+++++++++
பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
[76]
அடுத்தது கேட்கும் – ஏன், சீறிடும் கயவன்
எவனும் உடைத்திலன் குடித்த குவளையை;
குடத்தைப் பாசமாய், நளினமாய் வடித்தவன்
உடைக்க வில்லையா பின்னேர்ந்த சினத்தில்!
[76]
Another said – ‘Why, ne’er a peevish Boy,
Would break the Bowl from which he drank in Joy;
Shall He that made the vessel in pure Love
And Fancy, in an after Rage destroy? ‘
[77]
எதுவும் பதில் தரவில்லை இதற்கு; மௌனத்தில்
இருந்தபின் ஒரு குடம் விடைதரும் அலட்சியமாய்:
“என்மேல் வெறுப்புக் கொள்வர் முரணாய்க் கருதி;
என்ன ! குயவன் கை பின்பு நடுங்கிப் போனதா?
[77]
None answer’d this; but after Silence spake
A Vessel of a more ungainly Make:
‘They sneer at me for leaning all awry;
What! did the Hand then of the Potter shake? ‘
[78]
‘ஏனெனக் கேட்கும் அடுத்தது, “சொல்பவர் உளர்
பயமுறுத்தி ஒருவன் நரகத்துக்கு வழி காட்டுவான்;
வாய்ப்பற்ற குறைக் குடங்கள் முணுமுணுக்கும் !
குயவன் நல்லவன், எல்லாம் நலமாய் முடியும்.”
[78]
‘Why,’ said another, ‘Some there are who tell
Of one who threatens he will toss to Hell
The luckless Pots he marred in making – Pish!
He’s a Good Fellow, and ’twill all be well.’
+++++++++++++++++++++
- திருவிழா (ஐக்கூ கவிதைகள்)
- தொடுவானம் 174. நான் பார்த்த பருவ மங்கை
- எதிர்பார்ப்பு
- கவி நுகர் பொழுது-15 – கடங்கநேரியானின்,’யாவும் சமீபத்திருக்கிறது’
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 17
- பெரு வெடிப்புக்குப் பின் உடனே பிரபஞ்சத்தில் நேர்ந்த உள்வீக்கம் [Inflation] மாபெரும் மர்மமா ?
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–16
- தமிழ்மணவாளன் கவியுலகம்
- பாரதி பள்ளியின் நாடகவிழா
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- தமிழ்மணவாளனின் ,’உயிர்த்தெழுதலின் கடவுச்சொல்’, கவிதை நூல் குறித்த அறிமுகக்கூட்டம்
- சேவை
- சுப்ரபாரதிமணியனின் “ ஓ.. செகந்திராபாத்.. ” செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள்
- பிரான்சு நிஜமும் நிழலும் -II (கலை, இலக்கியம்) : 3 பதினேழாம் நூற்றாண்டு (தொடர்ச்சி)