பிம்பம்

This entry is part 9 of 12 in the series 12 மே 2019

மஞ்சுளா குளிர்ந்த பனியை குடம் குடமாய் ஊற்றிச் செல்லும் இவ்விரவை பரிகசித்தபடியே நகருகின்றன தனிமையின் புகைச்சல்கள் இமைகளுக்குள் நகரும் ஒளிமையத்தில் நகராது இருக்கிறது உன் பிம்பம் புலன்கள் அற்று இருக்க வேண்டியது எது? நான் நீ அல்ல அற்ப சொற்பங்களுக்குள் மீந்திருந்த ஒரு துளியை இப்போது பருகிவிட்டேன் ஆனால் அது கடலாய் என்னை மூழ்கடித்துக் கொண்டிருப்பதை நீ அறிவாயா? புலன்கள் எங்கே? தின்றுவிட்ட மீன்கள் கரை சேர்ந்து  கொண்டிருக்கின்றன உன் வரவில் காத்திருக்கிறது என் அரூபம்       […]

கூண்டு

This entry is part [part not set] of 12 in the series 12 மே 2019

உதயசூரியன் குகை மனிதன் என்னிடம் எனக்காக வருகிறான் ஒரு சிறிய பாதுகாப்பு கூண்டை காட்டுகிறான் நுழைகிறேன் மதம் என்னை உரிமைக்கோருகிறது சாதி என்னுள் நுழைய பார்க்கிறது கட்சிகள் என்னை சுற்றி சுற்றி வருகின்றன பொய்யும் புரட்டும் விடாமல் என்னிடம் பேரம் பேசுகின்றன கூண்டை விட்டு உண்மைச் சிறகில் பறக்கிறேன் கூண்டு பெரிதாகிறது சிறகுகள் விரிய விரிய கூண்டும் பெரிதாகிறது மாயக்கூண்டில் குகை மனிதர்கள் இருவர் கவலை தேய்ந்த முகத்தோடு எதோ பேசிகொண்டு இருக்கிறார்கள்

இலங்கையில் அகதிகள்

This entry is part 11 of 12 in the series 12 மே 2019

ஸர்மிளா ஸெய்யித் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலினால் நீர் கொழும்பில் அகதியாக்கப்பட்டிருக்கும் பாக்கிஸ்தான் அகதிகள் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகள் பெண்களின் கூட்டு முயற்சியால் ஏற்பாடாகியிருக்கிறது. மூன்று இடங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் 1200 பாக்கிஸ்தான் அகதிகளில் சில ஆப்கானிஸ்தானியர்களும் அடங்குவதை அங்கு சென்றபோதுதான் அறிய முடிந்தது. அகதி அந்தஸ்த்துக் கோரி இரண்டு ஆண்டுகளாகியும் அரசு அவர்களுக்கான எந்தவொரு வசதியையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. UDHR நிறுவனம் ஒரு நபருக்கு ரூபாய் 10,000 வீதமும் இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 22,000 வீதமும் வழங்கும் […]

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை”

This entry is part 10 of 12 in the series 12 மே 2019

நாஞ்சில் நாடனின் “சதுரங்கக் குதிரை” படித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாறுதான் என்று ஊகிக்க அதிக நேரமாகவில்லை. அனேகமாக மும்பையில் வசிக்கும் அத்தனை வெளி மாநிலத்தவனின் கதைகளுக்கும் அவருடைய கதைக்கு அதிக வித்தியாசம் ஒன்றில்லை. அதே குட்டை. அதில் விழுந்து புழுவாய்த் துடிக்கும் மத்தியமனின் கதை. நானும் ஒருகாலத்தில் அப்படி இருந்தவன்தான் என்பது நினைவுக்கு வருகிறது. அதேசமயம் மும்பையை ஒரு ஏணியாக மட்டுமே உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தேன். அதிர்ஷ்டவசமாக அல்லது எனது கடும் முயற்சிகளின் காரணமாக […]

சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும்

This entry is part 8 of 12 in the series 12 மே 2019

” சமூக விழிப்புணர்வின் மூலம் வரும் அரசியல் தலையீடு இளைஞர்கள் மத்தியில் வளர வேண்டும் மைசூரில் வசிக்கும் எழுத்தாளர் ராமன் முள்ளிப்பள்ளம் நேற்று திருப்பூரில் நடந்த புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் பேசும் போது இப்படிக் குறிப்பிட்டார்”: “ இன்று இலக்கியம் பெரும் கார்ப்பரேட்டுகள் தீர்மானிப்பதாக இருக்கிறது. டிஜிட்டல் சிந்தனைகள் மனித மூளையை மழுங்கடிப்பதாக இர்க்கிறது. இன்று இலக்கியச் சந்தை கேளிக்கை தரும் விடயங்களையேத் தருகிறது. இன்றைய தலைமுறை கைபேசிகள், தொலைக்காட்சி தரும் கேளிக்கைகளீல் மூழ்கிக் கிடக்கிறது. சமூக […]

ஆணவம் பெரிதா?

This entry is part 7 of 12 in the series 12 மே 2019

 (கௌசல்யா ரங்கநாதன்)         -1-  பேராசிரியராய் பணி புரிந்த காலத்திலிருந்தே எத்தனை புத்தகங்கள்,ஆராய்ச்சி கட்டுரைகள், சயன்ஸ் ஃபிக்க்ஷன் கதைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி நான் பாராட்டுக்களை குவித்திருப்பேன்! எத்தனை முனைவர் பட்டங்கள் என்னை தேடி வந்தன..ஆனால் என்  பணி ஓய்வுக்கு பிறகு கிட்டத்தட்ட 5 நீண்ட வருடங்கள் ராப்பகலாய் தூக்கம் தொலைத்து ஒரு புதினத்தை ஆங்கிலத்தில் எழுதப்போக, அதை ஒரு பதிப்பகத்தார் வாங்கிப் போட, குறுகிய காலத்திலேயே அது பல பிரசுரங்கள் கண்டது..உலகின் […]

தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டும்

This entry is part 5 of 12 in the series 12 மே 2019

 1.  https://youtu.be/4BYXlvnJ9wo  2.  https://youtu.be/NgXPooc7KmI3.  https://youtu.be/-ZenuOGTohk4.  https://youtu.be/hJbqafB4POA சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[கட்டுரை : 1]++++++++++++++++++ 1.  https://www.hitachizosen.co.jp/english/pickup/pickup003.html2.https://www.hitachizosen.co.jp/english/products/products011.html3. https://www.hbfreshwater.com/desalination-worldwide.html4. https://www.solarpaces.org/csp-power-water-namibia-study/5.https://en.wikipedia.org/wiki/Concentrated_solar_power6. https://www.unenvironment.org/news-and-stories/story/towards-sustainable-desalination7. https://en.wikipedia.org/wiki/Desalination  [May 10, 2019]++++++++++++++++++++++ Reverse Osmosis Desalination Plant in Spain ++++++++++++++ சூரிய வெப்ப சக்தி நிலையம்,சீரிய முறையில் கடல்நீரைக் குடிநீராக்கும் !தமிழகக் கடற்கரை  குமரி முதல் சென்னை வரை நானூர் மைல் நீண்டது !வானூர் திக்குப் பயன்பட்டது !பரிதி சக்தியால் பறக்கும் ஊர்தி !எரி வாயு இல்லாமல் பறக்கும் !பகலிலும் இரவிலும் பறக்கும் !பசுமைப் புரட்சியில் சிறக்கும் !பாதுகாப்பாய் இயங்குவது !நாற்பது குதிரைச் சக்தி ஆற்றலில் நான்கு […]

“ கோலமும் புள்ளியும் “

This entry is part 4 of 12 in the series 12 மே 2019

ஸ்ரீ கிராமத்துத் தெருக்களைப் பசுஞ்சாணி கரைத்துக் குளிப்பாட்டி அம்மாவும் பெண்ணும் அக்காவும் தங்கையும் தோழியும் தோழியும் போட்டி போட்டுப் போடும் கோலங்கள் அஞ்சுக்கு எட்டு புள்ளி பத்துக்குப் பதினைந்து புள்ளி அதற்கும் மேலே இருபத்தஞ்சு கூட போகும் ஒன்றோடொன்று புள்ளிகளை இணைத்தும் ஒவ்வொரு புள்ளியையும் நடுநடுவே வைத்தும் கோடுகள் இழுத்தும் கொடிபோல வளைத்தும் கோலங்கள் கிளர்ந்தெழும் தாமரைப்பூ மலரும் தாழம்பூ சிரிக்கும் கிளிகள் பறக்கும் கிருஷ்ணன் கால் தெரியும் கலர்ப்பொடியை நிரப்பி பார்டர்கள் போட்டு நடுமத்தியில் கைநிறைய […]

பிரசவித்துச் சென்ற அக்காவின் அறை

This entry is part 3 of 12 in the series 12 மே 2019

ஸ்ரீ நேற்றுத்தான் கிளம்பினாள் அக்கா தனது நான்கு மாத தேவதையுடன் அக்காவே ஒரு தேவதைதான் தேவதைக்கு வேறு என்ன பிறக்கும் இறங்கிய வயிற்றுடன் வந்து இறங்கிய கர்ப்பவதியின் கர்ப்பக்கிரகமானது வாசலை ஒட்டிய பத்துக்குப் பத்து அறை அக்காவுக்கென்று ஒதுக்கிய அந்தத் தனியறையில் முதலிரண்டு மாதம் ஒரேயொரு விக்கிரகமும் அதைத் தொடர்ந்து நேற்றுக் காலை வரையிலும் இரண்டு விக்கிரகங்களும் அருளாட்சி புரிந்தன பிள்ளை வரம் கேட்போருக்குப் பெருமாள் கோயிலில் குழந்தைக் கண்ணன் விக்கிரகத்தை மடியில் கிடத்துவதுபோல யார் வந்தாலும் […]