author

நங்கூரம் 1

This entry is part 1 of 8 in the series 24 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா கவிதை எழுதுதல் எனது நங்கூரம் என நம்பி இருந்தேன் திடீரென புரிந்தது இன்று அது அப்படி இல்லை என்று கடலில் ஆடிக் கொண்டிருக்கும்  ஓட்டைப் படகு மூழ்காமலிருக்க அதில் நிரம்பும் நீரை வெளியே கொட்டுவதைப் போல் நான்  செய்து கொண்டிருக்கும் சுய பாதுகாப்பு பணி அது என்று தேட வேண்டும் எனக்கான நங்கூரத்தை இனிமேல் தான்

பிரம்ம சாமுண்டீஸ்வரி சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

This entry is part 2 of 2 in the series 17 செப்டம்பர் 2023

சுலோச்சனா அருண் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், பரிசளிப்பு விழாவும் சென்னை காந்தி மண்டபச் சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் யூலை 27 ஆம் திகதி 2023 மாலை 6:00 மணிக்கு, முனைவர் வவேசு அவர்களின் தலைமையில் ஆரம்பமாகிச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அவர்களும், மற்றும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலரும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். 2022 யூலை தொடக்கம் 2023 யூன் மாதம் வரை சர்வதேசத் தமிழ் […]

கோடை மழை 2

This entry is part 2 of 6 in the series 3 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா ‘சடசட’ வென்று பெய்து நிற்கிறது கோடை மழைபால்கனியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்வெளிச் சுவற்றில் பட்டுகைமேல் தெறிக்கும்தண்துளி சுடுகிறதுசிறு வயதில்பின் கட்டில் இருக்கும் அம்மாவுக்குத் தெரியாமல்முற்ற மழையில் தலை நனைத்துஅம்மா வருவதற்குள்அண்ணனும் நானும்ஒருவர் தலையை மற்றவர் துவட்டி விட்டுசாதுவாகஅம்மா தரும் சுக்கு கஷாயத்தைகுடித்த ஞாபகத்தில்எரிகிறதுதொண்டைஎரிகிறதுமனம்கைபேசியில் கூடபிறந்த நாள் வாழ்த்து கூறாத அண்ணனை‌ எண்ணிஅறிவுஜீவி அண்ணனுக்குஇதிலெல்லாம் நம்பிக்கையில்லையெனகணவனிடம் சாக்குச் சொன்னாலும்

கோடை மழை 1

This entry is part 1 of 6 in the series 3 செப்டம்பர் 2023

ஆர் வத்ஸலா மழைக்கென்ன!வருகிறதுஅதன் இஷ்டம் போல்நிலத்தின் தேவையைப் பற்றி எள்ளளவும் கவலைப்படாமல்காணாமல் போவதும்அதே இலக்கணப்படி தான் அவனைப் போலவே – பொங்கி வழிகிறதுஎன் கோபம்தன்மானம் தொலைத்தநிலத்தின் மீது

நிலா

This entry is part 1 of 5 in the series 27 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலாநிலவைத் தொட்ட மணித்துளியைசிறைப்படுத்தி காட்டியதுதொலைக்காட்சிசிறு வயதில் நிலாச்சோறு தின்றதைஅசை போட்டார்அப்பாசோஃபாவில் சாய்ந்தபடிகைகொட்டி கொண்டாடினான்மகன்‘பாப்கார்ன்’ தின்று‘கோக்’ குடித்தபடி“அம்மா, பசிக்குது” என்றான்நடைபாதையில் உறங்கி எழுந்தசிறுவன்நீரற்ற கண்களுடன்நிலவை வெறித்தாள்பாப்பம்மா

மழையுதிர் காலம்

This entry is part 5 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நாள் காட்டியில் அக்னி நட்சத்திரத்தின் முடிவை பற்றின தீர்மானங்களை வெயில் கன்னி ஒதுக்குவதை போல் தினசரியில் தொலைகாட்சியில் வானொலியில் தோன்றும் நிபுணர்கள் மழை பெய்யும் சாத்தியத்தை பற்றிய முன்னறிவுப்புகளை அலட்சியமாக ஒதுக்கும் வானம் நனைய ஆசைப் படும் குழந்தைகளிடம்  கருணை கொண்டு கொஞ்சம் மழையை உதிர்த்து விட்டுப் போகிறது தானாக  சில சமயங்களில்

மழை

This entry is part 6 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா  கொட்டுகிறது எனது பால்கனியில் மழை வெளியில் துருத்திக் கொண்டிருக்கும்  ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் மீது செல்லம் கொஞ்சிக் கொண்டு பாவம்! தெரியும்  அதற்கும் காலம் கடந்த பின்  அன்பை மதிக்கத் தெரியாதவர் மேல் அன்பை சொரிவது தன்மானத்திற்கிழுக்கென்று 

நாட்டுப்பற்று 1

This entry is part 7 of 11 in the series 13 ஆகஸ்ட் 2023

ஆர் வத்ஸலா நிறமிழந்த ‘பாலிஸ்டர்’ சட்டை அணிந்த அவன் அந்த இடத்தை பெருக்கி சுத்தம் செய்தான் அடுக்கியிருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளை பிரித்துப் போட்டான் எல்லோரும் நல்லாடைகளில் கூடிய பின் சிறுகொடியும் குண்டூசியும் தந்து  தானும் ஒன்று குத்திக் கொண்டான் பெருமையுடன் புதுக் கதர் சட்டை அணிந்திருந்த குடியிருப்பு சங்கத்தின் காரியதரிசிக்கு   கடைசி நிமிடத்தில் தான் சாக்லெட் பாக்கெட் எடுத்து வர மறந்தது நினைவுக்கு வர   ஓடினான் இவன் நிலவறையிலிருந்த  சங்க அலுவலகத்திற்கு  திரும்பு முன்  முடிந்துவிட்டிருந்தது  கொடியேற்றம் […]