரண்டையும் தவற விடாதீர்கள்.   காரைக்குடியில் இருந்து  8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது குன்றக்குடி. குன்றக்குடிக்கு எப்போது சென்றாலும் மலைமேலிருக்கும் சண்முகநாதனை வணங்கி வருவதுடன் அன்றைய ஆலயதரிசனம் முடிந்துவிடும். ஆனால் இந்த முறை சென்ற […]