ஈரானின் மஹிஷாசுரமர்தினி

author
0 minutes, 48 seconds Read
This entry is part 11 of 12 in the series 4 ஜூலை 2016

குருவீரன்

 

durga
தேலமான் (Deylaman) என்ற வடக்கு ஈரான் பிரதேசத்தில் இந்த வெள்ளி கமண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்களும், வரலாற்றாய்வாளர்களும், இது துர்கா மஹிஷாசுரமர்தனி என்று அடையாளம் காட்டுகின்றார்கள். (1)

இன்னும் சுவாரஸ்யமாக, மிக அதிக தரம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் உருவாக்கத்துக்கும் இது புதிய பார்வைகளை தருகிறது. இது கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏழாம் நூற்றாண்டின் பின் பகுதியில் இருந்த ஷாஹி மற்றும் ஜுன்பில் அரசுகளின் மீது நடந்த அரபிய முஸ்லீம் படையெடுப்புகளில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. (2). இஸ்லாமுக்கு முந்திய ஆப்கானிஸ்தானில் துர்க்கை விக்கிரகங்களும் ஆராதனைக்கான தடயங்களும் இருந்திருக்கின்றன என்று அகழ்வாராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன் என்றாலும், ஹிந்து குஷ் மலைக்கு அப்பாலும் துர்க்கை வழிப்பாடு பரவலாக இருந்திருப்பது ஆச்சரியத்துக்குரிய ஒரு விஷயமாக உள்ளது. மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மந்த் ஆற்றுக்கு கிழக்கே உள்ள பிரதேசங்களை “அல் ஹிந்த்” என்று அரபியர்கள் அழைத்திருக்கிறார்கள். ஹெல்மந்த் பிரதேசத்தை ஆண்ட அரசரை “அல் ஹிந்தின் அரசர் என்றும் ஜுன்பில் என்ற பட்டப்பெயரை கொண்டவர்” என்று அரபியர்கள் குறித்திருக்கிறார்கள். (3). தென் கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏராளமான துர்க்கை மஹிஷாசுரமர்தனி சிலைகள் (பெரும்பாலும் பளிங்கினால் ஆனவை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காலம் பொது ஆண்டு 400இலிருந்து 800 வரைக்கும். காபூல் பள்ளத்தாக்கு மத ரீதியாக வலிமையான இந்து அடையாளம் கொண்டதாக இருந்திருக்கிறது. (4). கபிஸா நகரத்தில் மட்டும், க்வான்ஸ்வாங் Xuanzang(c.630) பதினெட்டு பிராம்மண கோவில்கள் இருந்ததாகவும், 1000க்கும் மேற்பட்ட சிலைகள் கொண்டதாகவும் குறிக்கிறார்.

durga1
durga2
durga3
Durga1 Durga2
Durga3

காபூலை ஆண்ட ஷாஹிகள் 18 அடி உயரமான வெள்ளி புத்த பிரதிமைகளை வழங்கியதை குறிக்கிறார் க்வான்ஸ்வாங். (630 பொதுஆண்டு). நமது வெள்ளி கமண்டலம் “ஹத்தா செவ்வியல்” படிமங்கள் கொண்டது. இது ”குப்தா மென்னுணர்வு” கொண்டது என்றும் குறிக்கிறார்கள். (7) தலையில் இருக்கும் பிறை (சந்திர பிந்து/அரை சந்திரன்) மற்ற இடங்களில் உள்ள சிவ அடையாளங்களோடு தொடர்பு கொண்டது. சூர்க் கோட்டல் நகரில் உள்ள கோனா மசூதியில் கிடைத்த விக்கிரகத்தோடு தொடர்பு கொண்டதாக இந்த வெள்ளி கமண்டலத்தை காணலாம். இந்த விக்கிரகம் குஷான காலத்துக்கு பிந்தியது.

சூர்க் கோட்டல் எழுத்துக்களில் குஷான் பேரரசர் கனிஷ்கர் , துர்க்கை (உமை) யை அவர்களது தேவியான நானா – உடன் அடையாளப்படுத்துகிறார் (9)

கனிஷ்கர் துர்க்கையை வழிபடுவதும், நானாவுடன் அடையாளப்படுத்துவதும் இந்த எழுத்துக்களில் தெரிகிறது.

Then King Kanishka gave orders to Shafar the karalrang [8] *at this . . . to make the sanctuary which is called B . . . ab, in the *plain of Ka . . ., for these [9] gods, (of) whom the glorious Umma leads the *service here, (namely:) the *lady Nana and the [10] lady Umma, Aurmuzd, the gracious one, Sroshard, Narasa, (and) Mihr.

பிறகு அரசர் கனிஷ்கர், ஷபார் என்ற கரல்ரங் -க்கு (8) “இங்கே . உமைக்கு முதன்மரியாதையாக … நானா, உமா, அவுர்முஜ்த், ச்ரோஷார்த், நரஸா, மிஹ்ர் ஆகிய தெய்வங்களுக்கு. கோவில் கட்ட, கா.. என்னும் சமவெளியில். ..B..ab என்னும் இடத்தில்,

நமது காலத்திலும் இப்படிப்பட்ட ஒருங்கிணைப்பு நடக்கிறது. “ஹிங்லா தேவி” என்று இந்திய மொழிகள் பேசுபவர்களால் அழைக்கப்படும் தெய்வம், பலுச்சிஸ்தான் ஆப்கானிஸ்தானில் உள்ள ஈரானிய மொழி பேசுபவர்களால் நானா அல்லது பீபி நானா என்று அழைக்கப்படுகிறாள். (10). குஷானர்கள் வியாபார தடங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள் என்றும், அவர்கள் இந்திய கடவுள்களை ஆப்கானிஸ்தானின் மையங்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றும் அறிய முடிகிறது.

khona

இந்த சிறிய ஷாஹி , மற்றும் ஜுன்பில் அரசுகள் (zunbil) ஆக்கிரமிப்பு படைகளாக வந்த சபாரித்களுக்கும் அரபுகளுக்கும் கடுமையான எதிர்ப்பை கொடுத்திருக்கிறார்கள் என்பதும் ஆச்சரியமானது. ஈரான் முழுமையையும் ஆக்கிரமிக்க இஸ்லாமிய ராணுவங்களுக்கு வெறும் 20 வருடங்களே ஆனது. மாறாக ஆப்கானிஸ்தானத்தில் இந்த அரசுகள் இஸ்லாமிய படையெடுப்புகளை கஜினியின் தந்தை சுபுடெஜின் லாக்மான் (ஆப்கானிஸ்தான்) அரசரான ஜெயபாலரிடமிருந்து பொது ஆண்டு 990 கைப்பற்றிய வருடம் வரைக்கும் எதிர்த்து நின்றிருக்கின்றன. இந்து காபூல் ஷாஹிகள் (ஸ்பெயினிலிருந்து தலாஸ் என்ற சைனாவின் இடம் வரைக்கும் பரவியிருந்த ) அரபு பேரரசின் ராணுவத்தை எதிர்த்து முன்னூறு வருடங்கள் நின்றிருந்தன என்பது மட்டுமல்ல, ஜுன்பில் அரசுகள் மேற்கே அரபு பேரரசின் நிம்ருஜ் வரைக்கும் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றன (11)

ஈரானின் டெஹ்கானி dehqani விவசாயிகளைவிட ஆப்கானிஸ்தானின் மலை சார்ந்த இனக்குழுக்களும், வீரம் செறிந்த தலைமையும் காரணம் என்று வரலாற்றாசிரியர்கள் சொன்னாலும், காபூல் பள்ளத்தாக்கின் இந்து அரசுகள் இஸ்லாமிய பேரரசுகளின் ராணுவங்களுக்கு மிகக்கடுமையான எதிர்ப்பை தந்தன என்பது மறுக்க முடியாதது.

எது காரணமாக இருந்தாலும் காபூல் ஷாஹிகள் அரபு மற்றும் துர்க்கிய படையெடுப்புகளை எதிர்த்து நின்றதே, இந்தியாவின் மையத்தை இஸ்லாமிய ஆக்கிரமிப்பு ஆக்கிரமிக்க பல நூற்றாண்டுகள் தாமதம் செய்தது என்பதே நிச்சயமானது.

Bibliography

1)Martha L. Carter Artibus Asiae, Vol. 41, No. 4

2)Ibid pp.325
3)Wink, Andre Al-hind: The Making of the Indo-islamic World V.1

4)Collections of Kabul museum

5)Beal, op. cit Vol 1 p.551

6)Walker, A catalogue of Arab-Byzantine and post reform Umayyad coins, London 1956 PP.3

7)Martha L. Carter Artibus Asiae, Vol. 41, No. 4 (1979)

8)D Schlumberger “De rhyton de Khona Masjid”(1971) PP.3

9) Kanishka Inscription at Rabatak(Surkh Kotal) 10-11. Translation by Bactrian linguist Nicholas Sims williams

10) DT Potts “Nana in Bactria”(2001) PP.23
11)Wink, Andre Al-hind: The Making of the Indo-islamic World V.1

12)R Frye, The Golden age of Persia PP.95-96


மூலம்

மொழிபெயர்ப்பு: வீரமணி

Series Navigationஜூலை – 04. சுவாமி விவேகானந்தர் நினைவு தின கவிதை`ஓரியன்’ – 3 , 4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *