தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

சி. ஜெயபாரதன், கனடா

Spread the love

 

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !

ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !

+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 27, 2012
*********************

Series Navigationமுகங்கள்அரியாசனங்கள்!

4 Comments for “தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு”

 • பவள சங்கரி. says:

  அன்பின் திரு ஜெயபாரதன்,

  மிக அழகான மொழிபெயர்ப்பு. தொடரச்சுவையான களம். நன்றி.

  அன்புடன்

  பவள சங்கரி.

 • ஜெயபாரதன் says:

  மதிப்புக்குரிய திருமதி பவள சங்கரி,

  உங்கள் படைப்புகளால் திண்ணையின் இலக்கியத் தரம் உயர்ந்து விட்டது. சீதாம்மா, பவள சங்கரி, ஜெயஸ்ரீ ஆகியோர் ஆக்கங்கள் திண்ணையின் அணிகலன்கள். இது திண்ணையின் பொற்காலம்.

  பாராட்டுக்கு மிக்க நன்றி.

  அன்புடன்,
  சி. ஜெயபாரதன்.

  • பவள சங்கரி. says:

   அன்பின் திரு ஜெயபாரதன்,

   தங்களுடைய வார்த்தைகள் ஊக்கமளிக்கும் மாமருந்தாக உள்ளது. நனி நன்றி ஐயா. தங்கள் வாக்கை காக்கும் சக்தியும் ஆண்டவர் எமக்கு அருள வேண்டும்.

   அன்புடன்

   பவள சங்கரி.

 • jayashree shankar says:

  பெருமதிப்புக்குரிய திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
  தங்களின் பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
  தாங்கள் குறிப்பிட்ட இயக்கிய தரத்தில் உயர்ந்த படைப்புகள் அளிக்கும் சீதாம்மா அவர்களும்,, மற்றும் பவள சங்கரி அவர்களும்..
  திண்ணையின் அணிகலன்கள். ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் தான்…அவர்களது ஆக்கங்களால்… திண்ணைக்கு பொற்காலம் என்று நீங்கள்
  சொல்வதும் சரியே…என்னை பொற்கால வரிசையில் நிறுத்திப் பார்க்கிறீர்களே….உண்மையில் எனக்குத் தான் இப்போது பொற்காலம்…தங்களைப் போன்ற
  பெரியவர்களின் ஆசியும்….பாராட்டுகளும்…… பெறுவதற்கு இறைவனுக்குத் தான் நன்றி சொல்லவேண்டும்.
  தங்களது கவிதை தமிழாக்கம்….மிகவும் அருமை.
  மிக்க நன்றி.
  அன்புடன்
  ஜெயஸ்ரீ ஷங்கர்.


Leave a Comment

Archives