துருக்கி பயணம்-3

This entry is part 31 of 33 in the series 27 மே 2012

  அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ் – நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-28 காலை 7.30க்கு பேருந்தில் இருக்கவேண்டுமென சொல்லப்பட்டிருந்தது. எங்கே உறங்கினாலும் இரவு எத்தனை மணிக்கு உறங்கப்போனாலும் அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக விழித்துக்கொள்வதென்பது பள்ளிவயதிலிருந்தே பழகிப்போனது. விழித்துக்கொண்டபோதும் அறையில் இணையத் தொடர்பு ஒழுங்காக கிடைக்காதென்பதை மூளை தெரிவித்தால் சோர்வுடன் படுத்திருந்தேன். ஐந்து மணிக்கு குளித்து முடித்ததும், லி·ப்ட் பிடித்து கீழே இறங்கினேன் லாபியில் ஒருவருமில்லை. வரவேற்பு முகப்பு அரை உறக்கத்தில் கிடந்தது. தனியே லாபியில் […]

திராவிட இயக்க வரலாறும் தமிழ் நாடும்

This entry is part 10 of 33 in the series 27 மே 2012

நூறாண்டு விழா கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் இன்றைய திராவிட இயக்க கட்சிகளில் ஒன்றின் தலைவர். இககட்சிகளில் பிரதானமானதும், திராவிட என்ற பெயருக்கு உரிமை கோரும்  கட்சிகளில்  மூத்ததுக்கு , முக்கிய  வாரிசாக தன்னைக் காண்பவரும், தமிழ் நாடும் அவ்வாறே அங்கீகரிக்கும் அதிர்ஷ்டம் பெற்றவரும் அவர் தான். இப்படியெல்லாம் சொல்வதற்குக் காரணம் அவரது சிந்தனைகளோ செயல்களோ இவற்றோடு உறவு கொள்ளாதவை. சொல்லப் போனால், திராவிட என்னும் அடை மொழிதான் தொடர்ந்து வருகின்றதே அல்லாது, தொடக்கம் முதலே இதன் வரலாற்றில் […]

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 14

This entry is part 2 of 33 in the series 27 மே 2012

  அடக்கம் அமரருள் வைக்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்   சென்னைக்கருகில் ஓர் மகளிர்மன்றம் அன்னை கஸ்தூரிபாய் மகளிர்மன்றம்   தலைவி பங்கஜம்.  செயளாளர் பேபி. ஏறத்தாழ 600 உறுப்பினர்களைக் கொண்டு 45 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. சுறுசுறுப்பான உறுப்பினர்கள் இருப்பினும் பேபியின் கடும் உழைப்பில் பங்கஜம் ஒத்துழைப்புடன் வளர்ந்த ஓர் மன்றம். அந்தக் காலத்தில் சங்கீதம், இந்தி முதலியன கற்றுக் கொடுக்கும் வகுப்புகள் இருந்தன. ஆனந்த விகடன் திரு வாசன் அவர்களின் புதல்வர் […]

மொலோனி மிக்ஸர்: சென்னைவாசிகளின் விசித்திர குடிநீர்!

This entry is part 5 of 33 in the series 27 மே 2012

சென்ற நூற்றாண்டின் தொடக்க காலச் சென்னைக்குக் கொஞ்சம் போய் வருவோமா? 1914-ல் சென்னையை ஒரு நகராட்சி என்றுதான் குறிப்பிட முடியும் என்றாலும் முனிசிபல் கார்ப்பரேஷன் என்றுதான் அப்போதே அது கவுரவமாக அழைக்கப்பட்டது. ஆனால் மாநகராட்சி மன்றத்திற்கு மொத்தம் முப்பத்து ஆறே உறுப்பினர்கள்தான். அவர்களிலும் இருபதுபேர்தான் வாக்காளர்களால் தேந்தெடுக்கப்படுபவர்கள்! ஏனென்றால் அப்போது சென்னை வெறும் இருபது வார்டுகளாகத்தான் பிரிக்கப்பட்டிருந்தது. எட்டு உறுப்பினர்கள் சேம்பர் ஆஃப் காமர்ஸ், ரயில்வே ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள். மேலும் எட்டுபேர் அரசின் நியமன உறுப்பினர்கள். […]

தங்கம் 8 – சீனாவில் தங்க நிலவரம்

This entry is part 1 of 33 in the series 27 மே 2012

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக தங்கம் அதிக மதிப்புக்  கொண்ட உலோகமாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அதை ஆபரணங்கள் செய்யவே பயன்படுத்தி வருகின்றனர்.  பெண்ணின் திருமணத்தின் போது, தங்கமாகவும், ரொக்கமாகவும் வரதட்சிளையாகத் தருவது நம்மில் ஊறிப் போன பண்பாகவே ஆகிவிட்டது.  பெற்றோரின் சொத்தில் பெண்களுக்கு பங்கு இல்லாத காலத்தில், தங்கத்தையே சொத்தாக எண்ணி, மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டிற்கு வரும் போது நிறைய நகைகளைப் போட்டு வர வேண்டும் என்று விரும்பினர்.  தற்போதும் அந்நிலையில் எந்தவித மாற்றமும் […]

துருக்கி பயணம்-2 அண்ட்டால்யா – கொன்யா – கப்படோஸ்

This entry is part 29 of 29 in the series 20 மே 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா மார்ச்-27   முன்னாள் இரவு விமானநிலையத்திலிருந்து ஓட்டலுக்குச்செல்லும்போதே எங்கள் குழுவினருக்கென பணியாற்றிய வழிகாட்டி காலை 9.30க்குப் பேருந்தில் இருக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். ஐரோப்பியர்கள் நேரத்தை பெரும்பாலும் ஒழுங்காக கடைபிடிப்பவர்கள். பிரான்சில் நம்மவர்களோடும்  பயணம் செய்திருக்கிறேன், ஐரோப்பியர்களோடும் வாய்ப்புகள் அமைந்திருக்கின்றன. நாம் அலட்சியப்படுத்துகிறவற்றில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த அக்கறையே அவர்களின் முன்னேற்றத்திற்கும் காரணமாகவும் இருக்கின்றன. முதல்நாள் பாரீஸ் விமானதளத்தில் எங்கள் வரிசையில் பின்னால் நின்றிருந்த மூவரும் ஒரு டாக்டர் தம்பதியும் அவர் சகோதரியும் (இவருமொரு […]

முகம்மது வரலாற்றில் இருந்தாரா? Did Muhammad Exist? புத்தக விமர்சனம்

This entry is part 28 of 29 in the series 20 மே 2012

ஜோம்பி இயேசு என்ற நபர் வரலாற்றில் இருந்திருக்கிறாரா என்பதற்கு தடயங்களை பல நூற்றாண்டுகளாக ஆய்வாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். உண்மையான இயேசுவை பற்றி நூற்றுக்கணக்கான புத்தகங்கள், ஆவணப்படங்கள், பத்திரிக்கை கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள், திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. கிறிஸ்துவத்தின் மிகவும் ஆதாரமான தோற்றம் எப்போது எங்கே என்பது இன்னும் ஆய்வுக்குரியதாக இருந்தாலும், மத ஆய்வுகளில் இப்படிப்பட்ட தேடல் மிகவும் சாதாரணமான ஒன்றாகத்தான் இருக்கிறது. வரலாற்றுரீதியாக இயேசு என்ற நபர் இருந்தார் என்பதற்கு தடயங்கள் இல்லை என்பதை பெரும்பாலான ஆய்வாளர்கள் கூறினாலும், இப்படிப்பட்ட ஆய்வுகள் […]

தங்கம் – 7 சீனாவின் மைடாஸ்

This entry is part 21 of 29 in the series 20 மே 2012

நாம் பொருட்களின் மதிப்பை உயர்த்திக் காட்ட, தங்க முலாம் பூசிய பொருட்களை வாங்குவோம். பயன்படுத்துவோம். அவற்றை வீட்டில் பல பகுதிகளிலும் அலங்காரப் பொருட்களாக வைத்திருப்போம். ஆனால் 2001 முதல் ஹாங்காங்கின் தங்கக் கழிப்பறை வசித்திரங்களில் ஒரு விசித்திரம். 380 இலட்சம் ஹாங்காங் டாலர்கள் செலவில் இதை அமைத்தவர் லம் சாய் விங் என்பவர். இரு அறைகள் முழுவதுமே 380 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, கழிப்பிடமும் தங்கத்தால் உருவாக்கப்பட்டது. கைக்கழுவும் இடமும், கழிப்பறை பிரஷ்களும், காகிதத் தாங்கும் கொக்கிகளும், […]

உழைப்பால் உயர்ந்த உத்தமி! – சுசேதா கிருபளானி – (1906 – 1974)

This entry is part 16 of 29 in the series 20 மே 2012

அந்நிய ஆதிக்கத்தின் அடிமைத் தளையைக் களைய, வீறு கொண்டு எழுந்த இந்திய தேசத் தியாகிகளின் வரலாற்றில் , சுதந்திரப் போராளி திருமதி சுசேதா கிருபளானிக்கும் மிக முக்கிய இடமுண்டு! ஒரு இந்திய மாநிலத்தின் முதல் பெண் முதல் அமைச்சர் என்ற பெரும் பேற்றையும் பெற்றவர் சுசேதா அவர்கள். வங்காளக் குடும்பத்தைச் சேர்ந்த எஸ்.என்.மஜீம்தார் என்பவருக்கு 1906ஆம் ஆண்டு , ஹரியானா மாநிலம், அம்பாலா எனும் ஊரில் பிறந்தார். இவர் தந்தை அரசாங்க மருத்துவராகவும், தேசியவாதியாகவும் இருந்தவர். தில்லியிலுள்ள […]