Articles Posted in the " இலக்கியக்கட்டுரைகள் " Category

 • வெறுக்காத நெஞ்சம் – ஜனநேசன் கதைகள்

  இந்தியர் பலரின் வாழக்கையை உலுக்கிப் போட்ட, போட்டுக் கொண்டிருக்கும் பண மதிப்பிழப்பு, காதலர் தினக் கொண்டாட்ட எதிர்ப்பு, மாட்டிறைச்சிக்குத் தடை … எனப் பிரச்னைகள் சிலவற்றைக் கதைகளாக்கிப்பார்த்திருக்கிறார் ஜனநேசன். சித்தாள் வேலைக்குப் போய் கீழே விழுந்து, அதனால் இடுப்பொடிந்து வயிற்றுப் பிழைப்புக்காக அதிகாலை இருட்டில் குப்பை திரட்டிப் போடும் வேலை பார்க்கிறவனுக்கு ஒருநாள் ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து கிடைத்த ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மகிழ்ச்சிக்குப் பதில் கவலையையும் கலவரத்தையும் அளித்ததைக் ‘காரணம் அறிகிலார்’ என்ற தலைப்பில் […]


 • ஒரு கதை ஒரு கருத்து

  பி.எஸ் ராமையாவின் ‘மலரும் மணமும்’ அழகியசிங்கர்             நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகம் பெயர் ராமையாவின் சிறுகதை பாணி.  இதை எழுதியவர் சி.சு செல்லப்பா. சி.சு செல்லப்பா ராமையாவை தன் குருநாதராக ஏற்றுக் கொண்டிருந்தார்.               சி.சு.செல்லப்பா சொல்கிறார்: பாரதி மகாகவி என்றால் ராமையா மகா கதைஞன். அவரை போன்ற  மேதைப் படைப்பாளிகள்தான் எதிர்கால இலக்கியத்துக்குத் தேவை.               ராமையாவின் கதையான ‘மலரும் மணமும்’ கதையைப் படித்துப்பார்த்தேன்.  சி சு செல்லப்பா அப்படிக் கூறுவதில் எந்தத் தவறும் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது.               பொதுவாக […]


 • ஏப்ரல் மாத ‘புத்தகம் பேசுது’ இதழ் குறித்து என் பார்வை

  அழகியசிங்கர்             புதிய புத்தகம் பேசுது என்ற ஏப்ரல் மாத இதழ் என் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. பொதுவாக என் வழக்கம் என்ன என்றால் எனக்கு வருகிற பத்திரிகையில் எதாவது ஒரு பகுதியை மட்டும் படித்து விட்டுத் திரும்பவும் படிக்கலாம் என்று வைத்துவிடுவேன்.               ஆனால் இந்த முறை முழுவதும் படித்தேன்.  இது ஒரு அருப்புக்கோட்டை சிறப்பு இதழ் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆசிரியர் முத்துகுமாரியுடன் ஒரு பேட்டி. இவர் ஒரு ஆசிரியை.  பாடம் நடத்தும்போது குழந்தைகளிடம் அவர் வாசித்த புத்தகங்களைப் பற்றிக் கூறுவதாகப் பேட்டியில் கூறியிருக்கிறார். இந்தப் பேட்டியில் எனக்கு […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                          வளவ. துரையன்                                                    ஏறு களிறெனஏறி எரிவிழி                               ஈசர் பதினோரு தேசரும்                         கூருபடுபிறை ஆறு சுழல்சடை                               யோடு முடுகினர் கூடவே.               251   {ஏறு=காளை; களிறு=யானை; எரிவிழி=நெருப்புடைய கண்; கூறு=துண்டான ஆறு; முடுகுதல்=விரைதல்]   யானைகளில் ஏறி மற்ற தேவர்கள் வந்த்தைப் போலவே உருத்திரர் பதினொருவரும் பிறைச் சந்திரனும், கங்கை ஆறும் கூடிய சுருண்ட சடைமுடியுடன் வந்தனர். பதினொருவர்: மகாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், நீலலோகிதன்; ஈசானன், […]


 • கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  கவிதையும் ரசனையும் – 14 ஆத்மாநாம்

  அழகியசிங்கர்                  இந்தப் பகுதியில் இதுவரையில் ஆத்மாநாம் பற்றி எதுவும் எழுதியதில்லை.  ஏன்?  உண்மையில் நான் ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி இரண்டு மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொடரில் அவருடைய சில கவிதைகளை எடுத்து எழுத வேண்டுமென்று நினைக்கிறேன்.               ஆத்மாநாம் உயிரோடு  இருந்தபோது நான் இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன்.  ஒரு முறை கவிஞர் வைத்தியநாதனுடன் ஆத்மாநாமைச் சந்தித்திருக்கிறேன். வேறு ஒரு நண்பர் வீட்டிற்குப் மூவரும் போனோம்.  அப்போதுதான்             நான் ஆத்மாநாமிடம் அந்தக் கவிதையைப் பற்றி அர்த்தம் கேட்டேன்.     நிஜம்   நிஜம் நிஜத்தை நிஜமாக  […]


 • எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  எஸ்எம்,ஏ ராம் சில நினைவுகள்

  அழகியசிங்கர் எஸ்எம்,ஏ ராம் இறந்து விட்டார் (02.04.2021) என்ற செய்தியை பாரவி மூலம் அறிந்து வருத்தப்பட்டேன். ராமைப் பல ஆண்டுகளாக அறிவேன். நானும் அவரும் மாம்பலம் ரயில்வே நிலையத்தில் விடைபெறும் தறுவாயில் பல மணி நேரம் பேசியிருக்கிறோம் அவர் அதிகம் படித்தவர். தனியார்ப் பள்ளியில் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவர் நாடகம், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒரு நாவலும் கூட. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில். ‘தாத்தா காலத்து பீரோ’ என்ற அவருடைய சிறுகதைப் புத்தகம் […]


 • முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

  முதல் மரியாதை தமிழில்  ஒரு செவ்வியல் திரைப்படமா ?

    நடேசன் –  அவுஸ்திரேலியா   —————————————————————————— இளமைக்காலத்தில்  இயக்குநர் பாரதிராஜாவின்  முதல் மரியாதை திரைப்படத்தை   பார்த்தபோது,  என்னைக் கவர்ந்தது என்னவென்றால்,   அக்காலத்தில்  சிவாஜி ரசிகனாக இருந்த  எனக்கு   மத்திய வயதான ஒரு வருக்கு  இளம் பெண்ணில் ஏற்பட்ட காதல் ஒரு புதுமையாகவிருந்தது.   இது நல்ல திரைப்படமென்ற நினைவே மனதிலிருந்தது. சமீபத்தில்  அதனை  தமிழின் செவ்வியல் படம் எனக்குறிப்பிட்டு  பலர் எழுதியதைப் படித்தபின்பு,  மீண்டும் பார்ப்போம் எனச் சமீபத்தில் பார்த்தபோது இந்தப்படம் புரட்சியானதோ புதுமையானதோ அல்ல,  படு […]


 • திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  திருவளர் என்றாலும்… திருநிறை என்றாலும்…

  கோ. மன்றவாணன் நண்பர் ஒருவருக்காகத் திருமண அழைப்பிதழை எழுதி அச்சடிக்கக் கொடுத்தேன். மெய்ப்புத் தந்தார்கள். திருநிறை செல்வன் என்றும் திருநிறை செல்வி என்றும் நான் எழுதித் தந்திருந்தேன். ஆனால் அவர்கள் திருநிறைச் செல்வன் என்றும் திருநிறைச் செல்வி என்றும் தட்டச்சு இட்டிருந்தார்கள். ச் போடக் கூடாது என்று, ச் – ஐ சிவப்பு மையால் மறைத்திருந்தேன். ஆனால் அச்சகத்தார் ச் – ஐ நீக்காமல் அச்சடித்துவிட்டார்கள். ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டதற்கு, ச் போட்டு அடிப்பதுதான் […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                                                         வளவ. துரையன்                      என்று பேய்அடைய நின்று பூசல்இட                         இங்கு நின்று படைபோனபேய்                   ஒன்று பேருவகை சென்று கூறுகஎன                         ஓடி மோடி கழல் சுடியே.               241   [பூசல்=ஆரவாரம்; பேருவகை=மகிழ்வு; மோடி=துர்க்கை; கழல்=திருவடி; சூடி=அணிந்து]   இப்படிப் பேய்கள் எல்லாம் சேர்ந்துத் தங்கள் பசித்துயர் பற்றி ஆரவாரக் கூச்சல் இட, வீரபத்திரர் படையுடன்  சென்ற […]


 • ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

  ஒரு கதை ஒரு கருத்து – தி.ஜானகிராமனின் பாயசம்

            அழகியசிங்கர்                         ‘பாயசம்’ என்ற கதையைப் படித்தேன்.  சாமநாது என்பவரின் மன வக்கிரம்தான் இந்தக் கதை.  சிறப்பாக எழுதி உள்ளார் தி.ஜானகிராமன்.                ஆரம்பிக்கும்போதே தி.ஜானகிராமன் இப்படிக் குறிப்பிடுகிறார்.                ‘சாமநாது அரசமரத்தடி மேடை முன்னால் நின்றார்.  கல்லுப் பிள்ளையாரைப் பார்த்தார்.  நெற்றி முகட்டில் குட்டிக் கொண்டார். தோப்புக்கரணம் என்று காதைப் பிடித்துக்கொண்டு லேசாக உடம்பை மேலும் கீழும் இழுத்துக்கொண்டார்.’               இதையெல்லாம் செய்துகொண்டு வரும் தன் மனதில் வக்கிரத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார். […]