author

ஒரு தாதியின் கதை

This entry is part 20 of 28 in the series 5 மே 2013

  புரையோடிய புண்ணையும் புன்னகையால் கழுவி களிம்பிட்டுக் கட்டுவார்   ஆறேழு நாளில் ஆறிவிடு மென்று நம்பிக்கை விதைப்பார் நலம் கூட்டுவார்   அந்த மருத்துவ மனையில் புண்ணாற்றும் பிரிவில் இது பதினேழாம் ஆண்டு அந்தத் தாதிக்கு   ஒரு நாள் அவர் குடும்பம் பற்றிக் கேட்டேன்   ‘பல்கலையில் மகனாம் உயர்நிலையில் மகளாம் அப்பா முகமே அறியாராம் அவர் எங்கேயோ யாரோடோ’ என்றார்   ‘இரண்டு சிறகுகள் இயற்கையம்மா இணைந்து வாழுங்கள்’ என்றேன்   அவர் […]

பணிவிடை

This entry is part 14 of 31 in the series 7 ஏப்ரல் 2013

காலையும் மாலையும் செல்ல நாயோடுதான் சிறு நடை வார்ப் பட்டை ஒரு கையில் கழிந்தால் கலைய ஒற்றுத் தாட்கள் மறு கையில் அந்த ‘இனிய’ பணிவிடையில் அலாதி இன்பம் அம்மாவுக்கு ஆனால் பெற்ற குழந்தைக்கு ‘பெம்பர்ஸ்’ கலைவது எப்போதுமே பணிப் பெண்தான் அமீதாம்மாள்

தண்டனை யாருக்கு?

This entry is part 19 of 26 in the series 30 டிசம்பர் 2012

14 டிசம்பர் 2012ல் நியூயார்க்கில் நியூடவுன் நகரில் சாண்டி ஹூக் பள்ளியில் 27 குழந்தைகள் சுட்டுக் கொலை. இது செய்தி. இனித் தொடருங்கள் அறிவு பெருக்கு மிடத்தில் குருதிப் பெருக்கு குறுத்துக்கள் 27 குருதிச் சேற்றில் இனி குண்டு துளைக்காக் கவசங்கள் குழந்தை உடையாகலாம் வகுப்பறைகள் வழக் கொழியலாம் அரிசி அளவு மென் பொருளே ஆசிரிய ராகலாம் ‘பள்ளிக் கூடம்’ ‘பள்ளித் தோழன்’ போன்ற சொற்கள் அகராதியி லிருந்து அகற்றப் படலாம் கொலை யாளியே தன்னைக் கொன்று […]

காதல் அன்றும் இன்றும்

This entry is part 21 of 42 in the series 25 நவம்பர் 2012

ஆயிரம் முகில்கள் கடக்கும் – ஆனால் ஒன்றுதான் மழையை இறக்கும் ஆயிரம் பார்வைகள் தொடுக்கும் – ஆனால் ஒன்றுதான் காதலைப் பதிக்கும் சிக்கி முக்கியாய் உரசும் அந்தத் தீப்பொறியில் காதல் உயிர்க்கும் மின்னல் ஒன்று சொடுக்கும் காதல் மின்சாரம் உடம்பெங்கும் நிறைக்கும் ஆயிரங் காலத்துப் பயிராய்க் காதல் கழனியெலாம் முளைக்கட்டிச் செழிக்கும் இது அன்றையக் காதல் *********** ஒரு குறுஞ் செய்தியில் பிறக்கும் மறு குறுஞ் செய்தியில் இறக்கும் இது இன்றையக் காதல் அமீதாம்மாள்

தீபாவளியின் முகம்

This entry is part 21 of 33 in the series 11 நவம்பர் 2012

  நீலம் புயலால் தரை தட்டியிருக்கிறது வாழ்க்கைக் கப்பல்   கொஞ்சம் படுத்துக் கொள்ள பாய் தேடுகிறது உலகப் பொருளியல்   வலிகள் இவைகளுக் கிடையேதான் சுகப் பிரவேசமாய்த் தீபாவளி   ஒரு சிரிப்பை எழுதத்தான் மையாகிறது கண்ணீர்   ‘சுபம்’ சொல்லத்தான் முளைக்கிறது பிரச்சினை   ஒரு குழந்தையை எழுதிவிட்டுத்தான் எடுக்கிறது இடுப்புவலி   ‘அமைதி’ யை எழுதிவிட்டுத் தான் புறப்படுகிறது புயல்   ஆக சேருமிடம் என்றும் சுபம் அதுதான் தீபாவளியின் முகம்   […]

தபால்காரர்

This entry is part 22 of 34 in the series 28அக்டோபர் 2012

1960ல் ஆறாம் வகுப்பு நாட்கள் தண்ணீரும் தாகமுமாய்க் கலந்த நண்பனைப் பிரிகிறேன் ஈரம் சேர்த்துச் சொன்னான் ‘போய்க் கடிதம் எழுதுகிறேன்’ ஏழெட்டு நாட்களாய் என்னைக் கிழித்துப் போட்ட அந்தக் கடிதம் வந்தது இந்த நாட்களில்தான் தபால்காரர் எனக்குள் இன்னொரு இதயமானார் தொடர்ந்தன பல நட்புகள் பிரிவுகள் அடி வயிற்றில் உலை ஏற்றிய எதிர்பார்ப்புக் கடிதங்கள் அந்த நாட்களில் பகல் 12முதல் 2வரை நான் நெஞ்சைக் கிழித்தால் அங்கு தபால்காரர்தான் இருப்பார் கல்லூரி வேலை கல்யாண மெல்லாம் கடவுள் […]

6 ஆகஸ்ட் 2012

This entry is part 10 of 37 in the series 2 செப்டம்பர் 2012

    செவ்வாய் கிரகத்தைச் சதுரஅடி சதுரஅடியாய்ச் சலித்துச் சலித்துச் சொல்லி  விட்டோம்   கணினியில் ‘செவ்வாய்’ என்று தட்டினால் கொத்துக் கொத்தாய்ச் செய்திகள் இறங்கிக் ‘குறித்துக் கொள்’ என்கிறது   ஆனாலும் நாம் சும்மாவா இருக்கிறோம்?   சூரியக் குடும்பத்தில் மூன்றாம் மடியில் நாம் நான்காம் மடியில் செவ்வாய் இடையே கிடக்கும் அண்டம் கடக்க வண்டியொன்று செய்தோம் அது செவ்வாயில் இறங்கி எழுதியிருக்கிறது நம் முகவரியை   6 ஆகஸ்ட் 2012 மனித வரலாறு மறக்கமுடியாத […]

தாவரம் என் தாகம்

This entry is part 25 of 37 in the series 22 ஜூலை 2012

துவக்கப் பள்ளியில் தோட்டம் போட்டோம் நான் கத்தரி வைத்தேன் சாணமும் சாம்பலுமாய் சத்துர மிட்டேன் கண்காட்சியானது என் கத்தரிச் செடிகள் வாத்தியார் சொன்னார் ‘செடியைக் குழந்தையாய் வளர்க்கிறாய் சிறந்த தந்தையாவாய் நீ’ பத்தாம்வகுப்பில் வாத்தியார் கேட்டார் ‘பார்த்ததில் ரசித்தது எது?’ ‘பூவோடும் பிஞ்சோடும் கொஞ்சும் கத்தரிச் செடி ‘ என்றேன் ‘நீ ஒரு கவிஞனாய் வருவாய்’ என்றார் அப்பாவுக்கு அரசாங்க வேலை புதுப்புது ஊர்கள் புதுப்புது வீடுகள் எல்லாம் அடுக்கு மாடி தொட்டியில் வைத்தேன் கத்தரி காலை […]

பிடுங்கி நடுவோம்

This entry is part 16 of 43 in the series 17 ஜூன் 2012

விசாலமான வீடுகள் வினாக் குறியாய்க் குடும்பங்கள் மாமா என்கிறோம் அம்புலியை யாரோ என்கிறோம் அண்டை வீட்டாரை எல்லாரும் திறனாளிகள் எல்லாரும் பட்டதாரிகள் எல்லாரும் கடனில் அனைவர் கையிலும் அறிவுச் சாவி திறக்கத்தான் நேரமில்லை மருந்துகள் ஏராளம் நோய்கள் அதைவிட ஏராளம் ஆதாயம் தேடும் வியாபாரப் பொருள்களாய் உறவுகள் விரைவான உணவுகள் மெதுவான சீரணங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தெரிகிறார் சிரிக்கத் தெரிவதில்லை வாழும் நிலம் செத்துக் கொண்டிருக்கிறது குற்றுயிராய் மனித நேயம் வாருங்கள் வாழ்க்கையைப் பிடுங்கு நடுவோம் அமீதாம்மாள்

நச்சுச் சொல்

This entry is part 13 of 28 in the series 3 ஜூன் 2012

தர்மத்தில் கொஞ்சம் சுயநலம் குற்றமில்லை வியாபாரத்தில் கொஞ்சம் பொய் குற்றமில்லை சீரான நலத்தில் சில்லரை நோய்கள் குற்றமில்லை வளமான பயிரில் கொஞ்சம் களைகள் குற்றமில்லை களிப்பில் கொஞ்சம் கவலைகள் குற்றமில்லை விசுவாசத்தில் கொஞ்சம் விளம்பரம் குற்றமில்லை நட்பில் சில முட்கள் குற்றமில்லை நல்ல பேச்சில் ஒரு நச்சுச் சொல் சுற்றமே இல்லை வெள்ளத்தில் ஓடம் நல்ல சொல் ஓடத்துக்குள் வெள்ளம் நச்சுச் சொல் அமீதாம்மாள்