தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

நினைத்த விதத்தில்

ரமணி

Spread the love

சுவர்கள் அடக்கின உலகின்
மௌனம் சலித்த போது
இரும்புக் கம்பிகளில் நெய்த
ஜன்னலின் பின் வி¡¢யும்
செவ்வக உலகின்
முப்பா¢மாணக் கோணல் இயக்கங்கள்
காண ஏங்கும் சின்னக் குழந்தைக்கு
உயர உபயம் தரும்
பாத்திரப் படியாய்
இருந்திடச் சம்மதம்தான்!

கோதண்ட ராமர் கோவிலின்
வெளிப் பிராகாரத்தில்
உள் தேடும் பொருளின்
செந்தூரம் கலந்த பொழுதின்
மயக்கத்தில்
குட்டிப் பாவாடையும்
நீண்ட மௌனமுமாய்ப்
பொருந்தின குழந்தைக்கு
முதுகு கொடுக்கும்
கல் யானையாய்ச் சமைந்திடவும்
சம்மதம்தான்!

அல்லது பின்னாளில்
வாழ்க்கைப் பெருவெளியில்
அகமும் புறமும் அலைக்கழிக்க
ஆத்ம ஞாபகங்கள் சேகா¢க்கும்
போ¢ளம் பொழுதுகளில்
ஸ்னேகம் பொதிந்து
மாற்றுச் சுயமாய் இருந்திடவும்
சம்மதம்தான்!

–ரமணி

rramani7@hotmail.com

Series Navigationகாணாமல் போன தோப்புகாக்கைப்பாடினி நாடோடியாய் அலைகிறாள்

One Comment for “நினைத்த விதத்தில்”

  • sabeer says:

    //முதுகு கொடுக்கும்
    கல் யானையாய்ச் சமைந்திடவும்//

    smart


Leave a Comment

Archives