தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

இறக்கும்போதும் சிரி

அமீதாம்மாள்

Spread the love

உழைத்துச் சேர்
உறிஞ்சிச் சேர்க்காதே
கன்றுண்ட மிச்சமே கற

செயலால் நில்
செல்வத்தால்
நிற்காதே

சுமையாய் இராதே
சுமைதாங்கியாய் இரு

ஈந்து கொண்டிரு
எறிவதை ஈயாமலிரு

அந்நியமாக்காதே
சொந்தங்களை
சொந்தமாக்கு
அந்நியங்களை

முகமறிய மோதினால்
முத்த மிடு
துரோகிகளைக்
துரத்தி விடு

புகழ்
அதுவாக வந்தால் எடு
வராவிட்டால் விடு

உன்னால் அழுதோரை
உனக்காக அழுவோரைத்
தொழு

ஒன்றுக்கு நூறு தரும் மண்
அந்த மண் உனைத்
தின்னுமுன் மண்ணாகு

இத்தனைக்கும் சொல் ‘சரி’
இறக்கும்போதும் சிரி

அமீதாம்மாள்

Series Navigationபாசாவின் கர்ண பாரம்நீலம்

3 Comments for “இறக்கும்போதும் சிரி”

 • பவள சங்கரி. says:

  அன்பின் அமீதாம்பாள்,

  இறக்கும் போதும் சிரிக்க நல்ல உபாயங்கள்!

  அன்புடன்

  பவள சங்கரி.

 • punai peyaril says:

  உண்மைகள்…. அனுபவ வரிகள் அருமை….

 • Karunanithy says:

  கடைப்பிடிக்க வேண்டிய வழி மொழிகள்,அர்த்தமானவை.


Leave a Comment to punai peyaril

Archives