கடலின் அடியே சென்று தாக்கி பேரழிவை ஏற்படுத்தும் ரஷ்யாவின் புதிய அணு ஏவுகணை. செயற்கைச் சுனாமியை ஏற்படுத்துமா ..? அதிர்ச்சியில் உலக நாடுகள்.

author
1
0 minutes, 4 seconds Read
This entry is part 5 of 9 in the series 18 ஏப்ரல் 2021

சபா தயாபரன்

 

 

ரஷ்யா அறிமுகப்படுத்தியுள்ள போஸிடான்   2M39 டோர்பெடோ( Poseidon 2M39 torpedo) என்னும் ஏவுகணையானது  மணிக்கு 10,000 கிலோ மீட்டர் வேகத்துடன் கடலின் அடியில் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது. இதன் முக்கிய அம்சம் என்னவென்றால் கடலின் அடியே அணுகுண்டுகள் பொறுத்தப்பட்ட இந்த ஏவுகணையானது ஏவப்படும்போது இதில் இருந்து வெளிப்படும் ரேடியோ கதிர்வுகளின் அதிர்வுகள்  பெரிய   அலைகளை ஏற்படுத்தி  செயற்கையான  சுனாமியை ஏற்படுத்தும் என்று  அறியப்படுகின்றது. பல மெகா தொன்  போர்க்கப்பல் திறன்  கொண்ட கடலோரப் பகுதியை அழிக்கும் போஸிடான் 2 எம் 39 டார்பிடோ கொடிய கதிரியக்க அலைகளால் நகரங்களை சதுப்பு நிலமாக மாற்றி மனித இனமே பல தசாப்தாண்டு  காலத்திற்கு வாழ முடியாத பேரழிவை   ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.

போஸிடான் Poseidon எனப்படும்  இந்த பெயரானது ஒரு கிரேக்க கடல் தெய்வத்தின் பெயராகும் .தாடியுடன் கையில் ஒரு சூலாயிதத்துடன்   இந்த தெய்வம்   சித்தரிக்கப்படுள்ளது.   பன்னிரண்டு ஒலிம்பியன்களில்( ஒலிம்பியன்கள்- கிரேக்க புராணங்களில், பண்டைய கிரேக்கர்கள் நம்பிய முக்கிய தெய்வங்கள்)  ஒருவரான.  இவரின்  குதிரை கடலின் அடியில் ஓடும்போது நிலநடுக்கம் ஏற்படுமென்று கிரேக்க புராதனக்  கதைகளில் விவரிக்கப்பட்டுள்ளது.இவரின் பெயரையே  ஒரு குறியீடாக ரஷ்ய ஏவுகணைக்கு  வைத்திருப்பதும் தெய்வ செயற்பாடுகளை ஒப்பிட்டு பேசப்படுவதும் சுவாரஷ்யமான ஓன்று.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  சோதனைகளின் முக்கிய விபரங்கள் தனக்கு உடனுக்குடன் தெரியப்படுத்தல் வேண்டும் என்றும்   2022 கோடையில் ஆர்க்டிக்கில் (ஆர்க்டிக்உலகத்திலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றாகும்  . புவியின் வடகோடியிலுள்ள வடமுனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடலாகும்.)  போஸிடானை நிறுத்த புடின் விரும்புவதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன.

“கடலில் இருந்து கனதியான நீரின் அலை  உயர்ந்து, நகரத்தின் வழியாக கிழிந்து, அதன் எழுச்சியில் அனைத்தையும் அழித்து, நச்சு கதிரியக்கத்தன்மையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது” என்ற தன் கனவை  சில ஆண்டுகளுக்கு முன்பு விளாடிமிர் புடின் தனது  இராணுவ கனவுக்கான திட்டங்களை வெளியிட்டபோது  எல்லோரும் விளாடிமிர் புடின் மூளை  மழுங்கடிக்கப்பட்டது என்றே நினைத்தனர்.ஆனால் அவரின் கனவு மெய்ப்பட்டதாகவே இந்த ஏவுகணை வெற்றியின் மூலம் விளாடிமிர் புடின் அறியப்படுகிறார்.

 

 டார்பிடோக்களை torpedo  ஏற்றிச் செல்ல குறைந்தபட்சம் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆர்க்டிக் பெருங்கடலில்  ஏற்கனவே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன, அங்கு புடின் ஆட்சி உலக நாடுகளையே அச்சுறுத்தும் இராணுவ இருப்பைக் கட்டமைத்து வருகிறது.குறிப்பாக அமெரிக்காவிற்கு இது ஒரு பலத்த அடியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர்( Maxar  (செயற்கைக்கோள் படங்கள் தரை நிலைமைகளைக் காண்பதற்கான முக்கியமான கருவியாகும் )  சி.என்.என்-க்கு (CNN) வழங்கிய செயற்கைக்கோள் படங்கள் ஆர்க்டிக் கடற்கரையோரத்தில் ரஷ்ய இராணுவ தளங்கள்  தொடர்ச்சியான கட்டமைப்பையும், போஸிடான் மற்றும் புதிய உயர் தொழில்நுட்ப ஆயுதங்களுக்கான நிலத்தடி சேமிப்பு வசதிகளையும் விவரிக்கிறது. ஹை நார்த் (High North ) பகுதியில் உள்ள ரஷ்ய வன்பொருளில்( hardware )குண்டுவீச்சு மற்றும் மிக் 31 பிஎம் ஜெட் விமானங்களும், அலாஸ்கா கடற்கரைக்கு அருகிலுள்ள புதிய ரேடார் அமைப்புகளும் அடங்கும்.

ரஷ்யாவின் ‘போஸிடான் 2 எம் 39 டார்பிடோ’ஏவுகணையை  “சூப்பர்-ஆயுதம்” என்று குறிப்பிடும்   பாதுகாப்பு நிபுணர்கள் .இது ஏவப்படும் நாளே உலக ஆயுதக் கலாச்சாரத்திற்கு கடைசி நாளாக இருக்கும் என்று எதிர்வு கூறுகின்றனர்.

2004 ஆண்டு எழுந்த சுனாமி பேரலை அமெரிக்கா  கடலின் கீழே நடாத்திய  அணுகுண்டு பரிசோதனையினாலேயே நடந்தது என்று ஒரு பரவலான கருத்து  சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்திருந்தது. மேற்கொண்ட செய்திகளை  பார்க்கும்போது அந்தக் கருத்தானது  உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மீண்டும்   எழுப்பியுள்ளது நியாயம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Series Navigationஒரு கதை ஒரு கருத்துஉடுமலை நாராயண கவி இலக்கிய விருது
author

Similar Posts

Comments

  1. Avatar
    S. Jayabarathan says:

    ///2004 ஆண்டு எழுந்த சுனாமி பேரலை அமெரிக்கா கடலின் கீழே நடாத்திய அணுகுண்டு பரிசோதனையினாலேயே நடந்தது என்று ஒரு பரவலான கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக எழுந்திருந்தது. மேற்கொண்ட செய்திகளை பார்க்கும்போது அந்தக் கருத்தானது உண்மையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தை மீண்டும் எழுப்பியுள்ளது நியாயம் என்றே எண்ணத் தோன்றுகிறது///

    The 2004 Indian Ocean earthquake and tsunami (also known as the Boxing Day Tsunami and, by the scientific community, the Sumatra–Andaman earthquake[10][11]) occurred at 07:58:53 in local time (UTC+7) on 26 December, with an epicentre off the west coast of northern Sumatra, Indonesia. It was an undersea megathrust earthquake that registered a magnitude of 9.1–9.3 Mw, reaching a Mercalli intensity up to IX in certain areas. The earthquake was caused by a rupture along the fault between the Burma Plate and the Indian Plate.

    A series of massive tsunami waves grew up to 30 m (100 ft) high once heading inland, after being created by the underwater seismic activity offshore. Communities along the surrounding coasts of the Indian Ocean were severely affected, and the tsunamis killed an estimated 227,898 people in 14 countries, making it one of the deadliest natural disasters in recorded history. The direct results caused major disruptions to living conditions and commerce in coastal provinces of surrounded countries, including Aceh (Indonesia), Sri Lanka, Tamil Nadu (India) and Khao Lak (Thailand). Banda Aceh reported the largest number of deaths.

    The earthquake was the third-largest ever recorded and had the longest duration of faulting ever observed, between eight and ten minutes.[12] It caused the planet to vibrate as much as 10 mm (0.4 in),[13] and also remotely triggered earthquakes as far away as Alaska.[14] Its epicentre was between Simeulue and mainland Sumatra.[15] The plight of the affected people and countries prompted a worldwide humanitarian response, with donations totalling more than US$14 billion.[16]

    https://en.wikipedia.org/wiki/2004_Indian_Ocean_earthquake_and_tsunami

    2004 தெற்காசிய சுனாமிப் பேரழிவுகள் அமெரிக்க அணுகுண்டுச் சோதனையால் நேர்ந்தது என்பது தவறான புரிதல் & அறிவிப்பு. இந்தோனிய-இந்தியக் கடற் தட்டுகள் [Tectonic Plates] மோதியதால் ஏற்பட்ட பூகம்ப விளைவுகள் அவை. ஏவுகணையில் உந்துவிசை உண்டாக்கும் அணுப்பிளவு சக்தி, புளுடோனியம்-239 அல்லது யுரேனியம்-235 [Atomic Fission Energy] அத்தகைய பேரிடர் உண்டாக்க முடியாது.

    நண்பர் சபா தயாபரன், சிறந்த தகவல் கட்டுரை எழுதியதற்குப் பாராட்டுகள்.

    சி. ஜெயபாரதன், கனடா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *