தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

14 ஜனவரி 2018

சூழ்நிலை கைதிகள்

ராம்ப்ரசாத்

ராம்பிரசாத்

பணியாளனை பொதி மாடாக்க நிறுவனம் தந்த
‘மாதத்தின் சிறந்த பணியாளர்” பட்டத்தை
பெற்று வந்தவன்
வீட்டிற்குள் நுழைந்ததும்
பார்வையில் படும்படி வைத்தான்…
சட்டையை கழற்றி மூலையில் வீசினான்…
குளியலறை சுத்தமாக இல்லையென கடிந்தான்…
உணவு ருசியாக இல்லையென ஏசினான்…
காலைக்குள் சட்டையை இஸ்திரி செய்துவைக்க பணித்தான்…
குழந்தையின் நாப்கின்னை மாற்றச்சொன்னான்…
தொலைக்காட்சி பார்த்தபடியே நள்ளிரவில் உறங்கிப்போனான்…
ஒரே ஒரு விவாகரத்துக்கு பயந்து
இது எதையும் வெளியே சொல்லாமல்
‘சிறந்த மனைவி’ பட்டம் பெறுகிறாள்
சராசரி இந்தியப்பெண்…

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் !  பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானதுவலி

One Comment for “சூழ்நிலை கைதிகள்”


Leave a Comment

Insider

Archives