வணக்கம்
யாவரும் நலமா?
இவ்வாரம் (வெள்ளிக்கிழமை – 11/07/2026) லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 392 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.கி.கவியரசன்(தமிழகம்) (கவிதை:வீட்டுப்பாடமாக சிறகுகளை…),
கவிஞர்.அராலியூர் ப. தர்மகுமாரன்(யாழ்ப்பாணம்) (கவிதை:ஒழுக்கமே உயிராக…குரல்:கவிஞர்.இந்திரா அனந்தன்(கரவெட்டி- யாழ்ப்பாணம்),
எழுத்தாளர்.லோகேஷ் ரகுராமன்(தமிழகம்) (குறுங்கதை:காகிதப் படகுகள்),
கவிஞர்.பழநிபாரதி(சென்னை) (கவிதை:நான் ஏதாவது ஒரு புள்ளியில்..),
கவிஞர்.பொன்னையா இராசா(பிரான்ஸ்)(கவிதை:வாய்மூடிக் கிடக்கிறது வாய்மை),
எழுத்தாளர்.மனோகரன் கிருஷ்ணன் (மலேசியா)(குறுங்கதை:தெய்வம் தொழுதல்-நன்றி:முகநூல்),
ஈழத்துக்கவிஞர்.சுகன்யா ஞானசூரி (தமிழகம்)(- கவிதை_ஒரு அகதி தந்தையானபோது..)
ஆகியோரது படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்வு.
படைப்பாளர்களுக்கு எமது நன்றி.
தொடர்ந்துவரும் இலக்கியப்பூக்களுக்காக படைப்புகளை(குரலில் ஒலிப்பதிவுசெய்து)அனுப்புங்கள்.படைப்புக்கள் தெளிவான பதிவாக இருத்தல் அவசியம்.
கவிதை,உருவகம்,சிறுகதை,நூல் வாசிப்பனுபவம்…என படைப்புக்கள் அமையலாம்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
இலக்கியன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
https://onlineradiofm.in/stations/ilc-tamililcjamil