(15.11.2018 எம் ஆர் டி )
அலைபாய்கிறது
பறவைகள்
அதுவேண்டும்
எனவேண்டி
இப்படித்தான்
அப்படித்தான்
இங்கேதான்
அங்கேதான்
என்பதில் கவனமிழக்காமல்
எப்படியாவது
என்பதில் செலுத்துகிறது
கவனத்தை
உட்கார்ந்து பார்க்காத
மரங்களில்லை
கூடுகட்டிப்பார்க்காத
கிளைகளில்லை
வனங்களைத்தாண்டியும்
பறந்துபார்க்கிறது
பிடிபடவே இல்லை
இதுவரை
உண்டியல்
ஓரளவு
நிறைந்தே இருக்கிறது
இன்னும்
உண்டியலை
நிரப்பும் அளவுக்கும்
இருக்கிறது
எனினும்
அதுவேண்டி
அலைபாய்கிறது
பறவைகள்
அது
தேடலில் கிடைக்காமல்
தேடலாய்
அமைவதில் இருக்கிறது
கமுக்கம்
தேடல்
தொடர்கிறது
பலபலவாய்
புதிதுபுதிதாய்
விதவிதமாய்…
இது
அன்றும்
இன்றும்
என்றும் இப்படியே
- பருப்பு உருண்டை குழம்பு
- செவ்வாயை மனிதர் வாழ தகுந்த இடமாக்குவதற்கு நுண்ணுயிரிகள் துணை புரியும்
- முகலாயர்கள் இந்தியர்களல்லர்.
- சிதைக்கப்பட்ட இந்திய வரலாறு
- கிள்ளைப் பத்து
- கற்பனை மாத்திரை
- அமரந்த்தாவின் சமீபத்திய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்களும் அவை குறித்து சென்னையில் நடந்தேறிய திறனாய்வுக்கூட்டமும்
- அமரந்த்தாவின் ஆரவாரமற்ற இலக்கிய – மொழிபெயர்ப்புப் பங்களிப்பு!
- துணைவியின் இறுதிப் பயணம்