உளைச்சல்

author
0 minutes, 9 seconds Read
This entry is part 9 of 15 in the series 16 மே 2021

 கௌசல்யா ரங்கநாதன்

  ——– -1-

மனம் நிலை கொள்ளாமல் தவிக்கிறது மாமாவின் மரணச்செய்தி SMS மூலம் பார்த்தவுடன்

 

 குக்கிராமத்தில் நான்  பத்தாம் வகுப்பு முடித்திருந்ததொரு வேளையில், அப்பா அகால மரணமடையவே, சேமிப்பென்று எதுவும் இல்லாமல் போக, என்னையும், வெள்ளந்தி  அம்மாவையும் அன்பு  காட்டி அரவணைத்துக் கொண்டது சென்னையில் ஒரு சுமாரான வேலையில் இருந்த என் தாய்மாமன், அதாவது அம்மாவின் இளவல்தான்

 

 

மாமாவைவிட ஒரு படி மேலாய் எங்களிடம் பாசம் வைத்திருந்தது மாமி

 

 குக்கிராமத்திலிருந்த எங்களை சென்னைக்கே வந்து தங்களுடன் தங்கச் சொன்னது இந்த இருவருமே

 

ஆனாலும் அம்மா மாமாவை தொந்திரவு செய்ய விரும்பவில்லை

 

“என் பிள்ளை படித்த படிப்புக்கு தகுந்தாற்போல் ஒரு வேலை மட்டும், சம்பளம் எவ்வளவு குறைச்சலாய் இருந்தாலும், வாங்கிக் கொடு உன்னால் முடிந்தால்

 

அப்புறம் அவனை உங்ககூட இரண்டொரு மாசங்கள் மட்டும் வச்சுக்க

 

சென்னை வாழ்க்கையை கத்துக் கொடு அவனுக்கு

 

அப்புறம் அவன் தங்க ஒரு அறை பார்த்துக் கொடுக்கறதோட, ஒரு மெஸ்ஸில் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு பண்ணு

 

நாங்க இருக்கோமே பார்த்துக்க மாட்டோமானு மட்டும் கேட்காதே

 

நீங்க தங்கமா என் பிள்ளையை தலைமேல வச்சு தாங்குவீங்கதான்

இல்லைனு சொல்ல மாட்டேன்

 

 ஆனாலும் அவனுக்கு  வாழ்க்கைனா என்னனு விளங்க வைக்கணும்” என்ற அம்மாவின் சொற்படி மாமா என்னை தங்களுடன் தங்க வைத்துக் கொண்டதுடன், அபார வாஞ்சை காட்டினார்கள் மாமாவும்,மாமியும் என்னிடம்

 

நான் படித்த படிப்புக்கு தக்கியாற்போல  ஒரு தொழிலகத்தில் எனக்கு அப்பிரன்டிஸ் வேலைக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்

 

நான் தங்கியிருந்த மாமா வீட்டிலிருந்து 1 கி,மீ

 நடந்து போனால் அந்த வழியாய்  வரும் எங்கள் தொழிற்சாலை பேருந்தில் ஏறி தொழிலகத்தை அடைய முடியும்

 

மாதா மாதம் பயிற்சி முடியும் வரை உதவித்தொகையாய் Rs

1500/-  எனக்கு கொடுத்தார்கள்

 

அந்த சூழலே எனக்கு வித்தியாசமாய் பட்டது

 

நிறைய தொழிலாளர்களுடன் பழக்கம் ஏற்பட்டது

 

அனைவருமே என்னிடம் அன்பு செலுத்தி வேலையையும் கற்றுக் கொடுத்தனர்

 

 நான் முதல் மாதம் உதவித் தொகை பெறும் வரை மாமா எனக்கு அன்றாட செலவுகளுக்கு ஒரு தொகையை கொடுத்தார்

 

முதல் மாதம் உதவித்தொகை வந்த பிறகும் மாமா எனக்கு அன்றாட செலவுகளுக்கென பணம்  கொடுக்க முன்வந்த போது நான் வாங்கிக் கொள்ள மறுத்த போதும்,  மாமா “உனக்கு எப்ப பணம் செலவுக்கு வேணும்னாலும் எங்கிட்ட தயங்காம கேளு

 

வெளியில் நல்லா சாப்பிடு” என்றவர் தினம் தோறும் மாலை நான் அலுவலகம் விட்டு வந்த பிறகும், மாமியையும் உடன் வைத்துக் கொண்டு என்னிடம் அன்புடன் அளவளாவுவார்

 

அவர்     வீ£ட்டில் நானும் சர்வ சுதந்திரமாய் எங்கும் உலாவுவேன்

 

 வீட்டுக்கு வருபவர்களிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைப்பார்

 

என்றாவதொரு நாள் நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப தாமதமானாலும் மாமாவும், மாமியும் பதறிப் போவார்கள்

 

அப்போதுதான் ஒரு நாள் என் சட்டைப் பையிலிருந்து சில்லறை காசுகளும், கரன்சிகளும் கீழே தரையில் விழுவதைப் பார்த்த மாமா “ஏண்டா உங்கிட்ட பர்ஸ் இல்லையா?” என்றவர், “ஊம்  

 

வா

 

என் பர்ஸ் கூட கிழிஞ்சு போச்சு

 

புதுசா ஒண்ணு வாங்கணும்னு இருந்தேன்

 

 இப்பவே போய் நல்லதா ஒரு பர்ஸ் வாங்கிக்கிட்டு வருவோம்” என்று என்னை கடைவீதிக்கு அழைத்துக் கொண்டு போய் அவருக்கு வாங்கியது போல, அச்சு, அசலாய் எனக்கும் ஒன்று வாங்கி கொடுத்ததுடன் பர்ஸை பத்திரமாய் வச்சுக்க

 

அதுவும் வெளியே தெருவுக்கு போகும் போதும், பஸ்ல போகும்போதும்

 

கொஞ்சம் அசந்தா, பிக் பாக்கட்காரங்க அடிச்சுக்கிட்டு போயிடுவாங்க” என்றார்

 

 மாமியும் தன் பங்குக்கு “ஆமாண்டா கண்ணா

 

 

இப்பல்லாம் கொள்ளை,கொலை, செயின் பறிப்புனு நடக்காத நாளேயில்லை

 தினம் அலுவலகம் விட்டு வந்ததும் மாமா தன் பர்சை வரவேற்பறை மேசை மீது போட்டு வைத்திருப்பார்

அது நாலு பேர்கள் வந்து போகும் இடமாய்த்தான் எப்போதும் காணப்படும்

 

என்னையும் மாமா அந்த டேபிள் மீதே பர்சை வைக்கலாம்

 

பயப்படாதே  

 

யாரும் எடுக்க மாட்டாங்க” என்று நான் யோசித்திருந்த வேளையில் சொன்ன போது என் மன நிலை குறித்து எனக்கே வேதனையாய் இருந்தது

 

“கண்ணா, இங்கே வரவங்க, போறவங்க மட்டுமில்லை

 

நம் வீட்டில் வேலை செய்யற ஆயா கூட கீழே ஒரு துண்டு காகிதம் கிடந்தாக் கூட எடுத்து “த பாரு தாயி என்னனு

 

 கீழே கிடந்ததுனு கொடுப்பார்

 

எத்தனையோ சந்தர்பங்களில் வீட்டை அப்படியே போட்டது, போட்டது போல போட்டுட்டு ஆயாவை பாத்துக்க சொல்லிட்டு வெளியே சில நாட்கள்வரை கூட போயிருக்கிறோம்

 

ஆனால் இது வரை ஒரு குண்டூசி கூட தொலைஞ்சது கிடையாது

இன்னொண்ணுடா

  நேர்மையாய் நெத்தி வியர்வை கீழேவிழ  சம்பாதிக்கிற நம்ம  பணம் ஒரு நாளும் களவு போகவே போகாது

நாம ஒருத்தரை நம்பினா அவங்களும் நம்ம பேர்ல நம்பிக்கை வைப்பாங்க

நம்பிக்கையே வாழ்க்கை,என்ற போது பிரமித்துப் போன நான் மாமா வைக்கும் மேசை மீதே என் பர்சையும் மாலை வேளையில் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் வைத்து விட்டு காலை அலுவலகம் கிளம்பும்போது எடுத்துச் செல்வேன்

 

 இது நடந்தது பல வருடங்களுக்கு முன்

 

அப்போது ஒரு நாள்– -2- நான் அப்பிரன்டிஸாய் வேலை பார்த்த அலுவலகத்தில் சகா ஒருத்தர் வீட்டு விசேஷத்துக்கு என்னை வீட்டுக்கு அழைத்திருந்தார்

 

தட்ட முடியாமல் போய் மொய் எழுதிவிட்டு அவர்கள் கொடுத்த விருந்தையும்  உண்டுவிட்டு வீடு திரும்பினேன்

 சில நாட்களுக்கு பின், இன்னொரு சகாவுக்கு பிரமோஷன் வரவே அவன் ஒரு பொ¢ய நட்சத்திர ஹோட்டலில் பார்டி கொடுத்த போது என்னையும் அழைத்திருந்ததால் தட்ட முடியாமல் போய், அங்கு சகா வற்புறுத்தல் காரணமாய் கொஞ்சமே கொஞ்சம் போட்டுக்கொண்டு, எப்படியோ சமாளித்துக் கொண்டு வீடு திரும்பியபோது, மாமா, மாமி தூங்கி போயிருந்ததால் தப்பித்தேன்

 

மறு நாள் மாமா–மாமியிடம் தாமதமாக வந்ததற்கான காரணத்தை மட்டும் (சரக்கு அடித்ததை சொல்லாமல்) சொல்ல, “கண்ணா நீ ஊருக்கு புதுசு

 

 ஒரு ஆபீஸ்னா இது போல பார்டிகள் சகஜம்

 

விடு

 

” என்றார்

 

நல்லவேளை நான் சரக்கடித்தை அவர் கவனிக்கவில்லை

 

சே

 

இனி எந்த காரணம் கொண்டும் அந்த கசமாலத்தை கையால் தொடவே கூடாது என்று எடுத்த முடிவு “குடிகாரன் பேச்சு, விடிஞ்சாலே போச்சு” என்ற பாடலுக்கொப்ப தொடரும் என்று  நினைக்கவில்லை

 

ஒரு சில நாட்களில் இன்னொரு சகாவுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்ததற்காக அதே ஸ்டார் ஹோட்டலில்  பார்டி

 

அங்கும் குடிப்பதை தவிர்க்க முடியவில்லை

 

அன்றும் எதேச்சையாய் மாமா–மாமி கண்களில் நான் படவில்லை அவர்கள் ஒரு கலியாணத்துக்கென வெளியூர் போயிருந்ததால்

 

இப்படியாக 3/4 தடவைகள் பார்டிக்கு போய் அங்கு சரக்கும் அடித்து,பிறகு மறுபடி எப்போது பார்டி, யார் கொடுப்பார்கள் என்று மனம் ஏங்க ஆரம்பித்திருந்ததொரு வேளையில், சில நண்பர்கள், அன்று சம்பள தினம், என்னிடம் வந்து “நீ வேலையில் சேர்ந்து 3 மாசங்களாச்சு

 

இங்கே புதுசா ஒருத்தன் வேலையில் சேர்ந்தா எல்லாருக்கும் நாம் வழக்கமா போற ஹோட்டல்ல பார்டி கொடுக்கிறது வழக்கம்

 

இந்த மாசம் நீ கொடுக்கணும்

 

என்னைக்கு வச்சுக்கலாம்” என்ற போது நான் திரு,திருவென விழிக்க, இன்னொரு சகா, “இவர் சென்னைக்கு புதுசுடா

 

நாம இவர்கிட்டயிருந்து இப்ப கொஞ்சம் அட்வான்ஸா, அதாவது ஒரு Rs

500/- மட்டும் வாங்கி ஹோட்டல்ல கொடுத்து பார்டிக்கு புக் பண்ணிடலாம்

 

மிச்சம் என்ன கொடுக்கணுமோ அதை இவர் பார்டி முடிஞ்சதும் கொடுக்கட்டும்

 

நாளைக்கு வச்சுக்கலாமா” என்ற போது என்னால் தட்ட முடியவில்லை

 

என் ஸ்டைபண்ட் Rs

1 500/-

 

இதில் அம்மாவுக்கொரு கணிசமான தொகையை அனுப்பிவிட்டு, என் மற்ற செலவுகளை சமாளிப்பதே பெரும் சவாலாய் இருக்கிறது

 

மாமாவிடம் கேட்டால் ஏன் எதற்கு என்று கேட்காமல் கொடுப்பார்தான்

 

ஆனாலும் Rs

1500/- வாங்கும் இவனுக்கு என்ன செலவு  என்று நினைத்து விட்டால்!எப்படியும் நிறைய பார்ட்டிக்கென செலவழிந்து விடும்

 

என் வறிய நிலையை மற்ற சகாக்களிடமும் சொல்ல முடியாது

 

 கடவுள் விட்ட வழி என்று அன்றே Rs

500/- அட்வான்ஸாய் பார்டிக்கு கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தொகையை மட்டும் எடுத்துக் கொண்டு போய், மாமா-மாமியிடம்கூட சொல்லாமல்,வழக்கம்போல  மாமா வீட்டு வரவேற்பறை மேசை மீது வைத்துவிட்டு உறங்கி விட்டேன்

 

மறுநாள் முதல் எனக்கு காலை ஷிஃப்ட்

 

காலை 5 மணிக்கே எழுந்தால்தான் 7 மணிக்கு தொழிலகத்துக்குள் போக முடியும்

 

அது ஒரு மழை காலம்

 

இருட்டிக்கொண்டிருந்தது வானம்

 

வீட்டிலும் பவர்கட்

 

அப்போதெல்லாம், அதாவது, சுமார் 50 வருடங்களுக்கு முன்  invertar போன்ற சாதனங்கள் கிடையாது  

 

 இருட்டில் தட்டு தடுமாறி எழுந்து வேலைக்கு கிளம்பும் முன் மேசையை எங்கேயிருக்கிறதென துழாவி, அங்கிருந்த பர்சை எடுத்து பான்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அலுவலக வானில் ஏறி அலுவலகம் சென்றவுடன் ஒரு பணியாள் என்னிடம் வந்து “சூப்பர்வைசர் ஐயா உங்களை அர்ஜன்டா கூப்பிடறார்” என்ற போது அவசரமாய் என் பர்சை முன்னால் இருந்த டிராயர் உள்ளே வைத்துவிட்டு போய், திரும்பி வந்து பார்த்தால் அங்கு ஒரு சகா புன்முறுவலுடன்

 

 

“சூப்பர்வைசர் கூப்பிட்டா என்ன? ஏன் பதறியடிச்சுக்கிட்டு போகணும், உன் பர்ஸ்  விழறதுகூட கவனிக்காமல்

 

நல்ல வேளை

 

 நான் ஏதேச்சையாய் உன்னை பார்க்க இங்கே வந்ததால் கீழே கிடந்த பர்சை உடனே எடுத்து வச்சுக்கிட்டேன்

 

த பாரப்பா

 

ஏன் வீண் பதற்றம்?இது நாலு பேர்கள் வந்து போற இடம்

 

இந்த பர்ஸ் யார் கையிலாச்சும் சிக்கியிருந்தா

 

ஊம்

 

 முதல்ல நீ கொண்டுவந்த பணம் கரக்டா  இருக்கானு இங்கேயே எண்ணிப்பார்

 

அதெல்லாம் கரக்டாய்த்தான் இருக்கும்னு சொல்லாதே

 

ஒருகால் நீ கொணாந்த பணம் குறைவாயிருந்துச்சுனு வை, அப்புறம் தர்மசங்கடமாய் போகும்

 

” என்றவன் பேச்சை தட்ட முடியாமல் பர்சை திறந்து பார்த்த நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்  

 

 

 -3- பர்சுக்குள் கத்தை, கத்தையாய் கரன்சி

 

ஒருக்கணம் வியர்த்து ஊற்றியது

 

இது என் பர்ஸ் அல்லவே! மாமா பர்ஸ் அல்லவா! அப்ப என் பர்ஸ் என்னாயிற்று, எங்கே போயிற்று? நேற்று மாலை நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தது

 

மை காட்! நேற்று மாலை தொழிலக நேரம் முடிவதற்கு ஒரு மணி முன்பாக சூப்பர்வைசர் என்னை கூப்பிட்டனுப்ப, அப்போதுதான் வாங்கிய அந்த மாத உதவித் தொகையை எண்ணி பர்சில் வைத்துக் கொண்டிருந்ததும், உடனடியாய் ஒருவித பதற்றத்துடன் சூப்பர்வைசர் அறைக்கு போய், அவருடன் பேசிய பிறகு வெளியில் வந்து பார்த்தால் மொத்த தொழிலகமும், யாரோ ஒரு தேசியத் தலைவா¢ன் திடீர் மறைவையொடி  வெறிச்சோடிக் கிடக்க, வெளியில் வந்த சூப்பர்வைசர் நிலைமையுணர்ந்து, என்னை தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு போய் என் மாமா வீட்டருகே ட்ராப் பண்ணியது ஞாபகம் வந்தது

 

 பர்ஸை அலுவலக மேசைமீது வைத்துவிட்டேனோ! இது விளங்காமல் வழக்கம்போல காலை டியூடிக்கு கிளம்புகையில் தன்னிச்சையாய் மாமா பர்சை எடுத்து வந்து விட்டேனோ! மாமா கண் விழித்து பார்த்தால் பர்ஸ் காணாமல் எவ்வளவு வேதனைப்படுவார்! அவரும் ராப்பகல் பார்க்காமல் அலுவலக வேலை தவிர ஒரு இடத்தில் பார்ட்டைம் வேலை செய்தும் குடும்ப செலவுகளை ஈடுகட்ட வேலை செய்து சம்பாதித்த பணம் அல்லவா! மஹாபாவத்தை செய்து விட்டேனே

 

மாமாவுக்கு கொஞ்சம் கடன் இருப்பதும், அதற்கு வட்டி மட்டுமே கட்டி வருவதையும் அறிவேன்

 

இவ்வளவு பணத்தை எதன் பொருட்டு, எங்கு வாங்கி,பர்சில் வைத்திருந்தாரோ மாமா! இப்போது பணம் பர்சுடன் காணாமல் போனதை மாமா உணர்ந்தால் அவருக்கு நெஞ்சுவலி வந்து

 

ஐயயோ! உடனடியாய் என் மேசை  டிராயரை திறந்து பார்க்க, என் பர்ஸ் அதனுள் இருக்கவே, மாமாவிடம் போய் உண்மையை சொல்லி, மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர் பர்சை அவா¢டம் ஒப்படைக்க வேண்டும்

 

 பிறகுதான் மனசாட்சியின் உறுத்தல் இருக்காது

 

ஆனால் அன்றுதான் நான் அலுவலக சகாக்களுக்கு ஹோட்டலில் பார்டி கொடுப்பதாக இருந்தது

 

பார்டி முடிந்ததும் வீட்டுக்கு போய் மாமாவிடம் உண்மையை சொல்லி அவர்  பணத்தை ஒப்படைத்து விடலாம் என்றிருந்த வேளையில் அன்று பார்டியில், வழக்கத்துக்கு மாறாக என் சகாக்கள் வற்புறுத்தல் காரணமாய் கொஞ்சம் அதிகமாய் சரக்கடித்து

 

 ஐயயோ

 

ரொம்பவே தடுமாற்றம் என் நடையில்

 

பார்டி முடிந்ததும் என் சகா ஒருவன் என்னை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்துவிட்டு மறுநாள் விடுமுறை தினம் என்பதால் மெதுவாய் என்னை என் வீட்டுக்கு அழைத்துச்சென்றான்

 

மாமா–மாமி எங்கோ கோவில் திருவிழாவுக்கென பக்கத்து ஊருக்கு முதல்நாள் மாலை சென்றவர்கள் இன்னம் வீடு திரும்பவில்லையென வேலைக்கார ஆயா சொன்னார்

 

இன்றும் தப்பித்தாயிற்று

 

“நேத்து உங்கிட்ட சொல்லிட்டு, நீயும் உடன்வரதா இருந்தா அந்த கோவில் திருவிழாவுக்கு அழைச்சுக்கிட்டு போகலாம்னு இருந்தேம்பா” என்ற மாமாவிடம் “நேத்து அடுத்த ஷிஃப்ட் ஆட்கள் வராததால் என்னையே அடுத்த டியூடியும் பார்க்கச்சொல்லிட்டாங்க மாமா” என்ற போது “அதான் உன் முகத்தில் ஒரு சோர்வு இருக்குதாப்பா?” என்றவர் “நீ போய் எதனாச்சும் சாப்பிட்டுட்டு  ரெஸ்ட் எடுத்துக்க” என்றார்

 

மாமியின் முகம் சோகமயமாய் காட்சியளித்தது

 

“என்னாச்சு மாமி உங்களுக்கு? உடம்பில் ஏதனாச்சும்

 

? டாக்டர் கிட்ட கூட்டிப் போகட்டா?” என்ற என்னை பார்த்து “எனக்கு உடம்புக்கு ஒன்றுமில்லைப்பா

 

மனசுக்குத்தான்

 

இந்த மனுஷனை கட்டிக்கிட்டு அவதிப்பட வேண்டியிருக்கு

 

என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை

 

 வெளுத்ததெல்லாம் பால்னு நம்பற சுபாவம்

 

என் தலையெழுத்து” என்றபோது,”விபரமாய்த்தான் சொல்லுங்களேன் மாமி” என்ற போது மாமா குறுக்கிட்டு “த பார் நம்ம கஷ்டம் நம்மோட

 

பாவம் இவன் சின்னப் பையன்

 

இவங்கிட்ட போய் நம்ம பிரச்சினை என்னனு சொல்லி அவனையும் ஏன் வேதனைக்குள்ளாக்கணும்

 

போய் வேலையை பார்” என்றார் மாமியை பார்த்து,,   எனக்கு யூகிக்க முடிந்தது ஓரளவுக்கு

 

ஆனாலும் ஏதோவொன்று தடுத்தது என்

 

பாதி மனதில் மிருகம் இருந்து  

 

 இல்லை, இல்லை

 

என் முழு மனதிலும் சாத்தான்  இருந்து உண்மையை சொல்ல விடாமல் தடுத்தது

 

காரணம் அந்த பாழாய்ப்போன பழக்கம்

 

இப்போதெல்லாம் சமயம் நேரும்போதெல்லாம் கொஞ்சமே, கொஞ்சம் சரக்கடிக்க ஆரம்பித்திருக்கிறேன்

 

அதற்கு பணம்

 

ஒரு நாள் நான் மற்ற சகாக்களுக்காகவும், பிறகு அவர்கள் எனக்காகவும் செலவழித்தனர்

 

 

சில சமயம் நினைத்துக் கொள்வேன்

 

எப்படியாவது இந்த மது அரக்கன் பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமென்று

 

ஆனால் அது ஆகிற விஷயமாயில்லை என்பதே உண்மை

 

 மாமா,மாமி என்னை சந்தேகக் கண்களுடன் கூட பார்க்காதது என்னை மேலும், மேலும் குடிக்க வைத்தது

 

எத்தனையோ இரவுகள் நான் தூங்காமல் மாமா பணத்தை எடுத்து செலவழித்தது

 

பிறகு மதுப்பழக்கத்துக்கு அடிமையானது குறித்து வருந்தியிருக்கிறேன்

 

அவர்கள் முகம் பார்த்து பேசுவதையே கூட தவிர்த்திருக்கிறேன்

 

மாமா,மாமி இருவருமே ஒரு நாள் என்னைப் பார்த்து, நீ ஏண்டா  “சமீப காலமாய் டல்லாயிருக்கே, எப்பவும் எதையோ பறி கொடுத்தாப்பல ?உன் அம்மா ஞாபகம் வந்துருச்சாடா கண்ணா

 

உனக்கொரு நல்ல வேலை, நல்ல சம்பளத்தில் கிடைக்கிறவரை உங்கம்மா இங்கே வரமாட்டேன்னு அடம் பிடிக்கிறாடா? நாங்க என்னடா செய்ய முடியும்? நானும் உனக்காக ஒரு நல்ல வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டுத்தான்  இருக்கேன்” என்ற போது, “இப்படிப்பட்ட நல்லவர்களையா நான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்?இவர்கள் என்னை நாலு திட்டு திட்டி விட்டாலும் கூட ஓரளவு மனம் சமனப் பட்டிருக்கும்

 

செய்த குற்றத்துக்குத்தான் தண்டனை அனுபவித்து விட்டேனே என்று இருக்கும்

 

ஆனால் எதுவுமே நடவாதது போல அந்த குற்றமே எனக்கு தண்டனையாய் என்னை குத்தி பிடுங்குகிறது நாட்கள், மாதங்கள் ஓடியும்

 

மாமா–மாமி எப்போதும் போல என்னிடம் பாசத்தை கொட்டித்தான் வளர்க்கிறார்கள்

 

நிலைமை இப்படியே நீடித்தால், என் மனசாட்சியே என்னை குத்திப் பிடுங்கி என்னை பைத்தியமாக்கிவிடக்கூடும்

 

இந்த தீராத மன உளைச்சலில் இருந்து விடுபட என்னதான் வழி என்று இரவு,பகல் தூக்கமில்லாமல் அவதிப்பட்டு, யோசித்து கடைசியில் மாமா-மாமியிடம் “எனக்கொரு நல்ல வேலை மும்பையில் நல்ல சம்பளத்தில் கிடைத்திருக்கிறது” என்று சொல்லி விடை பெற்று சென்றேன்

 

அவர்கள் அன்று அழுத அழுகை

 

அப்பப்பா! நான் ஏன் அப்படி அன்று நடந்து கொண்டேன்?இந்த மன உளைச்சல் காரணமாய்த்தான் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி, ஒரு நிலையில் அதை விடவே முடியாமல் போய், பிறகு வைராக்கியத்துடனும் மிகுந்த சிரமத்துடனும் கொஞ்சம் கொஞ்சமாய் அதிலிருந்து விடுதலையாகி

 

மும்பை போய்த்தான் எனக்கொரு வேலையையே தேடிக்கொண்டேன்

 

திருமணத்தில் விருப்பம் இல்லை

 

என்னிடம் சொல்லி, சொல்லி மாய்ந்து போய் அம்மாவும் ஒருநாள் உயிரை விட்டார்

 

பிறகு கிட்டத்தட்ட 20 வருடங்கள் போல மாமா-மாமியை போய் பார்க்கவே இல்லை

 

எங்கே போய்ப் பார்த்தால் மறுபடி தீராத மன உளைச்சலுக்கு உள்ளாவேனோ என்ற அச்சம் காரணமாகவும் அந்த மனித தெய்வங்கள் முகத்தில் விழிக்க எனக்கு திராணி இல்லாமல் போனதாலும்

 

 -3- இந்த நிலையில்தான் மாமாவின் மறைவு குறித்து மாமியின் தூரத்து உறவினர் ஒருவர் எனக்கு sms மூலம் செய்தி அனுப்பியிருந்தார்

 

மாமி எப்போதோ இவ்வுலகை விட்டு போயிருந்தார்

 

அப்போதுகூட அவர்களை நான் போய் பார்க்கவில்லை

 

ஆனாலும் மாமா எனக்கு தொடர்ந்து கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்

 

அவ்வளவு பற்றும், பாசமும் என் மீது அவருக்கும், மறைந்த மாமிக்கும்

 

இப்போது நினைத்தாலும் அழுகை,அழுகையாய் வருகிறது எனக்கு

 

 ஆனாலும் சென்னை போய் மாமாவை பார்த்து, வர என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை

 

 இப்போது மாமாவின் மறைவு செய்தி கேட்டு மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளானேன் என்பதே உண்மை

 

வேண்டும் எனக்கு இந்த மன உளைச்சல்

 

இதைவிட வேறென்ன தண்டனை இருக்க முடியும் எனக்கு

 

 இந்த தண்டனை வேண்டும் எனக்கு

Series Navigationநல்ல மனம் வேண்டும்வராலுக்கு வெண்ணெல்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *