author

கரை திரும்புமா காகம் ?…

This entry is part 3 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

ச.சிவபிரகாஷ் ஏழரை சனி வந்து, எழுச்சி மிக காட்டவே, உக்கிரம் தணிக்க, உத்தேசமாக பரிகாரம் சொன்னார்., ஊரறிந்த சோதிடர். சனிக்கிழமைகளில், காகத்துக்கு… எள்ளு சாதமும், சதா…நாட்களில், சாதமும் வைக்க… சுயநல சூழ்ச்சியறிந்து காகம் – அதை மன்றாடியும், மனதிறங்கி, வரவே இல்லை. கரிசனம் காட்டுமா? கடவுளான கிரகமும், தொண்டை கமறிய, காரியும். வெட்டப்பட்ட மரத்தில் – முன் கூடுகட்டி வாழ்ந்த, காகத்தையும், கடைசி வரை, காணவே இல்லை. காய வைத்த, வத்தல்,வடாமை வாயில் கவ்வ, வட்டமடித்து வந்த […]

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 323ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 323ஆம் இதழ், 28 ஜூலை , 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் அஞ்சலி எழுத்தாளர் பொன்னம்மாள் – பாஸ்டன் பாலா கலை எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2 – வெங்கட்ரமணன் இலக்கியம் கொடை மடம் – கே.எம்.ஆர்.விக்னேஸ் ஈவா ஹாஃப்மன் எழுதிய ‘இலுமினேஷன்ஸ்: அ நாவல்’- ஓர் உளவியல் பார்வை – ஸ்ரீவித்யா எஸ் சமூகம் டச்சு […]

புறப்பட்டது முழுநிலா

This entry is part 3 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                  மழைமேகம் இருண்டு திரண்டு கொண்டிருந்தது.குண்டூசி இலேசாகப் பட்டால் போதும் படாரென வெடிக்கும் பலூன்போல சடசடவெனக் கொட்டக் காத்துக் கொண்டிருந்தது. வினாயகம். மழை வருவதற்குள் வீடு சேர  அலுவலகத்திலிருந்து புறப்பட்டிருந்தார். பள்ளி, கல்லூரி, அலுவலகம் சென்று எல்லோரும் திரும்பும் நேரமென்பதால்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. தனியார்  வங்கி ஒன்றில் கிளை மேலாளராகப் பணிபுரிகிறார்.ஆறு மாதத்தில் ஓய்வு பெறப் போகிறார்.  சிக்னலில் நிற்கும்போது அலைபேசி சிணுங்கியது. வண்டி ஓட்டும்போது  பேசும் வழக்கம் இல்லை […]

தொட்டால்  பூ மலரும்

This entry is part 2 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

வெங்கடேசன் ராஜமோகன் ” பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற அறிவிப்பின் மத்தியில் ,  ஓயாத இறைச்சலோடு , இயங்கி கொண்டு இருந்த எழும்பூர் ரயில் நிலையம் அன்று காலை அங்கு வந்து இறங்கிய பயணிகளை வெளியே அனுப்ப , திணரிக்கொண்டு இருந்தது. ” எங்க சார் போகனும் ” ? அந்த குரலை கேட்டதும் தான் , கதிர் தன் அருகே  உரசிடாமல் நிற்கும் ஆட்டோவையும், அதனுள்ளிருந்து  அந்த கேள்வியை கேட்டவரையும் கண்டான். “வடபழனி ” அண்ணன்…. […]

வக்கிர   வணிகம்

This entry is part 1 of 3 in the series 28 ஜூலை 2024

         சோம. அழகு             நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்த காலம். “என்ன இது? இவங்களுக்கெல்லாம் வேற கதையே தெரியாதா? பெண் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போற மாதிரியே எடுத்துத் தொலையுறாங்க?” – அப்போது தொடர்ச்சியாக வந்த அவ்வகைத் திரைப்படங்கள் குறித்து சற்று காட்டமாகவே அடிக்கடி சலித்துக் கொள்வார்கள் அப்பா. சலிப்பு என்றெல்லாம் சாதாரணமாக வரையறுத்து விட முடியாது அப்பாவின் அவ்வுணர்வை. “திரைப்படம்தானே? நல்லாருக்கு; நல்லா இல்ல. அவ்வளவுதானே? இதற்கு ஏன் இவ்வளவு எரிச்சல்?” எனத் தோன்றும் […]

தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 )

This entry is part 2 of 5 in the series 21 ஜூலை 2024

காலமும் கணங்களும் :  இலக்கிய  உறவில்  ஒரு ஞானத்தந்தை    தலாத்து  ஓயா  கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் !                                                                        முருகபூபதி  பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள். தேநீரின் […]

கண்ணீர் மறைத்தார்

This entry is part 1 of 5 in the series 21 ஜூலை 2024

மீனாட்சி சுந்தரமூர்த்தி                                                                        வெள்ளைப் பளிங்கில் நெடிதுயர்ந்த அந்தத் திருமண மண்டபம் அரண்மனைபோல் வண்ண விளக்குகளின் ஒளியில் ஜொலித்துக் கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையில் பணியாளர்கள் அங்குமிங்கும் இயங்கிக் கொண்டிருந்தனர். காணொளிகள் நேரலையாக ஆங்காங்கிருந்த பெரிய திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் இல்லாமல் இனிய இசையொலி மென்மையாக ஒலித்துக் கொண்டிருந்தது.பளீரென ஒளிவெள்ளம் பரவாமல், இதமாக மெல்லிய விளக்கொளி தவழ்ந்து கொண்டிருந்தது.முகப்பில் செயற்கை நீரூற்று, நான்கு புறமும் நான்கு மயில்கள் நீரை உமிழ்ந்துகொண்டிருந்தன. நடுவில்  ஒயிலாக மணிமுடி தரித்த வெண்சிறகுத் […]

யுகள கீதம்

This entry is part 4 of 5 in the series 21 ஜூலை 2024

வெங்கடேசன் நாராயணசாமி  யுகள கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா.10.35.2,3] இடது கன்னம் இடது தோளில் சாய்த்து வில்லாய் புருவம் வளைத்தசைத்து மெல்ல உதட்டைக் குழலில் வைத்து தளிர் திருவிரல்கள் துளைகளில் பரவ முகுந்தனின் இன்னிசை திசையெலாம் நிறைய, ஆய்ச்சிகாள்! வானுறை வனிதையர் வல்லினரொடு வானளாவி வியந்து வேணு காணமதில் மயங்கி காமன் கணையொறுத்த சித்தம் கலங்கி வெள்கி அரையிடை அழுக்காடை அவிழ்வதையும் அறியாதசையா நின்றனரே! [ஶ்ரீம.பா.10.35.4,5] நங்கைமீர்காள்! இந்நந்தகுமாரர் நலிந்தோர்க்கு நலம்பல செய்து தேற்றும் வெண்முத்துச்சர சிரிப்பழகர், […]

பரந்து கெடுக….!

This entry is part 8 of 10 in the series 14 ஜுலை 2024

     சோம. அழகு             ‘வாழ்க்கைதான் எவ்வளவு அழகானது!’ என்று கவித்துவமாக சிலர் கூறக் கேட்டு ‘ரசித்து மகிழ்ந்த’ காலம் சமீபமாகக் கானல் நீராகத் தெரிகிறது. இப்போதெல்லாம் இது போன்ற வாக்கியங்கள் உடனடியாக சில முகங்களை அகக்கண் முன் கொண்டு வந்து ‘பரந்து கெடுக…!’ என சபிக்கப் பணிக்கிறது. ‘இவருக்கா இப்படி?’ எனத் தோன்ற வைக்குமே? அவ்வகை முகங்கள். இக்கேள்விக்கு இரு தொனிகள் உண்டு. ‘கொஞ்சமும் மனசாட்சியே இல்லாமல் நடந்து கொண்ட இவருக்கு வந்த வாழ்வைப் பாரேன். […]

கோபிகைகளின் இனிய கீதம்

This entry is part 7 of 10 in the series 14 ஜுலை 2024

வெங்கடேசன் நாராயணசாமி  கோபிகைகளின் இனிய கீதம் கோபிகைகள் கூறுகின்றனர்: [ஶ்ரீம.பா. 10.31.1] வெல்க இவ்விரஜ பூமி இங்கு நீர் பிறந்ததால் தங்கினாள் திருமகள் இங்கு நிரந்தரமாக. உம்மிடமே உயிரை வைத்து உம்மையே சாரும் உன்னடியார் உம்மையே தேடுகின்றார் உள்ள திக்கெலாம் உற்று பாரும் அன்பரே! [ஶ்ரீம.பா. 10.31.2] குதிர்காலக் குளத்தில்  பூத்த பங்கயத்தைப் பழிக்கும் செங்கமலக் கண்ணா! வரதா! கூலியில்லாக் கொத்தடிமைகள் எம்மை கொல்லாமல் கொல்கிறாயே நின் கடைக்கண் பார்வையாலே எமதன்புக் காதலா! [ஶ்ரீம.பா. 10.31.3] யமுனையின் […]