ஆர் வத்ஸலா
நிறமிழந்த ‘பாலிஸ்டர்’
சட்டை அணிந்த அவன்
அந்த இடத்தை
பெருக்கி சுத்தம் செய்தான்
அடுக்கியிருந்த
பிளாஸ்டிக் நாற்காலிகளை
பிரித்துப் போட்டான்
எல்லோரும் நல்லாடைகளில்
கூடிய பின்
சிறுகொடியும் குண்டூசியும்
தந்து
தானும் ஒன்று
குத்திக் கொண்டான் பெருமையுடன்
புதுக் கதர் சட்டை அணிந்திருந்த
குடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்கு
கடைசி நிமிடத்தில்
தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்தது
நினைவுக்கு வர
ஓடினான் இவன்
நிலவறையிலிருந்த
சங்க அலுவலகத்திற்கு
திரும்பு முன்
முடிந்துவிட்டிருந்தது
கொடியேற்றம்
மேற்பார்வையாளர் நீட்டிய தட்டிலிருந்து
எல்லோருக்கும் எடுத்துக் கொண்டார்கள்
சாக்லேட்
இவனுக்கு
எடுத்துக் கொள்ளப் பிடிக்கவில்லை
ஏனோ
- ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா நிலவுப் போட்டியில் முந்தி வெல்ல லூனா -25 நிலவுத் தளவுளவி ஏவியுள்ளது
- குறைந்த நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது
- நாட்டுப்பற்று 2
- நாவல் தினை அத்தியாயம் இருபத்தேழு CE 5000
- மழையுதிர் காலம்
- மழை
- நாட்டுப்பற்று 1
- பறக்கும் முத்தம் யாருக்குவேண்டுமானாலும் கொடுக்கலாமா?
- ஊடக அறம்
- கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்
- மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் நிலவரம்