This entry is part 2 of 6 in the series 2 ஜூன் 2024

                                ஜெயானந்தன்.

முப்பாட்டன் வீடு

பாட்டனிடம் இல்லை.

பாட்டன் வீடு

தாத்தனிடம் இல்லை.

தாத்தன் வீடு

தந்தையிடம் இல்லை.

தந்தை வீடு

என்னிடம் இல்லை.

என் வீடு

உன்னிடம் இல்லை.

உன் வீடு

என்னிடம் இல்லை.

உன் வீடு என் வீடு

எவன் வீடு !

மலையெல்லாம் அவன் வீடு

மனமெங்கும்  அருள்வீடு.

பிறவிதொறும் வீடுவீடாய்………,

பிறவா வீடு வேண்டும்.

பிறப்பை அறுக்கும்

பேரின்பேச் சுடரே ! பேரோளியே!!!

                               ஜெயானந்தன்.

Series Navigationதுருவன் ஸ்துதிபெருமை