திண்ணையின் இலக்கியத் தடம்- 33

This entry is part 1 of 31 in the series 4 மே 2014

சத்யானந்தன்

ஜனவரி 6 2005 இதழ்:

மக்கள் தெய்வங்களின் கதைகள்-16 – அ.கா.பெருமாள்-ஆந்திரமுடையார் கதை
படைப்பு

சுனாமிப் பேரழிவும் அரசியலும் : அனுபவக் குறிப்புகள்-ஜெயமோகன்- ஜெயமோகன் பயணக் கட்டுரைகள் கூட எழுதுவார் – ஆனால் ஒரு ரிப்போர்ட்டராக ஒரு முக்கியமான சம்பவப் பின்னணியில் ஒரு கள விவரமான கட்டுரை எழுதுவது அபூர்வம். சுனாமி பற்றிய அவரது கட்டுரை இது. ஆர் எஸ் எஸ் மற்றும் தமுமுக இரண்டு இயக்கங்களின் தொண்டுப்பணிகள் ஊடகங்களால் இருட்டடிப்புச் செய்யப் பட்டன, கொச்சைப்படுத்தப் பட்டன என்று பதிவு செய்கிறார்.
படைப்பு

வெங்கட் சுவாமிநாதனின் கடிதம்: காலச்சுவடு அவதூறு வழக்குக்கு முன்பானதான ஒரு தாக்கீதை வெசாவுக்கு அனுப்புகிறது. அப்போதும் கூட அவர்களுடன் தனக்கிருந்த நல்லுறவை நினைவு கூர்ந்து அதன் அடிப்படையில் மன்னிப்புக் கோரத் தாம் தயார் என்றே வெசா பதிலளிக்கிறார். பதிவுகள் இணையத்தில் மனுஷ்ய புத்திரன் ஜெயமோகன் குறிப்பிட்ட விஷயங்களை எடுத்தாளுவதில் மட்டும் என்ன அவதூறு என்னும் கேள்வியையும் எழுப்புகிறார்.
படைப்பு

ஜனவரி 5 2005 இதழ்: அஞ்சலி :சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங்- நிலங்களை அரசிடமிருந்து விவசாயிகள் திரும்பப் பெற வழி அமைத்தவர்.
படைப்பு

வன்முறை: பாலுறவு : தணிக்கை- யமுனா ராஜேந்திரன்
திரைப்படங்களில் பாலுறவுச் சித்தரிப்பு தொடர்பான பிரச்சனையில் மூன்று பரிமாணங்கள் இருக்கின்றன. பெண் உடலை நுகர்பொருளாக்கிச் சித்தரிப்பது அதில் முதலானது. பெண் உடலின் மீதான வன்முறையை ருசிகரமாக்கிச் சித்தரிப்பது இரண்டாவது. மூன்றாவதாகப் பெண் உடலை வன்முறையிலிருந்து சுரண்டலில் இருந்தும் விடுவிக்கும் பொருட்டு அதன் இன்ப நோக்கைச் சித்தரிப்பது.

படைப்பு

கலாசாரச் சிலுவையை சுமக்க வேண்டியது பெண்கள் மட்டுமா? – ராமச்சந்திரன் உஷா
கலாசாரச் சீரழிவு மற்றும் அதற்கான காரணங்கள் அதைக் கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு இவை அனைத்தும் பெண்களை மையமாக வைத்தே சொல்லப் படுகிறது.

படைப்பு

ஜனவரி 13,2005 இதழ்:
பெண்ணின் உடையும் உணர்வுகளும்- ராமச்சந்திரன் உஷா
தூணுக்குப் புடவை சுற்றினாலும் ஜொள்ளு விடும் ஆண்கள் திருத்தப் பட வேண்டுமே ஒழிய எங்களுக்கு எப்படி உடையணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்காதீர்கள்.
படைப்பு

பின் நவீனத்துவம், தேசியம், சோஷலிஸம், கலாசார சார்பு வாதம்- இஜாஸ் அஹமதுவின் பேட்டி- தமிழில் யமுனா ராஜேந்திரன்
காந்தியை உந்தித் தள்ளியது எது? அவர் ஹிந்து சீர்திருத்தவாதியானதற்கான காரணம் என்ன? அவர் ஹிந்து சீர்திருத்தவாத வெளியை எடுத்துக்கொள்ளவில்லை எனில் இந்தியா இந்து பாசிசமாகப் போவதற்கான வாய்ப்பு அன்று இருந்ததுதான்.
படைப்பு

மக்கள் தெய்வங்களின் கதைகள்-17 – அ.கா.பெருமாள்- தடி வீரசாமி கதை
படைப்பு

உயர் பாவை 4- மாலதி
எல்லா உயிர்களுக்கும் சரீர குணங்களும் ஆத்ம குணங்களும் உண்டு. அப்படியே பரமனுக்கும் உண்டு.
படைப்பு

ஜனவரி 20 2005 இதழ்:
தியாகத்தின் கதை- போர்க்குதிரை- நூல் அறிமுகம் – பாவண்ணன்
கட்டபொம்மனைப் போல சூ என்னும் பூர்விக அமெரிக்கப் பழங்குடி இந்திய மக்களின் இதையத்தில் தொன்மமாக நிறைந்திருப்பவர் போர்க்குதிரை.
படைப்பு

அஞ்சலி- சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங் -ஆசாரகீனன்- அரசுடமையான நிலங்களை விவசாயிகளுக்கு திரும்ப அளிக்க வழிகோலியவர்.
படைப்பு

மதம் அலுத்துப் போனது – மாதவிக் குட்டியின் கட்டுரை- தமிழில் இரா.முருகன்
நான் இப்போ ஒரு நாவல் எழுதிக்கிட்டு இருக்கேன். அது ஒரு முஸ்லீம் பெண் எழுதக் கூடியதில்லை. அதனால் என்னை மதத்தை விட்டு விலக்கி வைக்கலாம்.
படைப்பு

குர்பான்- அ.முகம்மது இஸ்மாயில் -முஸ்லீம் என்றால் இறைவனுக்கு முற்றிலும் வழிபடுதல் என்று பொருள்.
படைப்பு

ஜனவரி 27 2005 இதழ்:
விடைபெறுகிறேன்- ஞாநி கடிதம்
மிராசுதார்களின் அரட்டை – அவதூறுக் கச்சேரிகள் நடக்கும் திண்ணையாக இதழியல் சிதைக்கப்படும் நிலையில் நீங்கள் இழிவுபடுத்துவது கூட எனக்கு அளிக்கப் படும் கௌரவமேயாகும்.
படைப்பு

பிப்ரவரி 3 2005 இதழ்:

கண்ணன் காலடியில்- சின்னக் கருப்பன்- எனது மூதாதையர்கள் குரங்குகள் தான். அதற்காக நான் வெட்கப் படப்போவதில்லை.
படைப்பு

எழுத்தின் ஒருக்குமுறை- மாலதி
“சிறு பத்திரிக்கை உலகம் nudist colony. இங்கு யாருடைய நிர்வாணமும் யாரையும் உறுத்தாது. இங்கு ஆடை தான் ஆபாசம்” என்று நான் பன்முகத்தில் எழுதியது திரித்துப் பேசப் பட்டது.
படைப்பு

பிப்ரவரி 6 2005 இதழ்:

கவிதை கோபுரத்தின் பொற்கலசங்கள்- புதிய மாதவி-

பட்டாம் பூச்சிப் பிடித்துக் கொடுத்தேன்
இறக்கை முளைத்தது
என் மகளுக்கு
படைப்பு

பிப்ரவரி 25 2005 இதழ்: சிந்திக்க ஒரு நொடி-வாஸந்தி- வாழ்வதும் சாவதும்- யார் தற்கொலை செய்ய முயன்றாலும் அது ஒரு ஆழமான மனச் சோர்வின் அடையாளம்.

படைப்பு

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *