This entry is part 3 of 6 in the series 16 ஆகஸ்ட் 2026

அது என் மழை

இது என் தண்ணீர்

எனக்கு மட்டுமே எல்லாம்

ஏற்றால் இல்லை பிணக்கு

எதிர்த்தால் முடியும் கணக்கு

****

அது என் நிலம்

இது என் கடல்

ஏற்றுக்கொள்

இல்லையேல்……

பலிகள்

பதம் பார்க்கும்

ஏவுகணைகள்

தகர்க்கும்

குண்டுகள்

வெடிக்கும்

பொட்டலாகும்

உன் கட்டுமானம்

ஹஹ்ஹஹ்ஹா…….

மறுபக்கம்

பூகம்பம்

உலுக்கிய நாடுகள்

பற்றி எரியும் காடுகள்

அத்துமீறும் வெப்பங்கள்

 புயல்கள்

வெள்ளங்கள்

மனிதகுலம் காணாத

மாபெரும் கேடுகள்

ஏன் இப்படி?

*****

கேள்வி கேட்க

உனக்கேது தகுதி

நீ நீதி தவறினால்

என் நியதியும் தவறும்

அமைதியாய்ச்

சொன்னது பூமி

அமீதாம்மாள்

Series Navigationமழை புராணம் : 43நீ சாப்பிட்டாயா?