தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

மௌனத்தின் முகம்

குமரி எஸ். நீலகண்டன்

Spread the love

எப்போதும் மௌனமாய்
இருப்பதே உசிதமென
இருந்து விட்டேன்.

யாரிடமும் பேசுவதில்லை.
தவிர்க்க முடியாத
தருணங்களில்
ஓரிரு வார்த்தைகளை
தானமாய் விட்டெறிவேன்..

என் கண்களைக் கூட
பேசவிடாது
குனிந்து விடுவேன்.

வெளியே எல்லோரும்
நானிருக்குமிடம்
அமைதியின் உறைவிடமென
உற்சாகமாய்
சொல்லிச் சென்றார்கள்.

நாட்கள் செல்ல
செல்ல என் மௌன
முகத்தின் அகத்துள்
உச்சமாய் கூச்சல்..
சதா சலசலப்பும்
உச்சந்தலையை குத்தும்
உட்கலவரம்.

காதுகளற்ற
அகத்தின் முகத்துள்
கலவரக் காயங்கள்.

இரக்கமின்றி இன்னும்
இறுகி இருக்கிறது
வெளியே மௌனம்.

Series Navigationதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7

3 Comments for “மௌனத்தின் முகம்”

 • ராமலக்ஷ்மி says:

  //காதுகளற்ற
  அகத்தின் முகத்துள்
  கலவரக் காயங்கள்.

  இரக்கமின்றி இன்னும்
  இறுகி இருக்கிறது
  வெளியே மௌனம்.//

  நன்று சொன்னீர்கள். பேசி விடுதலே உத்தமம்.

 • அமைதிச்சாரல் says:

  என்னதான் அமைதியாக இருப்பதாக வெளியே காட்டிக்கொண்டாலும், உள்மனக்கூச்சல் ஓய்வதில்லை..

 • ramani says:

  Forced silence is unsound. Sealing the lips or putting the bridle on one’s tongue will not bring tranquility. But why the inner face is earless?


Leave a Comment

Archives