தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 அக்டோபர் 2020

நேய சுவடுகள்

சித்ரா

Spread the love

நேயத்திற்கு
மொழி உண்டா,
எழுத்து வடிவத்துடன் !!

சகதியில் சிக்கிய
பசுவின் அலறலும்,
காப்பாற்றுகிற கைகளினால்
சகதி துமிகளின் ‘தப்…திப்பு’ களின்
பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக..

கை கொடுக்காத
அச்சச்சோக்களும் அய்யையோக்களும்
ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல..

காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி சென்ற
இயல்பான வழிபோக்கனின்
கால்சுவடும்..
அதை ஒட்டியபடி நெடுக
தொடர்ந்த பசுவின்
கால்சுவடும்..

நேய மொழிக்கான
எழுத்து வரிசை வடிவமாய்
அரங்கேறியது சகதி படிமத்தில்..

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigationஅடைக்கலம்வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.

Leave a Comment

Archives