இருமல்

This entry is part 8 of 9 in the series 20 டிசம்பர் 2020

தொடர்வண்டியின் இயக்கச் சத்தம் போல் தொண்டையில் இருமல் தொடர்ந்து கொண்டிருந்தது … அந்த இரண்டு வார இருமலை இன்றைக்கு தொடர்வண்டிப்பயணத்தில்  தீர்த்துவிட வேண்டும் என்று அவனின் தீர்மானமாக இருந்தது .. அது எப்படி என்று அவன் கண்டுபிடித்து விட்டான். மியூசியத்தை  ஒரு சுற்று சுற்றி பார்த்துவிட்டு வந்தபோது அவர் எதிரில் டாஸ்மாக் என்ற பலகை தெரிந்தது .அந்த வேறு உலகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போதே அவன் கண்ணில் பட்டது .வேறு எங்கேயும் போய் தேட வேண்டாம் இங்கேயே இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான் […]

நண்பன் என்பவன்

This entry is part 7 of 9 in the series 20 டிசம்பர் 2020

கௌசல்யா ரங்கநாதன்           ——நீண்ட, நெடிய, 45 நாட்கள் போல் படுத்த, படுக்கையாய், மருத்துவ மனையொன்றில் கிடந்த, என் அலுவலக சகா குமார், அன்று உடல் நலம் தேறி அலுவலகம் வந்தவுடனேயே, அவன் இருக்கைக்கே போய் நலம் விசா¡¢த்த போது ஏனோ விளங்கவில்லை அவன் முகத்தை திருப்பிக் கொண்டான்.. “என்னடாச்சு உனக்கு?” என்ற போதும் அவன் என்னை தவிர்த்து எங்கள் மற்ற சகாக்களுடன் சகஜமாய் உரையாடத் தொடங்கினான்..இத்தனைக்கும் இந்த 45 நாட்கள் அவன் […]

மலர்ந்தும் மலராத

This entry is part 6 of 9 in the series 20 டிசம்பர் 2020

குணா ஓய்வு பெறும் காலத்திற்கு அநேக கற்பனைகள். எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, வேலையில் இருக்கும் போதே கடனை வாங்கி, அடுக்கு மாடி குடியிருப்பில் அளவுக்கேற்ற ஒரு வீடு. இப்படித்தான் என்று தீர்மானித்தவை மாறுவதற்கு அநேக காரணங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். எதிர் பார்க்காமல்… ஆண் ஒன்று, பெண் ஒன்று என்று அமைந்து விட்டால், அதுவே போதும் என்று ஆனந்தப்படுவது தான் நமக்குள் புகுந்து கொண்ட சாதாரணம். யார் வகுத்தது என்று தெரியவில்லை, ஆனால் […]

மன்னிப்பு

This entry is part 5 of 9 in the series 20 டிசம்பர் 2020

                         (11.6.1978 குங்குமம் வார இதழில் வந்தது. “விடியலின் வருகையிலே” எனும் கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றது.)       அந்தக் கிழவர் இடிந்து போய்விட்டார். கண்ணீர் மல்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் மறுபடியும் அந்தத் தந்தியைப் படித்தார். தந்தியில் கண்ட செய்தியை நம்ப முயன்றார். முடியவில்லை.  அது தாங்கியிருந்த செய்தி அவர் சிறிதும் எதிர்பாராததாகும். அது மாதிரியான கனவு வந்திருந்தால் கூட அவர் திடுக்கிட்டு விழித்துப் பதறிப் போய் அதற்குப் பின்னர் […]

கவிதையும் ரசனையும் – 7

This entry is part 9 of 9 in the series 20 டிசம்பர் 2020

அழகியசிங்கர் 15.12.2020             பாரதியாரின் வசன கவிதையை எடுத்துக்கொண்டு எழுதலாமென்று நினைக்கிறேன்.  பாரதியார் மரபுக் கவிதைகள் மட்டுமல்ல வசன கவிதைகளும் எழுதி உள்ளார்.  90 சதவீதம் மரபுக் கவிதைகளும் பத்து சதவீதம் வசன கவிதைகளும் அல்லது அதற்குக் குறைந்த சதவீதம் எழுதி உள்ளார்.       பாரதி மறைந்தபோது கவிதை உலகில் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெறுமை ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள்.  இத்தனைக்கும் பாரதிதாசன், தேசிய விநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் இருந்தபோதும்.         பாரதி இறந்த 10 ஆண்டுகள் கழித்துத்தான் ந பிச்சமூர்த்தி , க.நா.சு மூலமாக புதுக் கவிதை என்ற இலக்கிய வடிவம்  பாரதியின் […]

சுழன்றும் அவர் பின்னது காதல்

This entry is part 4 of 9 in the series 20 டிசம்பர் 2020

குணா கலித்தொகை கய மலர் உண்கண்ணாய்! காணாய்! ஒருவன்வய மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்டகண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு,முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்றநோய் உரைக்கல்லான் பெயரும் மன் பல் நாளும்,பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன் வயின்சேயேன் மன் யானும் துயர் உழப்பேன், ஆயிடைக் கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன், ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று, ஒரு நாள் என் […]

தீ உறு மெழுகு

This entry is part 3 of 9 in the series 20 டிசம்பர் 2020

                         நெருப்பில் இடப்பட்ட மெழுகு கொஞ்சம் கொஞ்சமாய் உருகிக் கரைந்து இல்லாமல் போகும். மெழுகு முழுதும் கரைந்து போனபின்னும் அந்த இடத்தில் அந்த மெழுகு இருந்ததற்கான அடையாளம் மிஞ்சி நிற்கும். இந்த மெழுகை உவமையாகக் காட்டி ஐங்குறு நூறு ஒரு காட்சியை விளக்குகிறது. தலைவன் ஒருவன் தலைவியை விட்டுப் பிரிந்து பரத்தையர் வழி செல்கிறான், அங்கே அவர்களுடன் தங்கி இருக்கிறான். பின் ஒரு நாள் அவன் தன் தலைவியை நாடி வருகிறான். அவன் தங்கலை விட்டுவிட்டுப் […]

அஸ்திவாரம்

This entry is part 2 of 9 in the series 20 டிசம்பர் 2020

மு தனஞ்செழியன் “ஓடுரா…ஓடுரா.. இன்னைக்கு நம்மள பதம் பார்க்காமல் அது விடாது போலயெ” என்று பின்னங்கால் பிடறியில் பட தலைதெறிக்கும் அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தான் ராமு. அவனை ஒரு காவி நிற நாயொன்று துறத்தி  கொண்டிருந்த்து. மாலை நேரம் என்பதால் வீதிகள் அனைத்திலும் பிள்ளைகாடுகள் விளையாடிக்கொண்டிருந்தன ஆனாலும் அந்த நாய் விடாமல் அவனை மட்டும் துரத்திக் கொண்டிருந்தது.  காபர் வீட்டை தாண்டும் பொழுது காபர் மட்டும் அந்த நாயை தடுத்து நிறுத்த “ அரே.. சைத்தான்.. சைத்தான்…” என்று […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 23 கண்டாமணி

This entry is part 1 of 9 in the series 20 டிசம்பர் 2020

மார்க்கம் ஒரு இருபத்திஐந்து வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு மெஸ் நடத்துபவர். அவர் சாப்பாடு போடும் விதம் எப்படி? தெருவோடு போகிறவர்களுக்கு அவர் சாதம் போடும் ஓசையைக் கேட்டால் ஏதோ முறம் முறமாய் இலையில் சாதத்தைச் சரித்துக் கொட்டுகிற மாதிரி இருக்கும். மார்க்கம் ஈயம் பூசிய பித்தளை முறத்தில் சாதம் கொண்டு வருவார். அந்த முறம் நடுவில் ஒடிந்து கொஞ்சம் குழிவாக இருக்கும். சாதம் சரிவதற்காக அவரே செய்த யுக்தி.அந்த முறத்தைத் டம டமவென்று தட்டுவார். ஆர்ப்பாட்டம் செய்வார். […]