ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 28) இரவிலும், பகலிலும்

This entry is part 16 of 32 in the series 15 ஜூலை 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா   முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். […]

நட்ட ஈடு

This entry is part 7 of 32 in the series 15 ஜூலை 2012

    பொருள் வழிப்பிரிந்ததினால் சேர்ந்து களிக்காமல் மகன் கணக்கில் இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம் ஈடு செய்து கொண்டிருக்கிறார் முதுமையில், பேரனுடன் விளையாடும் தாத்தா. மேலும் கடனாய் முத்தங்களை வாங்கியபடி. லேசான மனங்களைப்போல் உயரே பறக்கிறது காற்றாடி வாலை வீசி… வீசி.

காத்திருப்பு

This entry is part 5 of 32 in the series 15 ஜூலை 2012

காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் – எம்.ரிஷான் ஷெரீப் mrishanshareef@gmail.com

குறிஞ்சிப் பாடல்

This entry is part 38 of 41 in the series 8 ஜூலை 2012

-வ.ஐ.ச.ஜெயபாலன் கரும் திரை அசையும் தோற்பாவைகளாய் நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல் முலை சிந்தச் சிந்த நிலா நட்சதிரக் கன்றுகளைத் தேடுது. சொட்டும் நிலாப் பாலில் கரையும் இருளில் பேய்களே கால்வைக்க அஞ்சும் வழுக்கு மலைப் பாதை பாம்பொடு பாம்பாய் நெளிகிறது. மின்மினிகள் துளை போடும் இருள் போர்த்த காட்டின் வழி நீழ கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு கரடிகள் அலையும் இரவில் பூத்துக் குலுங்குது முல்லை. ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில் வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும் […]

அறைக்குள்ளேயே வெகுதொலைவு-II (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்)

This entry is part 36 of 41 in the series 8 ஜூலை 2012

51 வறண்டு கிடக்கும் ஆற்றில் கரை புரண்டோடும் வெயில் வெள்ளம். மேலே பறந்து கொண்டிருக்கும் தனித்தொரு பறவை வானில் ஒரு குளிர்மேகம் தேடி. 52 செடியின் ஒரு மலர் உதிரும். ஒரு மொட்டு அவிழும். செடி செடியாய் இருக்கும். 53 ஒரு கோவணம் கூட இல்லை. அண்ணாந்து ஆகாயம் போர்த்திக் கொள்ளும் அந்தக் குழந்தை. 54 நேற்றிரவில் எனக்குப் பெய்த மழை எல்லோருக்கும் பெய்யவில்லை. என் கனவில் மழை. 55 ஒற்றைப் பனைத்தூரிகையும் ஓவியமும் ஒன்றோ? 56 […]

கவிதைகள்

This entry is part 34 of 41 in the series 8 ஜூலை 2012

மரணம் பின்பு சிலர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்துவிடுவர் வருமானம் வீடு தேடி வரும் சமணத்தில் முக்தி பெண்களுக்கு கிடையாதாம் பிரமாண்ட நந்தி கூடவே பிரஹன்நாயகி இவ்வளவுக்கும் தகுதியுடையவனா பிரகதீஸ்வரன் கல்வி நிறுவனங்கள் அம்பானிக்கும்,டாடாகளுக்கும் தொழிலாளர்களை உற்பத்தி செய்யும் பணியை செவ்வனே செய்கின்றன பெண்களால் வீழ்ந்தன எத்தனையோ சாம்ராஜ்யங்கள் சாவுக்கு பின்னும் மதச் செயல்பாடு இருக்குமானால் மனிதனுக்கு இன்னல் தான் அரசர்கள் காலத்தில் அரண்யத்தில் வசித்த காபாலிகக் கூட்டம் கொலை செய்யத் தயங்காது அஹிம்சையால் சுதந்திரம் வாங்கிய […]

கவிதைகள்

This entry is part 33 of 41 in the series 8 ஜூலை 2012

கண்ணெதிரே சிறிது சிறிதாக மறந்து வருகிறேன் இன்னாருக்கு கணவன் என்பதை இன்னாருக்கு தகப்பன் என்பதை தான் எந்தப் பொறுப்பில் இருக்கிறோம் என்பதை சொந்த பந்தங்களை அண்டை வீட்டுக்காரர்களை முக்கியமாக வீட்டின் முகவரியை தொலைபேசி எண்களை வங்கிக் கணக்குகளை வாகனத்தின் இலக்கங்களை மொழியின் அவசியத்தை உடையின் அலங்கோலத்தை சாலை விதிகளை வசிக்கும் ஊரின் பெயரை திசைகள் நான்கு என்பதை நேர்ந்த அவமானங்களை உதாசீனப்படுத்திய உள்ளங்களை பசியை மறந்து மயங்கி விழ இறந்ததையும் மறந்து நடந்து கொண்டிருக்கிறேன். பெருஞ்சுவர் நீங்கள் […]

கவிதைகள்

This entry is part 32 of 41 in the series 8 ஜூலை 2012

ஓம் ஸாந்தி ஸாந்தி நதிப் பிரவாகம் பேதம் பார்ப்பதில்லை மதுக் குப்பிகளை திறக்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வருகிறது இரவின் நாயகி நீயெனவும் பகலின் நாயகன் நானெனவும் விந்தை மனிதர்கள் விரைவில் புரிந்து கொள்வர் இரவுக்கு ஆகாரமாகவும் பகலுக்கு ஆதாரமாகவும் நீ இருக்கிறாய் சக்தி ஆட்டுவிக்கிறாள் சிவன் நடனமாடி களிக்கிறான் விழிகள் போடும் கோலங்களை வியந்து போய் பார்க்கிறேன் நகத் தீண்டலிலே என்னுள் மிருகம் விழித்துக் கொள்கிறது ஆதி நாட்களில் பாம்பாக அலைந்து கொண்டிருந்த நடராஜரும் சிவகாமியும் […]

அறைக்குள்ளேயே வெகுதொலைவு (ஒரு அஞ்ஞானியின் ”ஆகா” கவிதைகள்) -1

This entry is part 31 of 41 in the series 8 ஜூலை 2012

1 கண்ணில் ஒரு பிடி ஆகாயம் தூவி விட்டுக் காணாமல் புள்ளியாய் மறையும் ஒரு சின்னப் பறவை. 2 கோடானு கோடி நட்சத்திரத் திருவிழாவில் ஒரே ஒரு யாத்ரீகன் நிலா செல்லும். 3 நட்சத்திரங்களை ’எண்ணுவதை’ விட நிலாவை ’எண்ணுவது’ மேல். 4 என் கூட்டம் ‘நான்’ சுருங்கி. 5 மினுக்கென்று எரியும் இந்த தீபம் தான் இந்த இரவில் என் துணை. தீபம் அணையும் முன் தூங்கி விடவேண்டும். 6 காலி நாற்காலியில் காலியாய் உட்கார்ந்திருக்கும் […]

கள்ளக்காதல்

This entry is part 19 of 41 in the series 8 ஜூலை 2012

    காதலன் இல்லாமல் வாழ்ந்துவிட முடிகிறது கவிதை இல்லாமல் வாழ்வது ?     கட்டில் மெத்தையில் காமம் கூட அந்த மூன்று நாட்கள் முகம் சுழித்து விலகிக்கொள்கிறது. கவிதை மட்டும்தான் அப்போதும் காற்றாய் சிவப்புக்கொடி ஏந்திய தோழனாய் துணைநிற்கிறது.   சுவடிகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கவிதைமொழியை விடுதலையாக்கிய பாட்டனின் பாடல் வரிகள் எல்லைகள் தாண்டி எப்போதும் என் வசம்.   ஆளரவமில்லாத காட்டுப்பாதையில் பூத்திருக்கும் செடிகளின் இலைகளின் அசைவில் கவிதைமொழி கண்சிமிட்டி கண்ணீர்விட்டு கட்டி அணைக்கிறது. […]