தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

கோகுல மயம்

சு. இராமகோபால்

சிறு தானியங்கள்
எங்கள் முப்பாட்டன் விட்டுச் சென்ற
தோட்டத்தில் விரும்பி விளையும்
பால் கட்டும் பருவத்தில்
சோளக்கதிர்களை அறுத்துவந்து
உமியின்றி
பொன்மணிகளை உதிர்த்து
நீராவியில் பக்குவமாக அவித்து
குளிரும் மாலைப்பொழுதில்
நெய் நறுமணத்துடன்
வெதுவெதுவென்று வெள்ளிக்
கிண்ணங்களில் குவித்து
அம்மா கொடுப்பாள்
குக்குள் குக்குளென்று
கொங்குநாட்டுச் சுந்தரத் தெலுங்கில்
கூவியவண்ணம்
நானும் உடன் பிறப்புகளும்
உண்டு சுவைத்தோம்

இன்று
எங்கள் பிள்ளைகள்
கூக்குள் கூக்குளென்று
உலக மயானத்தில்
மொழியிழந்து

Series Navigationகாய்த்த மரம்

Leave a Comment

Archives