தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 மே 2019

தண்ணீர்கள்

சத்யானந்தன்

Spread the love

 

 

சத்யானந்தன்

 

குழாயில் ஒன்று

கிணற்றில் வேறு

அருந்தும் கோப்பையில் பிரிதொன்று

தண்ணீர்கள் தானே?

 

மறுதலித்தார்

பின் மௌனமானார்

என்னுடன்

 

மூன்று கைத் தோழனாய்

மின்விசிறியையே

வெறித்திருந்தார்

இறுதி நாட்களில்

 

துண்டுப் பிரசுரங்களாய்

அவர் பதித்த பாடல்கள்

எங்கே மறைந்தன?

 

சுருதி மாறாத

மின் விசிறிச்

சொல்லாடலை

அவதானிக்கும் பொழுதுகளில்

அவர் நிழலாடுகிறார்

 

இதன் தோழமை

அவரின் இலக்கணமில்லை

Series Navigation

Leave a Comment

Archives