Articles Posted by the Author:

 • வாக்குகடன்

  வாக்குகடன்

                    ஜனநேசன்     இராமேஸ்வரம் – புவனேஸ்வரம்  விரைவுரயில் பத்துநிமிடம்  தாமதமாக  காரைக்குடி சந்திப்புக்குள்  நடுப்பகல் பனிரெண்டுமணிக்கு   நுழைந்தது; மூன்றாம்வகுப்பு பெட்டி  நிற்குமிடத்தில் நில்லாமல்  சற்று முன்னே நகர்ந்து  நின்றது. வண்டி இரண்டேநிமிடம் நிற்குமென்பதால்  மனைவியை அழைத்துக்கொண்டு இருதோளிலும்,கையிலும் சுமைப் பொதிகளை ஏந்திக்கொண்டு ஓடினேன். B.1 .பெட்டியில் ஏறும்போது  அவசரமாக தண்ணீர் பிடிக்க பாட்டில்கள் ஏந்தி மூவர் அழுக்குடையில்  இறங்கினர். சுமைப்பளு இழுப்பும், மனைவியை  பதவுசாக முன்னால ஏறச் செய்யனுங்கிற படபடப்பும் உந்த பொங்கிய […]


 • எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் !

    எழுத்தாளர் அகிலன் ( 1922 – 1988 )  நூற்றாண்டு ஆரம்பம் ! இந்திய ஞனபீட விருதைப்பெற்ற முதல் தமிழ் படைப்பாளி ! !                                                                         முருகபூபதி தமிழ்நாடு புதுக்கோட்டையில் பெருங்காளுர் கிராமத்தில் வைத்திலிங்கம் பிள்ளை – அமிர்தம்மாள் தம்பதியின் புதல்வனாக அகிலாண்டம் என்ற இயற்பெயருடன் பிறந்தவர், பின்னாளில் காந்தீயவாதியாகவும் இந்திய சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் வளர்ந்தவரான எழுத்தாளர் அகிலன் அவர்கள் –  பிறந்த நூற்றாண்டு  இந்த வருடம் ஜூன் மாதம் 27 ஆம் திகதி […]


 • பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

  பொன்.குமார் “சந்ததிப் பிழை” நூலறிமுகம்

                ஜனநேசன்    புதிதாக  எழுத வருபவர்களை  வாழ்த்தி வரவேற்று , ஊக்கப்படுத்தி  நல்லிலக்கியம்  நோக்கி ஆற்றுப்படுத்தும் பணியை எழுத்தாளர் வல்லிக்கண்ணனும் , அவரது  சீடர்  என்றறியப்பட்ட தி.க.சிவசங்கரனும்  செய்து வந்தனர். தற்போது  இப்பணியை  சேலம் நகரில் இயங்கிவரும் , கவிஞரும், விமர்சகருமான  பொன்.குமார் செய்து வருகிறார்.  இவர் ஐந்துக்கு மேற்பட்ட  கவிதை நூல்களையும், பதினைந்துக்கு மேற்பட்ட,கவிதை, கதை, நாவல் , கட்டுரைகள் போன்ற இலக்கிய              வகைமைகளைப் பற்றிய  விமர்சன தொகுப்பு நூல்களை  எழுதியுள்ளார். இவர் […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 273 ஆம் இதழ் இன்று (ஜூன் 26, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் : மிளகு அல்லது இரா. முருகனின் நளபாகம் – நம்பி காஃபி – லோகமாதேவியின் தாவரவியல் சஞ்சாரங்கள் ஹஃபீஸ் ஜலந்தரி – அபுல் கலாம் ஆசாதின் ‘கவிதை காண்பது’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி. அணுவிற்கணுவாய்  -பானுமதி ந. கடவுளும் காணா அதிசயம் – கமலக்கண்ணன் – (’ஜப்பானியப் பழங்குறுநூறு’ தொடரில் அடுத்த பகுதி) புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20 – ரவி நடராஜனின் ’புவி சூடேற்றம்’ கட்டுரைத் தொடர் தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? – உத்ரா ( ’எங்கிருந்தோ’ கட்டுரைத் தொடரின் அடுத்த பகுதி) ஓரிரவில் அமெரிக்க நிலப்பரப்பு இருமடங்கான அதிசயம் – கடலூர் வாசு   நாவல் தொடர்கள்: வாக்குமூலம் – அத்தியாயம் 4 – வண்ண நிலவனின் நாவல் மிளகு  – அத்தியாயம் இருபத்துநான்கு – இரா. முருகனின் நாவல் ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு – கிருஷ்ணா ஸோப்தியின் இந்தி நாவல் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி) தந்திரக் கை – 1 – பீட்டர் S. பீகில்  (தமிழாக்கம்: மைத்ரேயன்) – அதிபுனைவு   சிறுகதைகள் […]


 •  கவிதைகள்

   கவிதைகள்

    ப.அ.ஈ.ஈ.அய்யனார் யாருக்காகவோ இரயில் நிலைய அந்தரத்தில் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியில் இளைப்பாறும் வண்ணத்துப்பூச்சியென ஒட்டிக்கொண்டேன் நடைபாதை பிணமாய்…   *********     தினம் புகும் ஒளிச் சிதறல்கள் சன்னலின் வழியே படுக்கையறையை ஊடுருவி நீந்தும் போது முகத்தை மறைத்து பூமாலைகள் ஏந்தியிருந்தன   உலர்கருவாடாய் சுருங்கிப் போன அப்பச்சியின் முகத்தில் நெற்றிக் காசில் மொய்த்தன ஈக்கூட்டங்கள்   இரு கண்ணிலும் அப்பிக் கொண்ட வெயில்சந்தனம் ஊர் பரப்பி ஒப்பாரிக் கண்ணீரிலும் கலந்து விட்ட விடியல் […]


 • புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்

  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022 – இலக்கிய விருதுகள்

    ஆசிரியர் குழுவினர்க்கு அன்பான வணக்கம். புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில் வழக்கம்போல் சிறந்த நூல்களுக்கான விருதுகள் மட்டுமின்றி, இணைய இதழில் வெளிவந்து, நூலாக்கம் பெறாத படைப்புகளுக்கும் விருது தர முடிவுசெய்யப்பட்டுள்ளது எனவே, தங்கள் இதழில் இந்த அறிவிப்பை வெளியிட்டு நல்ல படைப்பாளிகள் விருது பெற உதவும்படி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.  நன்றியும் வணக்கமும். அன்புடன், நா.முத்துநிலவன், ஒருங்கிணைப்புக் குழு, 5ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை – 622001  22-6-2022  ——————————————————————— புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2022இலக்கிய விருதுகள்– அறிவிப்பு———————————————————————    […]


 • ஓர் இரவில்

  ஓர் இரவில்

                                                              மீனாட்சி சுந்தரமூர்த்தி.    இரவு இரண்டு மணிக்கு அந்த கிராமமே விழித்துக் கொண்டிருக்கிறது. சகுந்தலாம்மா வீட்டில் . பொண்ணுக்கு,பையனுக்கு சொல்லியாச்சா,இவங்களோட தம்பி திருமாணியில இருக்காரே அவுருக்கு சொல்லிட்டாங்களா? நேத்து  வந்திட்டுப் போனாரே,  ரெண்டுல மூணுல  […]


 • ஞாயிற்றுக்கிழமை

  ஞாயிற்றுக்கிழமை

    பேரா. செ. நாகேஸ்வரி                                                                                                                                                     இலொயோலா கல்லூரி வேட்டவலம் அலைபேசி எண் : 8695987997       விடுமுறை என்றதுமே விதவிதமாய் எண்ண ஓட்டங்கள் விதிவிலக்கு ஏதுமில்லை வேலைக்கு போகும் பெண்களுக்கு!   முதல்ல வீட்ட ஒழிக்கோனும் கூட்டித் தொடைக்கோனும் அழுக்குத்துணியை ஒதுக்கோனும் அசராம வேலை பாக்கோனும்   புள்ளைங்களுக்கு எண்ண தேய்ச்சி ஊத்தோனும் ஈறு, பேணு எடுக்கோனும் இன்னைக்காச்சி என் கையால புள்ளைங்களுக்கு சோறு ஊட்டோனும்!   கடகன்னிக்கு போகோனும் காய்கறி வாங்கோனும்! […]


 • ஜன்னலுக்கு வெளியே வெண்ணிலா

      தெலுங்கு மூலம்: வாட்ரேவு வீரலட்சுமிதேவி தமிழ் மொழியாக்கம்: பொருநை க.மாரியப்பன் மூல ஆசிரியர் குறிப்பு                     வாட்ரேவு வீரலட்சுமிதேவி, விசாகபட்டினம் மாவட்டம் கிருஷ்ணதேவி பேட்டையில் ஜூலை 19, 1954இல் பிறந்தார். கிழக்கு கோதாவரி மாவட்டம் சங்கவரமில் வளர்ந்தார். காக்கிநாடா சமஸ்கிருத கலாசாலையில் 16 ஆண்டுகளும், டிகிரி கலாசாலையில் 22 ஆண்டுகளும்  ஆசிரியராகப் பணிபுரிந்தார். கதைத் தொகுப்புகள், உத்சவ சௌரபம், கொண்டபலம், கிடிக்கிக்கு பயட்ட வெண்ணலா போன்றவைகளோடு மற்றும் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். பி.எஸ்.தெலுகு பல்கலைக்கழக […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ்

    அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022)   வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: நான் யார் யாரென்று சொல்லவில்லை –பானுமதி ந. கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும் – ஜிஃப்ரி ஹாஸன் கல்வித் துறைக் கொடுமையாளர்கள் – கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) பெண்களும் கற்புப் பூட்டும் – சந்திரா நல்லையா இராசம்மா ஆரோக்கிய […]