இஸ்லாமியப் பண்பாட்டில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மானுடவியல் அணுகுமுறை

This entry is part 26 of 43 in the series 24 ஜூன் 2012

  மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் எண்ணூறு புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூர், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், நுண் அரசியல் தளங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும். அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 18

This entry is part 23 of 43 in the series 24 ஜூன் 2012

  இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு     முதுமை  ஒரு சுமையா? ஒடுங்கியிருக்கும் உள்ளத்திற்கு உயிர்ச் சத்து கொடுக்க கடந்த கால நினைவு களுக்கு வலிமை உண்டு. பயனுள்ள பயணமாக இருத்தல் வேண்டும். உடல் வலி மறக்க வாசிப்பு, எழுத்து, தியானம் உதவிக்கரம் நீட்டும். வாடிப்பட்டியில் இருந்த ஐந்தாண்டு காலம் ஓர் பல்கலைக் கழகத்தில் படித்த உணர்வும் நிறைவும் இப்பொழுதும் இருக்கின்றது. எத்தனை மாறுதல்கள்?! அரசியல் பாடம் நேரடியாகப் பெற்றதும் இங்கேதான். […]

தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாக மாற்றாதீர் !

This entry is part 21 of 43 in the series 24 ஜூன் 2012

  தஞ்சையில் முன்னாள் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன் உரை!     தஞ்சையில் 1981 செப்ட்டம்பர் 15 அன்று அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழ்ப் பல்கலைக்கழத்தைத் தொடங்கி வைத்தார். அதற்கு சற்றொப்ப ஆயிரம் ஏக்கர் நிலம் ஒப்படைத்தார்.   அப்பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கவனிப்பார் அற்று நலிவடைந்துள்ளது. மாதா மாதம் சம்பளம் வழங்குவதற்கே வழியின்றி திண்டாடுகிறார்கள். இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் நிலத்தை அவ்வபோது வெவ்வேறு நோக்கங்களுக்கு வெளியாருக்கு கொடுத்து வருகிறது தமிழக அரசு. முதலில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் […]

துருக்கி பயணம்-7

This entry is part 20 of 43 in the series 24 ஜூன் 2012

அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா ஏப்ரல் – 1 மீண்டும் அண்ட்டால்யாவிலிருந்தோம். ஒரு வாரத்திற்குப் பின் அண்ட்டல்யாவை வேறுதிசைகளில், வேறுகோணத்தில் வேறு கதைப்பொருளில் காண இருந்தோமெனச் சொல்லலாம். முதல் நாள் அண்ட்டால்யா: அவ்லாமணி அண்ட்டல்யா, அஸ்பெண்ட்டோஸ் அண்ட்டல்யா, மனவ்காட் அண்ட்டல்யா, செலிமியே அண்ட்டால்யா ஆகியவை சட்டைபொத்தான்களைப்போல  நினைவில் அணிவித்ததும் வரிசையாக வந்தன. இவ்விரண்டு நாட்களும் நாங்கள் பார்க்கவிருக்கிற அண்டால்யா வேறுவகையென்று சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் வழங்கி கைவசமிருந்த குறிப்புகள் தெரிவித்தன. அண்டல்யாவில் எப்போதும்போல […]

கல்விக் கனவுகள் – பணம் மட்டும் தானா வில்லன்? (பகுதி -2)

This entry is part 12 of 43 in the series 24 ஜூன் 2012

    —————————- +2க்குப் பிறகு —————————- +2க்குப் பிறகு சினிமாவில் மட்டுமே மாணவர்கள் மிகவும் ஜாலியாக இருக்கிறார்கள். நிஜம் வேறு. சென்ற பகுதியில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை மட்டுமே பதினோரு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் பல பள்ளிகளில் நடத்துகிறார்கள் என்று பார்த்தோம். அதாவது பதினோராம் வகுப்புப் பாடத் திட்டம் மாணவருக்குப் போய்ச் சேருவதே இல்லை. இதன் பின் விளைவு ‘என்ஜினீயரிங்’ படிப்பில் முதலாண்டில் பல பாடங்களை மாணவர்களால் சரிவரப் புரிந்து கற்றுக் கொள்ள இயலுவதில்லை. இதற்குக் […]

சாதனைச் சுவடுகள் – மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன்

This entry is part 6 of 43 in the series 24 ஜூன் 2012

ஆதி இராஜகுமாரன், மலேசிய “நயனம்” வார இதழின் ஆசிரியர் (“பாப்பா பாவலர்” என அறியப்படும் மலேசியக் கவிஞர் முனைவர் முரசு நெடுமாறன் 75 வயதை எட்டியுள்ளார். அவருடைய வாழ்வை நினைவு கூரும் கட்டுரை) தலைமுறைகள்தோறும் தமிழே வாழ்வு என்று தனித்து நிற்கும் இலட்சியப் புதல்வர்களைப் பெற்ற தமிழன்னையின் ஆயிரமாயிரம் தமிழ்ப்புதல்வர்களில் ஒருவர் என்று, மலேசியாவில் பெருமையோடு சொல்ல வேண்டியவர் முனைவர் முரசு நெடுமாறன் அவர்கள். எளிய குடும்பத்தில் தோன்றி, எளிமையான வாழ்க்கையை வகுத்துக் கொண்டு தமிழுக்கும் தமிழர்க்கும் […]

நினைவுகளின் சுவட்டில் – 90

This entry is part 5 of 43 in the series 24 ஜூன் 2012

  அடுத்த நாள் காலை ராஜ்காங்பூருக்குப் போனோம் என்பது நினைவில் இருக்கிறது. இந்த பயணம் முழுதிலும் கலுங்காவைப் பற்றி ஜார்ஜ் தன் இச்சையாகவே தகவல் அறிந்து கொண்டாரே தவிர நாங்கள் எங்கு செய்த பயனத்துக்கும் எவ்வித முன் தயாரிப்பும் இல்லாது தான் சென்றோம். எங்கே தங்குவது, எங்கே குளிப்பது போன்ற எதுவும் அவ்வப்போது நாங்கள் கிடைத்த இடத்தில் எங்களைச் சௌகரியப்படுத்திக்கொண்டோமே தவிர முன் ஏற்பாடுகள் வசதிகள் ஏதும் செய்துகொள்ளவில்லை. இப்படி ஒரு பயணம் இப்போது என்ன, அதன் […]

எஸ் சுவாமிநாதன், பாரவி, தேவகோட்டை வா மூர்த்தி எழுதிய அர்த்தம் இயங்கும் தளம்

This entry is part 42 of 43 in the series 17 ஜூன் 2012

(எஸ் சுவாமிநாதன்) அர்த்தம் என்பதை எப்படி அர்த்தப் படுத்திக் கொள்வது என்பது மொழியியலும், சமூக வரலாறும், அன்றாட வழக்காடலும் இணைந்து நிற்கும் ஒரு களத்தில் எழுகிற கேள்வி. இதற்கான பதில் சுலபமானதோ எளிய ஸூத்திரங்களுக்குள் அடங்குவதோ அல்லது இதற்கு இது தான் அர்த்தம் என்று சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதிலோ இல்லை. அர்த்தத்தின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வது எனபது ஒரு சமூகததின் பரிணாம வளர்ச்சியை அறிந்து கொள்வதும் ஆகும். ஆங்கிலத்தில் புகழ் பெற்ற விமர்சகர்கள் ஐ ஏ ரிச்சர்ட்சும் […]

புத்திசாலிகள் ஏன் முட்டாள்களாக இருக்கிறார்கள்

This entry is part 41 of 43 in the series 17 ஜூன் 2012

ஜோனா லெஹ்ரர்   ஒரு சின்ன கணக்கு.. ஒரு கிரிக்கெட் மட்டையும் பந்தும் ஒரு ரூபாய், பத்து பைசாக்கள் என்று வைத்துகொள்வோம். கிரிக்கெட் மட்டை பந்தை விட ஒரு ரூபாய் விலை அதிகம் என்றால், பந்தின் விலை என்ன?   பெரும்பாலான மக்கள் உடனே மிக தைரியமாக பந்தின் விலை 10 பைசாக்கள் என்று சொல்வார்கள். பதில் தவறு. (சரியான பதில் பந்தின் விலை 5 பைசா. மட்டையின் விலை ஒருரூபாய் ஐந்து பைசா)   கடந்த […]

அந்தரங்கம் புனிதமானது

This entry is part 40 of 43 in the series 17 ஜூன் 2012

இன்று நாம் பல புரட்சிகளைக் கண்டுள்ளோம். விவசாயப் புரட்சி, விஞ்ஞான புரட்சி, தொழிற் புரட்சி, கடைசியில், கைக்குள் உலகையே கொண்டு வரும் கனணி புரட்சியிலும் புகுந்து விட்டோம். ஆனாலும், உறவு, பாசம், குடும்பம், கணவன் – மனைவி பந்தம்-பாசமெல்லாம் நம் மண்ணின் பெருமையென சொல்லிக்கொண்டுதான் திரிகின்றோம். ஆனால், இன்றைய இளம் தலைமுறையின் ஆண்- பெண் உறவு முறைகளில், மேலை நாட்டு கலாச்சார மோகம் கண்டுள்ளதாக தெரிகின்றது. இதுவரை, நாம் ஆண்- பெண் உடலுறவை, திருமணத்திற்கு பின் தான், […]