முகில் தினகரன் காலையில் தலைமை ஆசிரியரிடம் வாங்கிய திட்டுக்களின் தாக்கம் காரணமாக பத்மாவதி டீச்சரால் அன்று முழுவதும் பாடம் நடத்தவே முடியாமல் போனது. ‘ச்சை…மனுசனா அந்தாளு?…லேடீஸ்ன்னு கூடப் பார்க்காம என்னமாத் திட்டிட்டான்!….இதே திட்டுக்களைவ Pட்டுல தன் பொண்டாட்டி கிட்டக் காட்டுவானா?….பிச்சுப் போடுவா!…அதான் அங்க காட்ட முடியாததை இங்க வந்து காட்டறான்!…வெத்து வேட்டு!” ‘ம்…ஸ்டூடண்ட்ஸ்…இன்னிக்கு எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு…ஸோ…புதுப்பாடம் எதுவும் எடுக்க முடியாது!….நீங்கெல்லாம் நேத்திக்கு நான் சொல்லிக் குடுத்த பாடத்தையே மறுபடி ஒரு தரம் நல்லாப் படிச்சு…மனப்பாடம் […]
பாஸ்கர் லக்ஷ்மன் ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி […]
நண்பர்களே, மாற்று திரைப்பட வளர்ச்சிக்காகவும், மாற்று திரைப்பட கலைஞர்களை கவுரவப்படுத்தவும் தமிழ் ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்ட “லெனின் விருது” இந்த ஆண்டு ஆவணப்பட / திரைப்பட இயக்குனர் அம்ஷன் குமார் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான விழா ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். திரையரங்கில் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில்.. அம்ஷன் குமார் அவர்களுக்கு லெனின் விருது வழங்கப்பட்டதை முன்னிட்டு அவரது படைப்புகள் தமிழ்நாடு முழுவதும் தமிழ் ஸ்டுடியோவால் திரையிடப்படுகிறது. சென்னை, […]
ஆய்வாளர் நாமக்கல் நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன் எழுதிய அதிகார நந்தீசர் என்னும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா. நாள்: ஞாயிற்றுக் கிழமை, ஆகஸ்டு 12, 2012. நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை. (தேநீர்: காலை 9:45) இடம்: ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், உயர்நீதி மன்றம் எதிரில், பாரி முனை, சென்னை. நிகழ்ச்சி நிரல் கடவுள் வாழ்த்து: செல்வி க. காயத்திரி, ஜெயா டி.வி. புகழ் லிட்டில் மாஸ்டர். குத்துவிளக்கு […]
சிறகுகளில் கூடுகட்டி காத்திருந்த சிலந்தி உணர்வுகளை உணவாக்கிய பொழுதொன்றில், யாருக்கும் கிடைக்காத ஓரிடம் தேடி ஒதுங்க விளைந்த மனது, நிராகரிப்பின் வலியொன்றில் மலரெடுத்து சூடி வாழ்வியலின் ஆரோகனிப்பை _அந்த நாற்றத்துள் மறைத்துக்கொண்டு இயங்கத்தொடங்கிற்று. நிபந்தனைகளையும் நிர்ப்பந்தங்களையும் சபிப்புகளையும் சம்பிரதாயங்களையும் சடங்காகவே கொண்டு, கவனிக்கப்படுதல் மீதொரு கவனம்வைத்து தன்னிலை மறந்து அவதானிக்க தொடங்கியது………………. பின் , தோற்றுப்போன பொழுதொன்றில் ஆழிசூழ் ஆழத்தில் முத்துக்களுக்கு பக்கத்தில் பேச்சடங்கி கிடந்தது கலைஞனின் குரல். ஆக்கம்:நேற்கொழு தாசன் வல்வை
அம்மாவிற்கு மிகவும் பிடிக்கும் மாம்பழங்கள். இமாம்பசந்த், பங்கனப்பள்ளி மல்கோவா, ருமேனி என ஒவ்வொன்றின் சுவையும் எப்படி வேறென மாம்பழம் சாப்பிடும் அம்மாவின் முகமே சொல்லும். மாயவரம் பக்கம் அம்மாவின் அண்ணன் இருந்ததால் பாதிரியை கிறிஸ்தவப் பழம் என அதிகம் கொண்டாடுவாள். மடியை விட்டகலாத கன்றென நார்ப்பழங்களின் சப்பின கொட்டையை தூக்கி எறிய மனதற்றிருக்கும் எங்களை ” எச்சில் கையோடு எவ்வளவு நேரம் ” ? என ஒருபோதும் வைததில்லை அம்மா. […]
1996 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த பதினாறு ஆண்டுகளாக, ஆண்டுதோறும் கவிஞர் சிற்பி அறக்கட்டளை தமிழகத்தின் சிறந்த கவிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வரிசையில் 17ஆம் ஆண்டுக்கான விருது மற்றும் பரிசுகள் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் வானம்பாடிக் கவிஞர் தேனரசன்ஆகியோருக்கு வழங்கப்படுகின்றன. வானம்பாடி இயக்கத்தின் மூத்த கவிஞர்களுள் ஒருவரும் வெள்ளைரோஜா. மண்வாசல். காலத்தோடு ஆகிய கவிதைத்தொகுதிகள் நல்கியவ்ரும் ஆன கவிஞர் தேனரசன் சிறந்த ஆய்வாளரும் கூட. கங்கை கொண்டான் கவிதைகளை […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) கவிஞர் நிந்தவூர் ஷிப்லியின் தற்கொலைக் குறிப்பு என்ற கவிதைத் தொகுதி இந்தியாவின் பிளின்ட் பதிப்பகத்தினரால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இவர் 2002 இல் சொட்டும் மலர்கள், 2006 இல் விடியலின் விலாசம், 2008 இல் நிழல் தேடும் கால்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டவர். 77 பக்கங்களில் வெளிந்துள்ள இந்த நூலானது போர்ச் சூழல் கால கவிதைகளால் நிறைந்திருக்கிறது. யுத்தம் விழுங்கிய அத்தனை அப்பாவி உயிர்களுக்காகவுமே இந்த நூலைக் கவிஞர் சமர்ப்பணம் செய்துள்ளார். […]
அனைவருக்கும் வணக்கம், தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்’‘ என்ற தளத்தை நிறுவியுள்ளோம். நீங்களும் பகுத்தறிவாளர்களாகப் பதிவுலகில் வலம் வருவீர்களானால், உங்களின் வலைத்தளத்தையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த முயற்சி மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான எந்த முகாந்திரமும் இல்லை. விரைவில் அனைத்து Genre-களிலும் சில தளங்களை நிறுவ முயன்று வருகின்றோம் … !!! இணைப்புக்கான விதிமுறைகளை இங்கு சென்று காணலாம் … தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ! அன்புடன் இக்பால் […]
____________________________________________________________________________ ____________________________________________________________________________ PERSATUAN PENULIS PENULIS TAMIL MALAYSIA தமிழ் நாவல் கருத்தரங்கம் =========================== 28/7/12 , 29/7/12 சனி, ஞாயிறு Hotel Grand Pacific, Kuala Lumpur, Malaysia நாவல் அனுபவம்: உரை சுப்ரபாரதிமணியன் பிற உரைகள்: முனைவர் ரெ.கார்த்திகேசு முனைவர் சபாபதி முனைவர் கிருஸ்ணன் நிறைவுரை: பி.ராஜேந்திரன் ( தலைவர், மலேசியா தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் ) தொடர்புக்கு: rajlaavan__83@yahoo.com ______________________________________________