தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

இன்று இடம் உண்டு

சத்யானந்தன்

வெற்றி தோல்வி
பொருட்டல்ல
போர்க்களம் புகுந்தவரையே
நிறைத்திருக்கும் வரலாறு

நிலத்தை நேசிப்பவர்
குழந்தை வளர்த்து’
குடும்பம் பேணியவர்
சட்டம் மீறா
நிராயுதபாணிகள்
கல்வெட்டுக்களுக்கு
அன்னியமாய்

இவர் உரிமை
மையமாய்
வீர்ர் களம்
புகுந்ததில்லை

இரும்புக் கொல்லர்
செய்த எழுத்தாணிக்கு
அவரின் பெயரில்
எழுத எதுவுமிருக்கவில்லை

இப்போது எழுதலாம்
இடம் உண்டு
மரக்கிளைகளில்
மொட்டை மாடிகளில்
கிடக்கும் அறுந்த
பட்டங்களில்

Series Navigationதொடுவானம் 101. உன்னதமான உடற்கூறு.பாம்பா? பழுதா?

Leave a Comment

Archives