Articles Posted in the " கவிதைகள் " Category

 • பீதி

  பீதி

  அலங்கரிக்கப்பட்ட மலர்ப் பாடையிலிருந்து அறுந்து வீழ்ந்து மிதிபட்டு நசுங்கி- வறிய தெருநாய் சாவினை முகர்ந்ததெனும் நறுமாலைகள் சிதறிக் கிடக்க- நகர்ச் சாலையில் சுடலை நோக்கி சாவதானமாய் நகரும் சவ ஊர்வலத்தின் பின் வழி விட- விடாது ஒலி ஒலித்து இங்கிதமற்ற பேருந்து அவசரப்படுத்தும் பதற்றத்தில் பிணம் பயந்ததெனும் பயம் பிணத்தினின் பயமாயிருக்கும்- விழி இடுங்கிப் பிணத்தை வெறித்தபடி ஊரும் பேருந்துக்குள் உறைந்து கடக்கும் எனக்கு. கு.அழகர்சாமி


 • டெனிஸ் ஜான்சன் கவிதைகள்

  தமிழில்: ட்டி. ஆர். நடராஜன்  1. ஏறுதல்  நடப்பவர்களுக்கான சாலைக் கோடுகளின் மேல் விழும் வெண்மேக நிழலுக்குக் கீழே ஒரு நாள் விழுந்து கிடப்பேன்  சாலைமேல் எனது மருந்துகள் அடங்கிய பையிலிருந்து மாத்திரைகள் சிதறி விழும். ஒய்வு பெற்ற  கிழங்களும்,  மெக்சிகோ இளைஞர்களால் ஆன தெருக் கும்பலும் என்னைத் தின்னும் வியாதிகளைப் பார்ப்பார்கள். என் உள்ளாடையையும், சிலந்தியின் வலையெனப்  படர்ந்திருக்கும்  கிழவிக் கால் நரம்புகளையும் பார்ப்பார்கள். ஆகவே இளைஞனான கறுப்பின டிரைவர் அவர்களே !   நான்  பொருட்படுத்துவதெல்லாம் இதுதான்: இருக்கையின் மேல் வைத்திருக்கும் என்  பொருட்களைப் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் சொர்க்கத்திலிருந்து […]


 • பல்லுயிர் ஓம்பல்

  பல்லுயிர் ஓம்பல்

  வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் காலியாக்குகிறேன். குதிரை கனைப்பு தளர்கிறது. வயிறு காலியானால் வாய் எல்லாம் வேள்வி செய்யும் ஒரு குவளை மதுகொண்டு நிரப்பிப்பார் தென்றலில் மயங்காமல் தேடித்தேடிக் கொண்டுவா. பல்லுயிர் ஓம்பப்பழகு. யானையின் துதிக்கையில் தானமாகும் தானியங்கள்        களிறுகள் எப்போதும்        அசைந்து அசைந்து        வயிற்றை நிரப்பிக்கொண்டிருக்கும். அப்பொழுதும் அவற்றின் கவனம் அங்குசத்தின்மீதே இருக்கும். எல்லாமே தேடிப்பார்த்தால் வயிற்றை நிரப்புவதே வாய்ப்பான தொழில்


 • மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

  மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் [ Jaroslav Seifert – Czechoslovak Poet 1901—1986 ] ஆங்கிலம் : எவால்ட் ஓசர்ஸ்   [ Ewald Osers ] தமிழில்   : தி.இரா.மீனா கவிஞனாக இருப்பதென்பது வாழ்க்கை நமக்குத் தரமுடிகிற பூமியின் மிக அழகான விஷயங்கள் இசையும் கவிதையும் என்று எனக்கு பலகாலங்களுக்கு முன்பே வாழ்க்கை கற்றுத்தந்தது. நிச்சயமாக காதல் நீங்கலாகத்தான். விருசிலிக்கி இறந்த ஆண்டில் இம்பீரியல் அச்சு மையம் பிரசுரித்த ஒரு பழைய பாடப் புத்தகத்தில் கவிதைக் […]


 • மூட முடியாத ஜன்னல்

  மூட முடியாத ஜன்னல்

  எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே சடுதியில் மழை புறாக்கள் சிறகடிப்பது போல். மழையோடு மழையாய் மறைந்தனவா அவை? எப்போதும் என்னறையின் ஜன்னலின் பின் அடையும் அவை காணோம். அறை ஜன்னல் திறந்து பார்க்கலாம். ஆனால், எப்படி அறை ஜன்னல் மறைத்துப் பொழியும் நீர் ஜன்னலைத் திறப்பது? மழை ஓய்ந்தால் நீர் ஜன்னல் திறக்கலாம். மழை ஓயத் திறக்க நீர் ஜன்னல் காணோம். எப்போதும் திறக்காத என் அறை ஜன்னலை இப்போது திறந்து காத்திருப்பேன்- புறாக்களுக்காக. திரும்பி வந்த […]


 • நான்கு கவிதைகள்

  நான்கு கவிதைகள்

      பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென வேண்டி நிற்பதுவே வேண்டலின் மீது படர்ந்திருக்கும் பற்றுத்தான். ஆசையை அழித்து விடு என்று பறைவதில் ஒளிந்திருப்பதும்  ஆசையின் ஒலியன்றோ? இயல்பு வனத்தில் மேய்வது இனத்தின் இயல்பு. பிரித்துக் காட்டுவது அறிவின் தாக்கம்.   விமர்சகன் அந்தக் கண்ணாடியின் முன்நின்றவர்கள் தங்களைப் பார்த்து விட்டு ரசம் போய்விட்டதென்றார்கள். ரசமெல்லாம் கச்சிதமாகத்தான் இருந்தது. அவர்கள் காணவிரும்பிய தோற்றத்தைத்தான் அது காண்பிக்கவில்லை. (நி)தரிசனம் ஜில்லென்ற புல்வெளியில் காலை அழுத்தித் தேய்த்து நடந்தான். ‘ஆஹா, என்ன சுகம்’ […]


 • கவிதையும் ரசனையும் – 9

  அழகியசிங்கர்             இந்தப் பகுதியில் இப்போது எழுதப் போவது பேயோன் கவிதைகள் பற்றி.  ‘வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை’ என்ற புத்தகம் 2016ல் வெளிவந்துள்ளது.  அதில் அவருடைய எல்லாக் கவிதைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள்.             அதில் ஒரு வேடிக்கையான கவிதையைப் பற்றி இங்குக் குறிப்பிட விரும்புகிறேன்.             நம் முன்னாள் வாழ்ந்த ஒருவரை நையாண்டிப் பண்ணி கவிதை எழுதுவது சமீபத்தில் நடக்கும் நிகழ்ச்சி.  சிறுகதையிலோ கவிதையிலோ அவர் ஒரு பாத்திரமாக மாறி தென்படுவார்.          குறிப்பாக நகுலனைப் பலர் பகடி பண்ணி எழுதியிருக்கிறார்கள். […]


 • இருப்பதோடு இரு

  இருப்பதோடு இரு

  ஒரு வண்டு சிலந்தியிடம் சொன்னது ‘உன்னைப்போல் இருந்துண்ணவே ஆசை எனக்கும் – ஆனால் வலை செய்யும் கலை அறியேனே’ சிலந்தி வண்டிடம் சொன்னது ‘சும்மா இருப்பது சோம் பேறித்தனம் பறந்துண்ணவே ஆசை எனக்கு – ஆனால் றெக்கைகள் இல்லையே’ இறைவனிடம் சென்றன இரண்டும் கேட்ட வரங்களைத் தந்தான் இறைவன் வலைபின்னியது வண்டு பறந்தது சிலந்தி ஒரு நாள் கூடாத இடத்தில் கூடுகட்டி பறவை செத்தது பறக்கக் கூடாத இடத்தில் பறந்து சிலந்தியும் செத்தது அமீதாம்மாள்


 • திருநீலகண்டர்

  திருநீலகண்டர்

  அவன் உணவு மேஜையில் அவனுக்கென்று தயாரிக்கப்பட்ட விஷ உணவை அவன் அடிக்கடி உண்டு தீர்க்கிறான் அவனைச் சிறைப்படுத்தும் பிரச்சனைகள் பின்னர் அவன் காலடியில் மிதிபடுகின்றன வெட்டப்பட்ட சிறகுகள் அவனுக்கு மட்டும் மீண்டும் வளர்ந்துவிடுகின்றன அவ்வப்போது  துயரங்களை உள்வாங்கி அவன் சீரழித்து வாழ்கிறான் கிட்டாதனவற்றின் பட்டியலை அவன் உதறிவிட்டு நடக்கிறான் —- இதோ இன்னும்கூட  விஷ உணவுகள் அவன் மேஜையில் காத்துக் கொண்டிருக்கின்றன.


 • கோடுகள்

  கோடுகள்

  அந்தக் கவிஞன் கோடுகளை முக்கியமாக நினக்கிறான். அவன் இணைகோடுகள் என எண்ணிக் கரம் கோர்த்தவை குறுக்கு வெட்டுக் கோடுகளாய் மாறியது அவனுக்கு ஒரு சோகம். மணமக்களை இணைகோடுகளாய் என்று வாழ்த்துவது என்றுமே சேர முடியாதவர்கள் என்றுதான் பொருள்படும். அப்படி வாழ்த்தப்பட்டவர்கள் இன்று வழக்கு மன்றப்படியில் நிற்கிறார்கள். தண்டவாளங்களும் மேலே தொங்கும்  மின்சாரக் கம்பிகளும்தான் ஆசிரியர் இணைகோடுகள் என்று சொல்லித் தந்தார் இரண்டுமே ஆபத்தானவை. குறுக்கு வெட்டுக்கோடுகளும் வாழ்வில் முக்கியமானவை. அனுபவம் கற்றுத் தருபவை கண்டிப்புகளும் சங்கடங்களும் அனுபவம்தானே […]