தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

வினாடி இன்பம்

அ.லெட்சுமணன்

 

மாநகர பஸ்ஸில் ஜன்னலோர பயணம்

முன்னால் போனது இரண்டு சக்கர வாகனம்

அம்மாவின் மடியில் மூன்று வயது பெண் குழந்தை

சிக்னலில் நின்றது வாகனங்கள்

குழந்தையை பார்த்து நாக்கை துருத்தினேன்

குழந்தை திரும்பி நாக்கை துருத்தினாள்

முகத்தை அஸ்ட கோணலாக்கி ஒரு சிரிப்பு வேறு

சிக்னல் மாறி வண்டி கடந்து விட்டது

நான் வாசித்ததிலேயே இன்றளவும்

சிறந்த கவிதை அது தான்

 

 

Series Navigationபருவமெய்திய பின்தன் இயக்கங்களின் வரவேற்பு

One Comment for “வினாடி இன்பம்”


Leave a Comment

Archives