கரோனா
ஸிந்துஜா
1
எலிகள்
குதித்து விளையாடுகின்றன
தெருவில்.
வீட்டு வளைக்குள்
நாம்.
2
பசும்புல் தரை.
பச்சைச் செடி, கொடி, மரம்.
முத்தமிடும் சுத்தக் காற்று.
இரைச்சலற்ற தெரு.
முற்றத்திலும் திண்ணையிலும்
உரையாடும் குரல்கள்.
இழந்தவை இவையென
நினைத்தவை அனைத்தையும்
திரும்பக் கொடுத்துவிட்டு
இழக்க முடியாததை
எடுத்துச் சென்றது.
3
சொந்த நாட்டினில்
இருந்த இடத்தை விட்டுப்
பிறந்த இடத்துக்கு
ஓடிய
சுதேச விதேசிகள்.
- கேரளாவும் கொரோனாவும்
- தன்னையே கொல்லும்
- அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7 – போட்டிகள்
- நம்மைப் போல் நேரம் காத்துக் கிடப்பதில்லை
- ஜகந்நாதராஜாக்களின் இன்றைய தேவை
- நாசா ஸ்பேஸ்X பால்கன் 9 ராக்கெட் விண்சிமிழ் இரு விமானிகள் ஏந்தி முதன் முதல் அகில விண்வெளி நிலையமுடன் இணைப்பு.
- கவிதைகள்
- வெகுண்ட உள்ளங்கள் – 1
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்