author

யாவிற்குமான பொழிதல்.

This entry is part 3 of 5 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது.  சூழும் கருமேகம்  விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட.  பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள் ரவறண்ட வாழ்க்கையில் ஈரப்பதமற்று கண்டு முதலாக்கிவிட.  இரை  எடுத்துச்சென்ற ஏதோவொன்று தவறவிட்ட தட்டைக்கார மீனை சேமிப்பாக்கிக் கொண்டிருந்தது சிற்றெறும்புகள் நிதானமாக.  பிய்தெடுத்த சதைகளற்ற முள் கூடு வசீகர அழகு கூட்டியது மழைக் கணத்தை மறக்க […]

அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.

This entry is part 5 of 5 in the series 8 செப்டம்பர் 2024

குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் […]

மேவிய அன்பில் திளைக்கும் கருணை

This entry is part 1 of 5 in the series 8 செப்டம்பர் 2024

ரவி அல்லது கைகளசைத்தஇடப்பக்கம் நின்றுருந்தஇரு சிறுவர்களின்கையிலிருந்ததுஇனிப்பாக இருக்குமெனநினைத்தேன்.வேகமாகவாகனத்தில்வந்தபொழுதுஅவதானிக்க தவறியதால். கூப்பிடு தூரத்தைகடந்துவிட்ட போதும்திரும்ப நினைத்ததுபிறந்த நாளுக்குஇனிப்பு கொடுக்கநினைத்திருக்கும்.அவர்களின் அறச் சிந்தனையைஉதாசீனம் செய்யலாகாது.ஆட்களைப் பார்த்துவருவது இல்லைஅறமென்பதனால். முன்பொரு முறைசுட்டெரிக்கும் வெயிலின்மதியப்பொழுதில்கல்லூரி மாணவர்கள்கரும்பு பானம்வாங்கிக் கொடுத்தார்கள்தாகத்தணிதலாககடந்து செல்கிறவர்களுக்கு.பிறந்த நாளுக்கென்றுசொன்னாலும்கைபேசியின்விருப்பு எண்ணிக்கை கூடலின்ஆசையென்பதைமறுக்கவியலாதுநற்பயனாகவந்தவர்களின்உள்ளம் குளிர்ந்தாலும். திரும்பிச் சென்றபிறகுதான்தெரிந்தது.வீதியோரவழிபாட்டு பாடல்களால்விளைந்ததுஇச் சிறுவர்களின்மகிழ்ச்சி பொழுதுகளென்பதுநம்பிக்கையைபாலத்தின் திண்டில் வைத்துபூக்கள் தூவி இருந்ததால். மீச்சிறுநிகழ்வு கூடஆழப் புரிதலுக்குள்தள்ளுகிறது.புறங்களை மறக்கவைக்கும் படியாக.வீதியோரங்களில்விண்ணதிரபாடல்கள் ஒலித்தாலும்சிந்தயைச்சிதைக்காத பயணமாகவாய்க்கிறது. இப்போதெல்லாம்யாவரின்மீதான கரிசனமாக. பிறகொரு நாள்வரும்பிறந்த நாளில்பிரித்து எடுத்துக்கொள்ளுங்களெனஐம்பது ரூபாய் கொடுத்தேன்ஆதுரச் சிரிப்பில்.‘டேய்…ஆளுக்கு இருபத்தஞ்சிடா’ […]

மன்னிப்பு

பென்னேசன்            இதுவரை ஐந்து முறை   வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால்.  இடது பக்கத்து இருக்கைக்காரன் படம் பார்க்கும் சுவாரசியத்தில் இந்தத் தொந்தரவைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மஞ்சுளாவின் உச்சுக் கொட்டும் சத்தம் அதிகரித்து வந்தது.  அவன் பக்கம் சாய்ந்து காதில் கிசுகிசுத்தாள். “இதோ பாரு ருக்கு உனக்கு சினிமா எல்லாம் பிராப்தம் […]

கோமா

ஜீயெஸ் வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு,  பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை  தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில் இருந்த பல கோடி மதிப்புள்ள நவீன சாதனங்கள் சேதமடைந்தன. ஹாஸ்பிடல் முழுவதும் இருளில் மூழ்கியது. அந்த சமயம் இன்னொரு சம்பவமும் அங்கு நடந்தது. அந்த வளாகத்தின் இன்னொரு பகுதியில் மாடி அறை ஒன்றில் மானிட்டருடன் […]

நீதி வழுவா நெறி முறையில்.

This entry is part 1 of 3 in the series 1 செப்டம்பர் 2024

ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் தெரியாது. ஆள் காட்டி விரலுக்குஅசைந்தாடும்கூட்டத்திற்குஅறக்கூற்றானஅப்பாநீதியாகஎனக்குள்நின்றிருந்ததைபொட்டழிக்காமல்புறப்பட்ட அம்மாபொசுக்கிவிட்டுபோனது அவருக்கே தெரியாது. நடு நிசிகனவெனநான்நினைத்தஒரு கேவல்…ஒரு அறை…ஒரு கெஞ்சலின்…பொருட்டாகசிறாரில் தொடங்கிவிடுதி மாறிவிடுதியாகவேலையெனவெகு தூரம்வந்தவனிடம்அக்காஅழுதுகொண்டேகெஞ்சினாள்அப்பாவைகடைசியாககாணொளியிலாவதுபாருடாகல் நெஞ்சக்காரவென்று. காரணமறியாமலையேபோகும்அப்பாவுக்கும்கடுஞ்சினமானவீட்டாருக்கும்அம்மாவின்சாயலொத்தஎன் மாற்றம்அறியாததுதான். -ரவி அல்லது.

போகாதே நில்.

This entry is part 6 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி. ‘இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு’‘எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது’‘ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா’‘ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்’‘அதான் எதுக்கு னுதான் சொல்லேன்’‘நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்’‘சரி போயிட்டு வாங்க, நானெதுக்கு?’‘யசோதா அவனுக்குப் புரியல, உனக்குதான் பொண்ணு பார்க்கறோம்.’என்று சொல்லிக் கொண்டே மடிப்புக் கலையாத காக்கி உடையில் தொப்பியைக் கையில்எடுத்துக்கொண்டு வந்தார் கோவிந்தன்.‘அப்பா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம், ரெண்டு வருஷம் போகட்டும்’‘நீதான் […]

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

This entry is part 3 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

நா. வெங்கடேசன்  [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு வெளியூர் ஏகித் திரும்பும்மணாளன் தன் அன்பு மனையாளின்ஆசை முகந்தனில்கப்பிய காதலுடன்அப்பிய குங்குமப் பூக்குழம்புபூச்சு போலாச்சே![ஶ்ரீம.பா.10.29.3]குமுதமலர்ந்து பூரணகலை ஒளிசிந்தகுமுதவல்லி திருமுகப்பொலிவாய் சீருடன் புதியகுங்குமப்பூ ஶிவப்பில் சந்திரனவன்இன்னொளியால் வனம் முழுதும் ஶிவந்து கண்ட கோவிந்தன் குழலூதினாரே!கோகுலத்து கோபியர்கள் […]

நின்றாடும் சிதிலங்கள்.

This entry is part 1 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின் வடுவாக. வருட சேமிப்புவாசலில் சிதைந்த கோவத்தில்தொரத்திப் பிடிக்கவியலாத ஆற்றாமையில்விலாசிய கம்புமுதுகில்தோல் தெரித்துஇரத்த கசிவானதுஅறுபதுக்கும்ஆறுக்குமான அணுக்கத்தில். துக்க வீட்டின் துயரத்தைப்போலஅய்யாவும்அக்காக்களும்அன்றைய பொழுதில்அழுததைப்போலபிறகு நடந்தபேரிழப்புகளெதிலும் கண்டதில்லைஅவ்வகச்சேர்மான மெய்யை. வேதனையில்விழிக்கும் பொழுதெல்லாம்விளக்கொளியில்மயிலிறகால்தடவிய படி இருக்கும்காட்சிஎந்த ஜென்மத்திலும்அழியாதுபடிமமாகிவிட்டஅய்யாவின் அன்பின்திளைப்பால். சலிக்காமல்சமன் […]

கவிதைகள்

This entry is part 2 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ரவி அல்லது கரைதலின் மீட்சி சற்றேனும் பிடித்து நிறுத்திட முடியாத இம்மனம்தான் சிலரை கோவிக்கிறது. சிலரை வெறுக்கிறது. சிலரை துதிக்கிறது தலைக்கேறிய கௌரவ தொனியில். அந்தியின் மோனத்தில் யாவும் கூடடைய. இதன் தொண தொணப்புதான் நின்றபடியாக இல்லை மேவும் கலைப்பில். சொல் கேளா அதனுடன் இனியொரு பொழுதும் துயருறுவதாக இல்லை குடை பிடிப்பதான அக்கரை அழைப்பில். சிறுமையின் செருப்பெனக் கொண்டாலும் கருணையினால் கரைவதைத் தவிர யாதொரு சுகமுமில்லை முன்கணம் வரை. *** புரை தீர்க்காதப் புண். அன்று […]