Articles Posted by the Author:

 • சிதறல்கள்

  சிதறல்கள்

  சாவிகளெல்லாம் வைத்துப் பூட்டிய சாவி தொலைந்துவிட்டது   நான் சொல்வதை மின்தூக்கி மட்டுமே கேட்கிறது   ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆண்களுக்கு சரி பெண்களுக்கு?   மரம் மண்ணுக்கு சம்பளம் தரவே இலையுதிர் பருவத்தில்   பச்சத்தண்ணியானால் பத்திரமாய் இருக்கலாம கொதித்தால் தொலைவாய்   தொட்டிச் செடிக்கு தொட்டிதான் பூமி   அழகாய் அமையாது வாழ்க்கை அமைவதை அழகாக்குவதே வாழ்க்கை   மாத்திரை மருந்துகள் துளித்துளியாய்க் கொல்லும்   ரத்தம் இப்போது சந்தையில் கிடைக்கிறது   முளைக்கும்வரைதான் […]


 • என்னெப் பெத்த ராசா

  என்னெப் பெத்த ராசா

    அன்னையர் தினக் கவிதை     கனவு வண்ணங்களை கண்ணீரில் குலைத்து கருப்பையில் என்னை எழுதினாய்   என் சுருதிக்கு நரம்புகளை மீட்டி இசை கூட்டினாய்   உன் சொற்களால் என்னைப் பேசவைத்தாய்   துளி எனைத் தந்த நதியே ‘என்னப்பெத்த ராசா’ என்று என்னை நதியாக்கி நீ துளியானதில் தியாகம் அர்த்தம் பெற்றது   தூளியின் தூக்கத்தில் கைபிசைந்த அமுதில் பொய்யாகிப் போயின என் எல்லா சுகங்களும்   என் தாகங்கள் என் பசிகள் […]


 • சம்பூர்ணம்

  சம்பூர்ணம்

        மூத்த குடிமகன் நான் முக்கால் நூறு என் வயது   ஆமையாய் நகர்ந்தே முயல்களை வென்றேன்   வாடிவாடி வதங்கி மறுமழையில் துளிர்த்தேன்   என் வேர்களை இங்கு எவரும் அறியார்   தேரை என்னைத் தேவன் மறந்ததில்லை   சிற்பமும் தெரியும் சிலந்திவலை நுட்பமும் புரியும்   கானல் நீரும் தெரியும் கார்மேகமும் புரியும்   மின்மினி நான் ஒளிக்க ஒன்றுமில்லை   பால் வடிக்கும் கள்ளிகள் பசுவல்ல அறிந்தேன்   […]


 • அவனை எழுப்பாதீர்கள்

  அவனை எழுப்பாதீர்கள்

          தீ விழியை சாம்பல் இமைகள் தழுவிவிட்டன   தொடர்பற்ற தொலைக்காட்சித் திரையின் புள்ளிக்கூட்ட நினைவுகள் ஓய்ந்துவிட்டன   கனவுப்புகை உருவங்கள் எழுந்தன விழுந்தன   நாட்காட்டி ஆயுளை வாழ்க்கை கிழிப்பது கொஞ்சம் தூக்கம் கிழிப்பது மிச்சம்   தோற்றது தொலைத்தது துடித்தது என காயம்பட்ட இதயத்தை ஆறப்போடும் தூக்கம்   ஆதாம் முதல் அனைவருக்கும் தூக்கம் பொது தூக்கத்திற்கில்லை ‘நான்,நீ’   வாழ்க்கைத் தேர்வை தூங்கி எழுந்து எழுதினான் வென்றான் எழுதும்போது […]


 • உரையாடல்

  உரையாடல்

      பசியாற இட்லி,தோசை? சட்னிக்கு ஒன்றும் இல்லை   உப்புமா, பொங்கல்? ரவா நெய் இல்லை   வரகுக்கூழ்? வரகு இல்லை   மேகி மீ நூடுல்ஸ்? வாங்கவேண்டும்   ஓட்ஸ்? வாங்கவேண்டும்   ரொட்டி? காலாவதி   பழையது? தயிர் இல்லை   ஆச்சி கடை இட்லி? இப்போது 8, திறப்பது 9   தேக்கா சந்தையில் தேவைகள் வாங்கினால் உண்டு   இப்போதே 8. கூட்டம் 8.30 தாமதமாகுமே பேச்சாளனே நான்தான்   […]


 • தீபாவளிக் கவிதை

  தீபாவளிக் கவிதை

      பத்துக்குப்பத்து   பேத்தியாக… மகளாக… தாயாக… இன்று  பாட்டியாக… என் நான்கு தலைமுறைத் தீபாவளிகள்   அன்று பேத்தியாக நான் என் கிராமத்தில் …   ஒரு தீபாவளியில் என் பாட்டி…. மண்டிக்குளக் கரைகளில் மண்டிய  மருதாணி பறித்து அம்மியில் அரைத்து நான் தூங்கையில் பூசுவாள் மறுதாள்…. கைச்சிவப்புக் காட்டி கன்னம் பதிப்பாள்   சேக்ராவுத்தர் குளத்தில் செக்கெண்ணை தேய்த்து குளிப்பாட்டுவாள்   தையல்காரனைத் துரத்தித் துரத்தித் தைக்கவைத்த    பாவாடை சட்டையை அணிவித்து […]


 • அறியாமை

  அறியாமை

      குருவிவீடு நாமேயென்று கூலம் அறியாது   வண்ணம் நமக்குள்ளென்று வெள்ளை அறியாது   தின்றமீதி கழுகுக்கென்று புலிகள் அறியாது   தன்வீடு பாம்புக்கென்று கறையான் அறியாது   மண்ணுக்குயிர் தாமுமென்று மண்புழு அறியாது   தன் எச்சம் விருச்சமென்று காகம் அறியாது   தன்மூச்சு உயிர்க்காற்றென்று செடிகள் அறியாது   விபூதி நாம்தானென்று சானம் அறியாது   தாகம் தணிப்போமென்று மழை அறியாது   எறும்புக்கு நிழலென்று இலைகள் அறியாது   பாலுக்கே நாமென்று […]


 • கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்

  கீறிக்கீறி உழுகிறோம் உண்கிறோம்

          கருப்புக் கூட்டில் இருட்டில் கிடக்கிறது அத்தாவின் மூக்குக்கண்ணாடி   அவர் சுவாசத்தைத் தொலைத்தது காற்று   அத்தா மேசையில் புத்தகத்துக்குள் மல்லாந்து கிடக்கும் மூச்சடங்கிய கடிகாரம் பக்க அடையாளமோ?   பக்கம் 73 கடைசிச் சொற்கள் ‘போய் வரவா?’   கிழிக்க வேண்டிய தாளுடன் அத்தாவின் நாட்காட்டி அதில் அத்தாவின் எழுத்து ‘பாட்டரி மாத்தணும்’   அத்தாவைத் தொட்டுத் தொட்டு வாழ்ந்த கைத்துண்டு, சாவிக் கொத்து கைபனியன், சட்டை சோப்பு, சீப்பு, […]


 • என் மகள்

    மறுபடியும் எனக்கு பெயர் சூட்டுவிழா ‘அப்பா’ என்று நீ வைத்த பெயரை தைத்துக் கொண்டேன்   என் கன்ன மரு உன் கன்னத்தில்   மயில்குஞ்சாய் என் தோள் முழுதும் நீ   சிநேகித்தன சிட்டுக் குருவிகள்   உன் பிஞ்சு நடை புற்களுக்கு ஒத்தடமிட்டன பனித்துளிகள் பாதம் கழுவின   நீ எழுதிய ‘அஆ’ பூக்கள் தூவின தமிழுக்கு   இரவுகளில் நீ படுக்கை நனைப்பது எனக்கு பன்னீர் ஆனது   என் பெயர் […]


 • தந்தையர் தினம்

    எந்தையும் தாயுமென்று தந்தையை முன் வைத்தான் சங்கப் புலவன்   கருவுக்குத் தந்தை காரணமானதால் கடைசி மூச்சிலும் காவலன் ஆனான்   மனைவி மக்கள் இளம் சூட்டில் இதமாய்க் குளிக்க இவன் வியர்வையில் குளிப்பான்   உயர்வுகள் பகிர்வான் குடும்பம் உழல்வது சகியான்   எண்ணெய்க்கும் நெருப்புக்கு மிடையே திரியாய் எரிவான்   விழிக்கும் ஒளிக்கு மிடையே இமையாய்க் கிடப்பான்   வில்லுக்கும் அம்புக்கு மிடையே விசையாய் இருப்பான்   மூழ்கியே செத்தாலும் குடும்பம் மூழ்காமல் […]