ரவி அல்லது. தாவித் திமில் பிடித்து. தட்டுத் தடுமாறி விடாது இழுத்து. தலை குப்புற விழ வைத்து. கிழித்து இரத்தம் பீறிட கிறுக்காக்கி எகிறிக் கொண்டே இருக்கிறது இந்த எண்ணங்கள் எப்பொழுது பிடிபடாமல் ஓடி. *** –ரவி அல்லது. ravialladhu@gmail.com ***
முனைவர் ந.பாஸ்கரன் போகி பொங்கல் திருநாளை வரவேற்கும் முன்தீ நாள். மன மாசுகளையும் மனை மாசுகளையும் இரு மாசுகளையும் தின்றொழிக்கத் தீநாக்குத் தொங்கும்நாள். பழையனவற்றைப் புதியன எரித்து விரட்டும் எரிநாள். அழுக்கு அஃறிணைகளைக் கழட்டியெரித்தெறிய உயர்திணைக்கு வாய்ப்புநாள். நெருப்புநீரில்… மனப்பந்தலில் பூத்துக்குலுங்க மல்லிகைப்பூக்கள் பூக்கும்நாள். பயன்பாட்டு ஒட்டடைகளில் புதையுண்ட பொருள்கள் புதைபொருள்கள் அல்ல புதைக்கவேண்டிய பொருள்களாக்கிப் போகியோபோகியென்று உரக்கச்சொல்லும் வெளிச்சநாள். போகியின் முடிக்கும்நெருப்பு எடுக்கும். பொங்கலின் அடுப்புநெருப்புக் கொடுக்கும். — முனைவர் ந.பாஸ்கரன் இணைப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை பெரியார் […]
.ரவி அல்லது. தற்கொலைத் தாக்குதல் என்றான பின் யார் எங்கு எப்படி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்தான். யுகாந்திர நோதலின் வெறுப்புக் கனல் கொளுந்து விட்டு எரிய உதவிடும் காற்றைப் பற்றி சொல்லத் தேவையில்லை கலந்திருக்கும் மாசுக் கட்டற்று கலந்திருப்பதால். அபகரித்து ஆக்கிரமித்த நிலங்களை மீட்கும் போரில் புற முதுகிட்டு ஓடும் அவலத்தை ரசிக்க முடியவில்லை அழிவில் எம் பங்கும் மிகைத்திருப்பதால் சமாதான மேகங்கள் சூழாமல் சர்வ நாச யுத்தம் நடந்து கொண்டிருக்கும்பொழுது அங்கேயொரு மாமிச மனித பிண்டம் […]
விடாது துரத்துகின்றவைகளுக்காகவும் விட்டு விட முடியாதவைகளுக்காகவும் ஓடுமென் அன்றாடத்தின் இடையில் உரசிவிடும் இவரை விட்டொழித்துவிடலாம்தான் வெறுப்பின் வேதனையில். மறந்துபோன என்னை நினைவூட்டுவதன் பொருட்டால் யாவின் அசௌகரியங்களையும் பொறுக்கத்தான் வேண்டியதாகிறது இவரைப் போல ஒருவரை இக்கணம் வரை என் வாழ்வில் சந்திக்க இயலாதிருப்பதால். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
படைப்பிலக்கியம், நாடகம், ஊடகம், இதழியல் பதிப்புத்துறை, அரசியல், தொழிற்சங்கம் சமூகச்செயற்பாடு என தனது பொதுவாழ்வில் அகலக்கால் பதித்து, இயங்கிக்கொண்டிருந்த எமது நீண்ட கால நண்பர் அந்தனிஜீவா அவர்களுக்கு காலம் விடுதலை வழங்கியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக அவர் உடல்நலம் குன்றியிருந்தார். 1944 ஆம் ஆண்டு பிறந்திருக்கும் அந்தனிஜீவா, தமது எண்பது வயது நிறைவின் பின்னர் விடைபெற்றுள்ளார். 1960 களில் இலக்கியப்பிரதிகள் எழுதத்தொடங்கிய அந்தனிஜீவா, உடல்நலம் குன்றும் வரையில் தொடர்ச்சியாக இயங்கிக்கொண்டிருந்தவர். 1970 இற்குப்பின்னரே அந்தனிஜீவா, எனது இலக்கிய […]
சொற்கீரன் ஓங்கு பருதி செந்நெல் குப்பை பழனந்தோறும் அணிமலி காட்சியின் சோறுடைத்து வளனே நீரொடு கலித்த வளவன் நாட்டு திண் தோள் மறவன் கையொடு கோர்த்து இலம் நீங்கு தோகை கண்ணொடு கண்ணிணை கசிய வாங்கு நுதலி கருவிழியாளும் வரு நிலை கலங்கா வண்ணம் சேர்த்து கதழ்பரி கலிமா அன்ன விரைஇ கடும் சுரம் எதிர்த்தும் கால் பதித்தனளே. ஆறு அலையுநர் பசுங்குடை பொதிந்த வெண்ணிய சோறு மறிப்ப போலும் பசி உழல யாங்கும் நோன்றல் இல்லாள் […]
ஆர் சீனிவாசன் சில நாட்களாய் ப்ரசாத் கவனித்து வந்தான். அன்புமணி அவனுக்கு வீடியோ கால் செய்யும்போதெல்லாம் சரியாக பேசுவதில்லை. ஒரு விஷயத்தில் ஆரம்பித்து வேறு எங்கோ பேச்சு போய்விடும். அமேரிக்காவில் வசித்த ப்ரசாத் அன்புமணியிடம் ஒரு நாள் கூட தவறாமல் பேசுவான் ஆனால் சமீபகாலமாக அப்பாவின் பேச்சில் மாற்றங்கள் தெரிந்தன. அம்மாவின் மறைவுக்கு பின் அப்பாவிடம் “அமேரிக்கா வந்துவிடு” என எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. ப்ரசாதின் அம்மா காலமான பிறகும் சொந்தவீட்டில் தனிமையில் வசித்துவந்தார் அன்புமணி. […]
புகலிட தமிழ் இலக்கிய உலகின் மூத்த படைப்பாளி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ! பிறந்த தினம் ஜனவரி 01 பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கும் ஆளுமை !! முருகபூபதி “ எழுத்தாளராகிய எவரும் தங்கள் இளவயதில் தாம் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். ஆனால், எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும், படிப்பறிவும், அனுபவங்களும், சந்திக்கும் மனிதர்களும், மோதிக்கொள்ளும் கருத்தாடல் நிகழ்வுகளும் எழுத்தாளர் ஒருவரை உருவாக்க உதவும் என்பது […]
ஜெ. ஜெயகுமார் ஆஸ்திரேலியா நியூஸ் சேனலின் “செய்திகள்” வாசிப்பில் வந்த கொலை வழக்கு தன்னை ஆஸ்திரேலியா முழுக்க அறியச் செய்யும் என்று ரம்யா சற்றும் நினைக்கவில்லை. வங்கிகளில் பணியாற்றி ஓய்வு பெற்று அறுபதாம் அகவையை எட்டிவிட்ட ரம்யா, முரளி தம்பதியினர் மூன்றாவது முறையாக சென்னையிலிருந்து மெல்போர்ன் வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஆஸ்திரேலியாவிற்கே உரித்தான ஒரு தினசரி வாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். ரம்யா அதிகாலை ஐந்து மணி அளவில் எழுந்து மகன், மருமகள் இருவருக்கு புதிதாக […]