மருமகளின் மர்மம் – 14

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

முதன்முறையாகச் சகுந்தலாவை இரக்கத்துடன் நோக்கிய நீலகண்டன், ‘சேச்சே! ந்யூடால்லாம் நிக்க வேணாம்மா.  ஆனா முக்கால் நிர்வாணமா நிக்க வேண்டி வரும்னு வச்சுக்கோயேன். கடைசியில் ரெண்டே ரெண்டு ஒட்டுத் துணி மட்டுந்தான் உடம்பிலே இருக்கும். புரியுதில்லே? ஆனா நீ அதை எடுக்க வேண்டி வராது. அந்த நேரத்துல கரெக்டா பவர்கட் வந்த மாதிரி விளக்குகளையெல்லாம் அணைச்சுடுவாங்க. நீயும் உள்ளே ஓடிடணும். அப்புறம் இன்னொண்ணு. சொல்ல விட்டுப் போயிடுத்து.  நீ கைக்கொழந்தைக்காரியா யிருக்கிறதுனால, ஓட்டல்லேயே பெர்மனெண்ட்டா உனக்கு ஒரு ரூம் […]

பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

  சு.முரளீதரன் முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழாய்வுத் துறை தேசியக் கல்லூரி திருச்சி – 01 மதுரையைத் தலைநகராக் கொண்டு நாயக்கர்கள் ஆட்சி செலுத்திய போது, நாயக்கரின் கீழ் நின்று சேதுபதிகள் ஆட்சி புரிந்தனர். பின்னர் அடிமைத் தளையை அறுத்தெறிந்து சுகந்திரமாக சேதுபதிகள் ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இவர்கள் வழியில் வந்தவரான முத்து விசய ரகுநாத சேதுபதி மீது, பல பட்டடைச் சொக்கநாத கவிராயர் கி.பி 18-ம் நூற்றாண்டில் பாடியது பணவிடு தூது. இது கலிவெண்பாவினால் ஆன […]

‘ஒப்பனைகள் கலைவதற்கே’ நாவல்

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

எனது ‘ஒப்பனைகள் கலைவதற்கே‘ நாவல் மீதான, பெண் எழுத்தாளர் ஷைலஜா  நாராயண் அவர்களின் விமர்சனம் இங்கே:   அண்மையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் காவ்யா வெளியீடான ’ஒப்பனைகள் கலைவதற்கே ’என்ற நாவலை எழுதியவர் இளைஞராகத்தான் இருக்க வேண்டும் என்பதை நாவலின் ஆரம்பப் பக்கங்கள் கட்டியம் கூறிவிடும்! ஆம் ராம்ப்ரசாத் இளைஞர்தான் அதனால்தான் அவர் எழுத்துக்களில் புதுமையும் சமூகத்தின்மீதான படைப்பாளிக்கான பார்வையின் பொறுப்பும் அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக கணினியுகப் பெண்களைப் பற்றிய அவரது கணிப்பு நூறுசதவீதம் சரியாக இருக்கிறது. […]

ஜோதிர்லதா கிரிஜாவின் “மாறாத மனிதர்கள்”

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

ஜோதிர்லதா கிரிஜாவின் நந்தவனத்து நறுமலர்கள் – 3   தொடுப்பவர் : ஜெயஸ்ரீ ஷங்கர், ஹைதராபாத் எழுத்தாளரைப் பற்றிய விபரங்கள் : குறுநாவல் சிற்பி :ஜோதிர்லதா கிரிஜா, சொந்த ஊர் : வத்தலக்குண்டு . பள்ளிப் பருவத்தில் ரா.கி.ரங்கராஜன் அவர்களால் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனவர்.. தமிழ்வாணன், அழ.வள்ளியப்பா, ஆர்.வி.ஆகியோரால் ஊக்குவிக்கப் பட்டதன் பின், 1968 இல் கலப்புமணம் பற்றிய சர்ச்சைக்குரிய குறுநாவல் வாயிலாக ஆனந்தவிகடனில் பெரியோர்க்கான எழுத்தாளராக அறிமுகம் கிடைத்தது. எழுதியுள்ளவை : 600க்கும் மேற்பட்ட […]

சூரிய மண்டலத்தில் பூமியை நெருங்கச் சுற்றித் திரியும் மூர்க்க முரண் கோள்கள் [Rogue Asteroids]

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா Rogue Asteroids are the Norm in our Solar System http://www.youtube.com/watch?v=Pu1t1Fevajk http://www.youtube.com/watch?v=A8VVAZ1JAzs   21 ஆம் நூற்றாண்டில் ஒரு முரண்கோள் பூமியோடு மோதி அபாயம் விளைவிக்கும் எதிர்பார்ப்பு முந்தி நினைத்ததை விட 20% மிகையானது.  ஹெர்ச்செல் விண்ணோக்கி மூலம் நோக்கியதில் ஒரு விண்கல் [Space Rock :  Apophis 99942] சில வருடங்களில் பூமியை நெருங்கி விடும் என்று ஈசா கணிக்கிறது ! ஐரோப்பிய விண்வெளித் துறையக […]

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 60 ஆதாமின் பிள்ளைகள் – 3

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

 (Children of Adam)   யுகங்கள் மீளும் இடைவெளி விட்டு (Ages and Ages Returning at Intervals ) (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா            யுகங்கள் அடுத்தடுத்து மீளும் இடைவெளி விட்டு ! அழியாமல், நிரந்தர உயிர்ப்புடன் திரியும் ! காம உணர்ச்சி, ஆணின் தண்டான உறுப்பு, ஆற்றல் மிக்க இடுப்புக்குக் கீழுள்ள இனவிருத்தி மூலச் சாதனங்கள், போன்ற வற்றை அனுதினம் ஆதாமின் பாடல்களாய் ஓதுபவன் நான் […]

சீதாயணம் நாடகப் படக்கதை – 18

This entry is part 2 of 22 in the series 2 பெப்ருவரி 2014

[சென்ற வாரத் தொடர்ச்சி] சீதாயணம் படக்கதை -18 நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா வடிவமைப்பு :  வையவன் ஓவியம் :  ஓவித்தமிழ் படம் : 38  & படம் : 39  [இணைக்கப் பட்டுள்ளன]   தகவல் : 1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958] 2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma […]

பிரான்சில் இடம்பெற்ற ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி

This entry is part 20 of 22 in the series 2 பெப்ருவரி 2014

வணக்கம்  பிரான்சில் இடம்பெற்ற  ‘பொங்கல்’ தமிழர் திருநாள் நிகழ்வு பற்றிய செய்தி விபரணம் ஒன்றை உங்கள் பார்வைக்கு அனுப்புகின்றோம். புலம்பெயர் நாடொன்றில் சிறப்புற நடைபெற்ற இந்நிகழ்ச்சியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு பலரறியச் செய்வீர்களென நம்புகின்றோம். ஒளிப்படங்களும் இணைத்துள்ளோம். புலம்பெயர்ந்து நீட்சியுறும் வாழ்வில், தமிழால் ஒருத்துவமாகி சாதி, மதம், தேசம், அரசியல்-வர்க்க பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்து “புலம்பெயர் தமிழர் திருநாள் 2014′ பாரீசில் 19.01.2014 அன்று நடந்த நிகழ்வாகும். இந்நிகழ்வு மக்களது சங்கமிப்பாகவே அமைந்திருந்தது. புலம் […]

தொடுவானம் – 1

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

முன்னுரை டாக்டர் ஜி. ஜான்சன் வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்களையும், நடக்கும் நிகழ்வுகளையும், எப்போதுமே நல்ல அனுபவமாகவே பார்ப்பவன் நான். அவற்றை அவ்வப்போது நாட்குறிப்பில் பதிவு செய்துவந்தேன். இந்தப் பழக்கத்தை பதிநான்கு வயதிலிருந்தே தொடங்கிவிட்டேன். நான் முழுக்க முழுக்க ஆங்கிலப் பள்ளியில் பயின்றவன். தமிழை நான் விரும்பி தமிழ் வகுப்பிலும் நூலகத்திலும் கற்றுக்கொண்டேன். அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவன். டாக்டர் மு. வ. வின் அல்லி நாவலில் அவர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் பற்றி கூறியுள்ளார். நாம் முகத்தை […]

நவீன எழுத்தாளனின் சமூகஅக்கரை

This entry is part 1 of 22 in the series 2 பெப்ருவரி 2014

வில்லவன் கோதை நீர் மேகம்  ! சமீபத்தில் மறைந்துபோன தமிழ் திரைப்பட உதவி இயக்குநர் வைரக்கண்ணு எழுதிய  நூல் ! பெரும் கனவுகளோடு  கோடம்பாக்கம் வந்த அந்த இளம் உதவி இயக்குநரின்  நூலை இரண்டு நாட்களுக்கு முன்னால் படிக்கநேர்ந்தது. நூலின் நுழைவாயிலில் நூலாசிரியனின் மரணத்தைப்பற்றி விரிவாகபேசப்பட்ட இரண்டு அணிந்துரைகள் என்  கவனத்தை பெரிதும் ஈர்த்தன. ஒன்று திரைப்பட நடிகர் நாசருடையது. இன்னொன்று இரண்டு நாட்களுக்குமுன் சென்னையில் நிகழ்ந்த ஒரு இலக்கிய விழாவில் இலக்கியவீதி  இனியவன் வழங்கிய அன்னம் […]