சுலோச்சனா அருண் நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வுதான் ‘சூம்’ என்று சொல்லப்படுகின்ற மெய்நிகர் நிகழ்வாகும். பல்வேறு நாடுகளில் இருந்தும், பலரும் பங்கு பற்றக்கூடியதாகவும் இது அமைக்கப்பட்டிருக்கின்றது. சென்ற சனிக்கிழமை யூன் 15 ஆம் திகதி இலக்கியவெளி குழுவினர் சர்வதேச ரீதியாக இலக்கியம் சார்ந்து நடத்திய மெய் நிகர் நிகழ்வு ஒன்று இடம் பெற்றிருந்தது. கோவிட் காரணமாக வெளிவராத நூல்கள் பற்றிய திறனாய்வுகளும், கருத்துப் பரிமாற்றங்களும் கனடிய தமிழ் இலக்கியத்தின் துரித வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இந்த […]
Dr. ரமேஷ் தங்கமணி MSc., PhD., SLET யோகா என்றால் என்ன?யோகா என்ற சொல் சம்ஸ்கிருத சொல்லான “யுஜ்” என்பதிலிருந்து உருவானது, இதன் விளக்கம் இணைப்பது அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. இது தவிர யோகா என்ற பதத்திற்கு “சங்கமம்” அல்லது “ஒன்று கலத்தல்” என்ற பொருளும் உண்டு. உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. இலக்கின்றி அலையும் மானுட வாழ்வில் இலக்கை நிர்ணயித்து சேர வேண்டிய இலக்கில் கொண்டு போய்ச் சேர்க்க யோகா ஒரு […]
நிழலாடும் நுரைமங்கள். தேநீரின்உறிஞ்சு சுகத்திற்கிடையில்மீளும்இந்நினைவினைவானொலியில்ஒலித்தபாடல் தான்மீளருவாக்கியதுஆற்றில்குளிக்க வந்தஇவ்வேளையில்.அநேக கற்பிதங்களில்ஆட்பட்டுக்கிடந்தஅன்றைய நாளில் பார்வைகளைத்தவிரபெரிதாகபரிமாறியதில்லைகாதலில்கசிந்துருகினாலும்.கையொடியகாலையில்கடலை கொல்லைக்கு தண்ணீர் இறைத்ததுகண நேரம் தரிசனம்கண்டுவிடத்தான்என்பதைமுதல் வகுப்பில்வாங்கும்பிரம்படியின்போதானவேதனை தாழாதுதுடித்தழும் உன்முக வாடல்நிழலாடுகிறதுநீ சென்ற பாதையைபார்த்தவாறுஇப்பொழுதும். வறுமையின் கோலமெனவருந்தினார்கள்எனக்கெனவெனஅறியாத அநேகர்கள்ஆறு நாளும்அதே பாவாடை தாவாணியில்வருவதைவாஞ்சையுடன்நினைத்து.சிதிலமடைந்த படித்துறையில்முத்தமிடும் பெயர்களின்முதலெழுத்து அணுக்கம்தவிரவேறெதுவும் நடக்கவில்லைகாதலில்கண்ணியம் கொண்டதனால்.தனித்தோடி தலைமறைவாகவாழ்ந்துசுயாதீன காதலெனசுடரொளி காட்டி இருக்கலாம்தான்படி தாண்டாதவாழ்க்கையை பழகித் தொலைக்காமல்இருந்தாலெனமருகுகிறதுமனம்தாமிரபரணியில்தலைமுழுகவரும்பொழுதெல்லாம்தவிப்பாககரையேற முடியாமல்மூழ்கி. மீட்டலின் பொருட்டான கரிசனம். மறு கன்னத்தைதிருப்பிக்காட்டாதபொழுதுபரிவுகளை பேசுவதுபயனற்றதுபுரிதல் நிகழ்வதற்கு முன்னால்.கவனம் பெறுவதற்காககாட்டப்படும்கன்னமெனகடிந்தாலும் சிவந்து கொண்டேஇருக்கிறதுசெய்வதறியாதுஅன்றாடம்மேலதிக நம்பிக்கைகள் கொண்டு.நீங்கள்சிந்தை கலங்கியவனெனசொன்னாலும்புரியுமொருகணத்திற்கானகாத்திருப்பெனஅறியும் பொழுதுவழியும்கண்ணீர் துடைக்காமல்வெகு […]
சசிகலா – விஸ்வநாதன் அந்தி சாயும் நேரம் தேநீர் கோப்பை கையில் எதிரே நாற்புறமும் வரிசை கட்டி நிற்கும் பச்சையும் நீலமும் ஊதாவும் பழுப்பிலும் மலைத் தொடர் மடிப்பு; விரிந்த நீல வானில் வெண் பனிக்கட்டிகள் வெண் மஞ்சு மஞ்சம். மெல்ல மெல்ல கதிரவன் கீழே இறங்க; மென் காற்று அலை; மேனி சிலிர்த்தது. சாரல் மழையில்; வானில் வில் ஒன்று தோன்றி மறைவதற்குள்; துணை வானவில். கண்மூடி திறப்பதற்குள்; கண் முன்னே ஒரு அற்புதம்! காணுதல் […]
வெங்கடேசன் நாராயணஸ்வாமி கம்பன் சொல்லுகிறார்…. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகிலா விளையாட்டு உடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே நம்மாழ்வார் சொல்லுகிறார்: துன்பமும் இன்பமுமாகிய செய்வினையா யுலகங்களுமாய், இன்பமில் வெந்நரகாகி இனியநல்வான் சுவர்க்கங்களுமாய், மன்பல்லுயிர்களுமாகிப் பலபல மாய மயக்குகளால், இன்புரும் இவ்விளையாட்டுடையானைப் பெற்றேதுமல்லலிலனே. படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூவகை அருந்தொழில் பரமனுக்கு மிக மிக எளிது என்பதை ‘விளையாட்டு’ என்ற சொல்லாட்சி குறிக்கிறது. ‘காத்தும் படைத்தும் கரந்தும் […]
ஆ.மீனாட்சி சுந்தரமூர்த்தி இருள் அப்போதுதான் விலக ஆரம்பித்திருந்தது. வாசு போர்வையை நன்றாகஇழுத்து முகத்தை மூடிக் கொண்டான். மார்கழி மாதக் குளிருக்கு சுகமான தூக்கம்தொடர்ந்தது. வள்ளி கதவைத் திறந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வந்து திண்ணையில் உறங்கிக் கிடந்த முனியனைப் பார்த்தாள். வெறுப்பு முகத்தில் தொற்றியது.வாசல் தெளித்து கோலமிட்டு நிமிர்ந்தாள்.வேப்ப மரத்தடியில் நின்றிருந்த ஆட்டோவில் பாட்டிலும், குப்பம்மா கிழவியிடம் வாங்கிவந்து தின்றது போக மீதமிருந்த மிளகாய் பஜ்ஜிகளும் சிதறிக் கிடந்தன. பக்கத்து வீட்டுநாய் பின்புற இருக்கையில் சுருண்டிருந்தது. […]
சசிகலா விஸ்வநாதன் பத்மநாபன் நன்றாய் தூங்கி கண்விழிக்கும்போதுதான் நினவில் வந்தது;சங்கேஸ்வரி, சிறு மனஸ்தாபத்தில், பிறந்தகம் போயிருப்பது. ஆஹா! இன்று விடுமுறை நாள் என்று நினைப்பே வெறுப்பாய் இருந்தது. வாயில் கதவைத் திறந்து செய்தி தாளை எடுப்பதற்குள், வெள்ளை பூனை ஒன்று உள்ளே வந்து மிக உரிமையாக சாப்பாட்டு மேசை மேல் தாவி உட்கார்ந்தது. காபி அருந்தும் வேளையில் பூனைக்கும் ஒரு தட்டில் […]
வெங்கடேசன் நாராயணசாமிஇது ஏற்கனவே நடந்திருக்கிறது.முன்னமே உங்களை அறிந்திருக்கிறேன்.ஏதோவோர் மதுரை ஞாபகம் போல்எங்கேயோ பார்த்துப் பழகின பேசிய ஞாபகம்!எல்லாமே அனுபவித்ததாய்த்தான் தெரிகிறது. புதிதாக ஒன்றும் இல்லை. காலம் இவ்வுலகை பட்சணமாய்த் திண்கிறது.ஓட்டைக் குடத்தில் ஒழுகும் நீர்போல்நொடிகள் போய்க்கொண்டிருக்கின்றன.காலம் உண்ணும் இவ்வாழ்க்கையைக்காலாதீதன் நான் கூறுகிறேன்!கோடி பிரம்மாக்களை உண்டுவிட்டேன்.எத்தனை தடவை இராமாவதாரம் கிருஷ்ணாவதாரம் நடந்தாயிற்று! பார்த்தாயிற்று!எத்தனை தடவை கிருஷ்ணன் அர்ஜுனனுக்குகீதோபதேஶம் செய்தாயிற்று! எத்தனையெத்தனை தேவதைகள் அஸுரர்கள் மானுடர்கள் தாவர-ஜங்கமங்களனைத்தையும்,எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டேன்.எத்தனையெத்தனை மஹாப் பிரளயங்கள்,எத்தனையெத்தனை மஹா ஸ்ருஷ்டிகள்,எத்தனையெத்தனை மஹா ஸ்திதிகள்!காலம் வாழ்க்கையை […]
முருகபூபதி Preview attachment வ. ந. கிரிதரனின் கதைத் தொகுப்பு.jpg Preview attachment வ.ந. கிரிதரன்.jpg வாசிப்பு அனுபவம், ஆளாளுக்கு வேறுபடும். ஒரு எழுத்தாளரின் புனைவு இலக்கியப் படைப்பினைப் பற்றி, சாதாரண வாசகர் கொண்டிருக்கும் ரசனைக்கும், மற்றும் ஒரு எழுத்தாளர் வைத்திருக்கும் பார்வைக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.கனடாவில் வதியும் வ. ந. கிரிதரனின் கதைத் தொகுதியான கட்டடக்கா( கூ) ட்டு முயல்கள் நூலை நான் படித்தபோது, வாசகர் மனநிலையிலும், படைப்பாளி மனவுணர்வுடனும்தான் படிக்க நேர்ந்தது.சரியாக ஓராண்டுக்கு […]
கே.எஸ்.சுதாகர் அற்புதமான புத்தகத்தின் தலைப்பு. இலங்கையின் தமிழ் மொழிபெயர்ப்புகள்கிழக்கினை எதிர்கொண்டு காத்திருக்கும் வேளையில், சமீபத்தில் சில புதியமுயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவற்றில் ஒரு ஒளிக்கீற்றாககெகிறாவ ஸுலைஹாவின் இந்தப் புத்தகம் விளங்குகின்றது.ஜீவநதி வெளியீடாக, 2020 இல் வெளிவந்த இந்தப் புத்தகத்தில் மொத்தம் 16சிறுகதைகள் இருக்கின்றன. கெகிறாவ ஸுலைஹா அவர்கள் தான் வாசித்தபடைப்புகளில் சிறப்பானது எனத் தெரிவு செய்து மொழிபெயர்த்திருக்கும் இந்தப் படைப்புகள் ஜீவநதி, ஞானம் சஞ்சிகைகளில் வெளியானவை.பின் இணைப்பாக தொகுப்பில் வந்த கதைகளின் எழுத்தாளர்கள் பற்றியதகவல்களையும் ஆசிரியர் இணைத்திருப்பதன் […]