author

அழிவுகள்

This entry is part 2 of 7 in the series 25 ஆகஸ்ட் 2024

அமீதம்மாள் வெட்டுக்கிளிக் கூட்டம்சிட்டுக்குருவியைத்தின்றுவிட்டனநெகிழி ஆப்பிள்கள்அசல் ஆப்பிளைஅழித்துவிட்டதுகற்பூரத்தில்கருவாட்டின் வாசம்பாலையும் இரத்தத்தையும்மென்பொருள்செய்கிறதுசெயற்கை நுண்ணறிவுநெய்த ஆடைநிர்வானம் மூடவில்லைபுணர்தலின்றிபிள்ளை குட்டிகள்ஊடகங்களில்பொய்களுக்கேபூமாலைகடல்களுக்குமேய்ச்சல் நிலமாய்பூமிமண்ணை வெல்லமனிதக் கொலைகள்விவசாய நிலங்களில்வெடிகுண்டு விதைகள்பற்றி எரிகிறதுமொத்தக்காடும்உதிக்கிறது சாம்பலில்புதிய காடுஅமீதாம்மாள்

அங்காடி வண்டி

This entry is part 1 of 3 in the series 11 ஆகஸ்ட் 2024

அங்காடி வண்டியை வீட்டுக்குத் தள்ளிவந்து வீதியில் விட்டேன் வெயிலில் மழையில் பனியில் கிடந்தது துரு தின்றது குப்பைகள் கொண்டது காலவீச்சில் அதன் கால்கள் முறிந்தது வண்டிக்கும் வலியுண்டோ? என்னால்தான் இக்கதி தப்புதான் வண்டியே மன்னிப்பாயா? வண்டி சொன்னது தொழுது வாழ்ந்தேன் இன்று தொழுநோய் கொண்டேன் சித்திரமாயிருந்தேன் சிதைத்தாய் என் சாபம் தொடரும் தர்மம் தண்டிக்கும் நீ தீயில் முகம் கழுவும் தேதிக்குக் காத்திரு அமீதாம்மாள்

செடி

This entry is part 1 of 3 in the series 4 ஆகஸ்ட் 2024

அந்தச் செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது நானோ அதைக் கிள்ளிப் பறித்து மகிழ்ந்தேன் அதன் கவலையோ கண்ணீரோ வலியோ நான் அறியேன் அடுத்தநாள் அதே செடியின் புதிய துளிர் எனைப் பார்த்து புன்னகைத்தது அமீதாம்மாள்

குடும்பம்

This entry is part 5 of 5 in the series 21 ஜூலை 2024

தோப்பின் நடுவே ஒரு செல்ல மரம் அணில்கள் குருவிகள் பூச்சிகள் வாழ்த்தின கும்மியடித்தன குறுஞ்செடிகள் ஆரத்தி சுற்றின மற்ற மரங்கள் செல்ல மரத்தின் பூக்கள் சிரித்ததில் சுரந்த தேனை வண்டுகள் மேய்ந்தன வழிந்த தேனை எறும்புகள் செரித்தன-அதன் பிள்ளை பேரர்கள் காடுகள் வளர்த்ததில் மழைகள் வாழ்த்தின ஒரு பொட்டல் வெளியில் தனிமரம் ஒன்று ஒத்தையாய் நின்று ஒத்தையாய்  செத்தது அமீதாம்மாள்

மரம்

This entry is part 1 of 10 in the series 14 ஜுலை 2024

எந்த மரத்திலோ எந்தப் பூவும்பூச்சியும் முயங்கியதில் இந்தக் கனியோ அந்தக் கனியை எந்தக் காக்கையோ கொத்தி விழுங்கி கழித்த மலத்தில் விழித்த விதையில் முளைத்து வந்ததோ இந்த மரம் உயிர்களுக்கு வீடாய் குடை நிழலாய் அடடா! மரம் அறியும் எங்கிருந்து எப்படி ஏன் வந்தோமென்று அமீதாம்மாள்

கவலையில்லை

This entry is part 3 of 6 in the series 16 ஜூன் 2024

வேண்டும்போதுதண்ணீருண்டுமரத்துக்குக்கவலையில்லைமக்கியதுமண்ணிலுண்டுபுழுக்களுக்குக்கவலையில்லைபசிக்கும்போதுமான்களுண்டுபுலிகளுக்குக்கவலையில்லைதேடும்போதுகனிகளுண்டுகிளிகளுக்குக்கவலையில்லைஈனுவதுபால் தரும்குட்டிகளுக்குக்கவலையில்லைபுழுக்களைப் பூச்சி தின்னும்பூச்சிகளைத் தவளை தின்னும்தவளைகளைப் பாம்பு தின்னும்பாம்புகளைக் கருடன் தின்னும்கருடனை மண் தின்னும்எது எதைத் தின்றும்எதுவும் அழியவில்லைஎதற்கும் கவலையில்லைஎன்னில் முளைப்பதும்எனக்குள் கிடப்பதும்என்னுடையதல்ல வென்றமண்ணுக்கும்கவலையில்லைகொண்டுவந்த தொன்றுமிலைகொண்டுசெல்வ தொன்றுமில்லைஉணர்ந்தால் போதும்ஒருபோதும் கவலையில்லைஅமீதாம்மாள்

பசியாறலாமா?

This entry is part 3 of 7 in the series 9 ஜூன் 2024

அமீதாம்மாள் இட்லி வேணுமா?தோசை வேணுமா?தயாரா இருக்குமாக்கி நூடுல்ஸ்கேவூர் கூழ்உடனே தரலாம்நேத்து வாங்கியசப்பாத்தி, பரோட்டாஉப்புமா, இடியப்பம்எல்லாம் திடீர் வகைகள்வேணுமா?அட! மறந்துட்டேன்பழசு புடிக்குமேதண்ணிவிட்ட சோறுதயிர், கருவாடு தரவா?சொல்லுங்கஎன்ன வேணும்?யோசித்துக்கொண்டேதொலைக்காட்சியைப்பார்க்கிறேன்ரொட்டிஎதிர்பார்த்து……ஒட்டிய வயிறோடு…..ஆயிரமாயிரம்அகதிகள்அமீதாம்மாள்

பேருந்து நிறுத்தம்

This entry is part 4 of 6 in the series 2 ஜூன் 2024

பள்ளிப் பருவமாய் இனிக்கும் அந்தப் பேருந்து நிறுத்தம் அருகில்தான் மகள் வீடு மகளைப் பார்த்தபின் என் மனை செல்லும் பேருந்து அங்குதான் நிற்கும் அங்கு…. ஒற்றுத்தாள் விற்கும் பாட்டி சிநேகமாய்ச் சிரிப்பார் இரண்டுவெள்ளி தருவேன் செவன்லெவன் கடையின் சிப்பந்திப்பெண் என் ஊர் ஊரின் மழைவெயில் விசாரிப்பேன் உணவுக்கடையில்  நம் பையன் பரோட்டாசுழற்றுவதில் பேருந்தை மறப்பேன் சிவப்பு மனிதன் முன் பெருஞ்சாலை கடக்கும் பெரிசுகள் பார்த்துத் திகைப்பேன் என் நேரம் அங்கு இரவு 8 மணி ‘நல்லா யிருக்கீங்களாண்ணே’ […]

என் பெயர்

This entry is part 7 of 8 in the series 4 ஏப்ரல் 2024

அமீதாம்மாள் எனக்குள்இன்னொரு உயிர்பேசுகிறதுபேசுகிறேன்அழுகிறதுஅழுகிறேன்சிரிக்கிறதுசிரிக்கிறேன்மௌனிக்கிறதுமௌனிக்கிறேன்வெளியேஎவர் பேசுவதும்எனக்குப் புரிவதில்லைநான் பேசுவதும்எவர்க்கும் புரிவதில்லைஅந்த இன்னொருஉயிரைத் தவிர

பயணம்

This entry is part 1 of 1 in the series 31 டிசம்பர் 2023

என் பயணத்தில் என்னைக் கடக்கும்  வாகனங்கள் பல நான் கடக்கும்  வாகனங்களும் பல அவரவர்களுக்கு  அவரவர் இலக்கு விதிகள் மீறாதவரை விபத்துகள் இல்லை